முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்ன வசதிகள் இருக்கு?

கவாஸாகி நிறுவனம் வெர்சிஸ் 650 (2022 Kawasaki Versys 650) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் புதிய அம்சமாக ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வேறு என்னவெல்லாம் சிறப்பம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

கவாஸாகி நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் பணியில் தற்போது தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக புதிய வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றது, கவாஸாகி. அந்தவகையில், சமீபத்தில் நிஞ்ஜா 400 பைக்கை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

இந்த நிலையில், இப்போது வெர்சிஸ் 650 பைக்கை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவை இரண்டிற்கும் முன்னதாக நிறுவனம் நிஞ்ஜா 300 எனும் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மூன்றாவது மாடலாக வெர்சிஸ் 650 மாடலை கவாஸாகி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

உலகளவில் இப்பைக்கின் அறிமுகத்தை 2021 நவம்பர் மாதத்தில் அரங்கேற்றியநிலையில், இப்போதே அதனை இந்திய சந்தையில் கவாஸாகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பைக்கை வெர்சிஸ் 1000 மாடலை தழுவி உருவாக்கியிருக்கின்றது, கவாஸாகி. ஆகையால், வெர்சிஸ் 650 பைக்கின் சின்ன தம்பியைப் போல் காட்சியளிக்கின்றது.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

2022 வெர்ஷனாக இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதால் கணிசமான மாற்றங்களை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, முன்பு விற்பனையில் இருந்த வெர்சிஸ் 650-யைக் காட்டிலும் புதிய வெர்ஷன் அதிக ஷார்ப்பான மாடலாக காட்சியளிக்கின்றது. இந்த தோற்றத்திற்காக சில பிரத்யேக அம்சங்களை கவாஸாகி நிறுவனம் பைக்கில் வழங்கியிருக்கின்றது.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

ட்யூவல் எல்இடி ஹெட்லேம்புகள், நான்கு விதமாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய விண்ட் ஷீல்டு, எஞ்ஜின் பகுதியில் பிரத்யேக கவர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, இன்னும் சில சிறப்பு கருவிகளும் இப்பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக புதிய ப்ளாக் டிசைன் கிராஃபிக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

இதேமாதிரியான கிராஃபிக்குகளே 2022 நிஞ்ஜா 300 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் பிரத்யேக டிராக்சன் கன்ட்ரோல், குறைவான மற்றும் அதிக வேக இயக்கத்தை வழங்கக் கூடிய இருவிதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவையும் 2022 கவாஸாகி வெர்சிஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

தொடர்ந்து, எஞ்ஜின் ஸ்விட்ச் ஆஃப் சிஸ்டம் மற்றும் முதல் முறையாக ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி டிஜிட்டல் திரை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் இணைப்பு வாயிலாகவே செல்போன் இணைப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கில் 649 சிசி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 66 எச்பி-யையும், 61 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்தகைய சூப்பரான திறன் வெளிப்பாட்டின்போது ரைடு மிகவும் சௌகரியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக சஸ்பென்ஷன்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

அட்ஜஸ்டபிள் ஷோவா சஸ்பென்ஷன்களே பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் பேந்தம் சில்வர் ஆகிய இரு விதமான நிற தேர்வுகளில் பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். இப்பைக்கிற்கு கவாஸாகி நிறுவனம் ரூ. 7.36 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

முதல் முறையாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்... இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்திருக்காங்க!

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள அட்வென்சர் ரக பைக்குகளான ட்ரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் போட்டியாக வெர்சிஸ் 650 இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 kawasaki versys 650 bike launched in india at inr 7 36 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X