மிகவும் பிரபலமான பைக்கை அப்டேட் செய்த ராயல் என்பீல்டு... இப்போ என்ன பண்ணியிருக்காங்க தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan). இதன் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை, ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மாடலில் 3 புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை க்ளாசியர் ப்ளூ, ட்யூன் ப்ரவுன் மற்றும் ஸ்லீக் ப்ளாக் ஆகியவை ஆகும். இமாலய மலை தொடர்களில் காணப்படும் நிறங்களை மனதில் வைத்து, ஹிமாலயன் பைக்கில் இந்த புதிய வண்ண தேர்வுகளை ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டு வந்துள்ளது. புதிய வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

மிகவும் பிரபலமான பைக்கை அப்டேட் செய்த ராயல் என்பீல்டு... இப்போ என்ன பண்ணியிருக்காங்க தெரியுமா?

தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக், 2.16 லட்ச ரூபாய் முதல் 2.23 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட, ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இயந்திர ரீதியாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே பழைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே இன்ஜின் ஆப்ஷனைதான் ஹிமாலயன் பைக்கின் 2022 மாடலிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

அது 411 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, எஸ்ஓஹெச்சி, நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 24.3 பிஹெச்பி பவரையும் மற்றும் 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் பைக்கில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை பாதுகாப்பிற்காக வழங்குகிறது.

இந்த பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோஃபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோஷாக் சஸ்பென்ஸனும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய பிளாட்பார்மின் அடிப்படையில், 450 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பைக் அனேகமாக அடுத்த வருடம் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது புதிய சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை (Royal Enfield Super Meteor 650) பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இது தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்றாவது 650 சிசி பைக் ஆகும். ஏற்கனவே இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு 650 சிசி பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த இரண்டு பைக்குகளிலும் காணப்படும் அதே 648 சிசி இன்ஜின்தான், புதிய சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலைகள் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் எனவும், இதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கின் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இதை தொடர்ந்து 650 சிசி செக்மெண்ட்டில் இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள புல்லட் 350 பைக்கின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து இன்னும் ஏராளமான புதிய பைக்குகளை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
2022 royal enfield himalayan launched in india with new color schemes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X