புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வெளியானது புதிய பைக்... அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் ஆர்சி 390 என்ற பைக்கை அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் குறித்த விபரங்கள் மற்றும் பிற தகவல்களைக் கீழே காணுங்கள்

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அதன் தயாரிப்பை விற்பனை செய்யத் துவங்கியது முதல் இந்நிறுவனத்திற்கு என்று இந்தியர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் எல்லாம் இந்த பைக்குகளை வாங்குவதைக் கனவாக வைத்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் 2022 ஆர்சி 390 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்நிறுவனம் ஏற்கனவே 390 சிசி கேட்டகிரியில் டியூக் 390, அட்வென்சர் 390 மற்றும் ஆர்சி 390 என மூன்று பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே விற்பனையாகும் அதே ஆர்சி 390 பைக்கில் சில மாற்றங்களைச் செய்து புதிய தலைமுறை பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த புதிய தலைமுறை பைக்கில் பழைய பைக்கிலிருந்து பல ஸ்டைலிங் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய பைக்கில் முக்கிய மாற்றங்களாக சிங்கிள் பாட் எல்இடி ஹெட்லைட்,ஷார்ப்பான இன்டிகேட்டர்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. ரிவர்ஸ்டு பாடி ஒர்க், 13.7 லிட்டர் பெட்ரோல் டேங்க், மற்றும் அப்டேட் செய்யப்பட்ட இரண்டு சீட்கள் உள்ளன.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த பைக்கில் முக்கிய அம்சங்களாக முழு எல் இடி லைட்டிங் மற்றும் ப்ளுடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. கேடிஎம் ஆர்சி390 பைக்கின் சர்வதேச மாடலில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்சன் இந்த பைக்கில் இல்லை. மாறாக முன்புறம் டபிள்யூபி சோர்ஸ்டு அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறம் ப்ரீலோடு அட்ஜெஸ்டபுள் மோனா ஷாக் ஆகிய பொருத்தப்பட்டுள்ளது.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த 2022 புதிய தலைமுறை பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோல், லீன் சென்சிடிவ் ஏபிஎஸ் மற்றும் க்விக் ஸிஃப்டர், இரண்டு பக்கம் ஒரே டிஸ்கை கையாளும் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் இருண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது ஃபாக்டரி ரேசிங் ப்ளு மற்றும் கேடிஎம் எலெக்ட்ரானிக்ஆர்ஞ்ச் நிறத்திலும் விற்பனைக்கு வருகிறது.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை அதே பழைய பைக்கின் 373 சிசி ஸ்டேட் ஆஃப் ஆர்ட் லக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் DOHC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 வால்வுகள் கொண்ட இந்த இன்ஜினில் எலக்டரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் பொருத்தப்பட்டுள்ளது.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த இன்ஜின் 43.5 பிஎஸ் பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் பழைய மாடல் பைக்கை விட 40 சதவீத பெரிய ஏர்பாக்ஸ், மற்றும் டார்க்கை மேம்படுத்தும் பொருட்டு மாற்றி மேப் செய்யப்பட்ட இன்ஜின் அமைப்பு ஆகிய புதிதாக உள்ளது.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த 2022 கேடிஎம் ஆர்சி 390 பைக் ட்யூப்லர் ஸ்பிலிட்-ட்ரீலீஸ் பிரேம் புதிய இன்ஜினியரிங்கிங் போல்டில் உருவாக்கப்பட்ட ஃப்ரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் பக்க பிரேக் 320 மிமீ டிஸ்க் பிரேக் பிக் பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. Bybre டிஸ்க் பிரேக்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 2 சேனல் ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பின்பக்க ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்து கொள்ளலாம்.

புள்ளிங்கோகளுக்கு ஹேப்பி நியூஸ் . . . வெளியானது புதிய பைக் . . . அட இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா ?

இந்த புதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் 153 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்த பைக்கில் உள்ளது. சீட் 835 மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 160 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இந்த புதிய தலைமுறை ஆர்சி 390 பைக் பழைய மாடல் பைக்கை விட ரூ37 ஆயிரம் அதிகரித்து ரூ 3,13,922 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2022 ktm rc 390 bike launched in india know price and other details
Story first published: Monday, May 23, 2022, 19:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X