இது தான் ஃபர்ஸ்ட் டைம்! ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு எதிர்பார்க்கல, ஹோண்டா செம மாஸ் காட்டிருக்கு!

வாகன் தளத்தில் உள்ள தகவலின்படி கடந்த செப்டம்பர் மாதம் ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் தான் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஹீரோ நிறுவனம் தான் முதலிடத்திலிருக்கும் நிலையில் முதன் முறையாக ஹோண்டா நிறுவனம் அந்த இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

இருசக்கர வாகன விற்பனையில் இதுவரை டாப்பான விற்பனையில் இருக்கும் நிறுவனம் ஹீரோ இந்நிறுவனத்தின் பல வாகனங்களை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் வெளியிடும் ஸ்பிளென்டர் வாகனத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் விற்பனை முறையில் ஹீரோ நிறுவனம் தான் ஒவ்வொரு மாதமும் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

கடந்த செப்டம்பர் மாதம் ஹீரோ நிறுவனம் மொத்தம் 5,19,980 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகத் தனது விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் வாகன் தளத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அறிக்கை வெளியாகியுள்ளது.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

அதன்படி கடந்த செப் மாதம் மட்டும் ஹோண்டா நிறுவனத்தின் 2.85 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோ நிறுவனத்தின் வாகனங்கள் 2.51 லட்சம் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதன் முறையாக ஹீரோ நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ஹோண்டா நிறுவனம் அதிகமான வாகனங்களைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

இதுவரை இருசக்கர வாகன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹோண்டா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய அடி என்றே சொல்லி விடலாம். ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை மக்கள் அதிகம் ரசிக்கத் துவங்கியது தான் இதற்கு முக்கியமான காரணம் குறிப்பாக ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா நிறுவனம் தான் கிங், ஆனால் பைக் விற்பனையில் பெரிய அளவில் ஹோண்டா நிறுவனத்தால் வெற்றி பெற முடியவில்லை.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

இதனால் ஹோண்டா நிறுவனம் ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக விரைவில் புதிய என்ட்ரி லெவல் பைக்கை களம் இறக்கத் தயாராகி வருகிறது. இந்த பைக் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெளியானால் மிக அதிகமான விற்பனையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

இது போக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக 125 சிசியில் புதிய ஸ்கூட்டர் ஒன்றையும் ஹோண்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது போக 160 சிசி மற்றும் 300-350 சிசி ஆகிய கேட்டகிரிகளில் தலா ஒரு பைக்கை அறிமுகப்படுத்தவும் ஹோண்டா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

ஏற்கனவே எக்ஸ்ஆர்இ 300 என்ற பைக்கை அந்நிறுவனம் இந்தியாவில் டெஸ்ட் செய்து வருகிறது. இந்த பைக் ஏற்கனவே மார்கெட்டில் உள்ள கேடிஎம் 390 அட்வெஞ்சர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பைக் தற்போது டெஸ்டிங்கிங் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. இந்த பைக் வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம்.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

இந்த பைக் இந்தியாவில் அறிமுகம் ஆகும் போது ரூ3 லட்சம் என்ற விலையில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் இந்த பைக் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. அதன்படி இந்த பைக் 291 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 25.5 பிஎச்பி பவரை 7500 ஆர்பிஎம்மிலும், 27 என்எம் டார்க் திறனை 6000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பக்கம் 245 மிமீடெலஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம்225 மிமீ ப்ரோலிங்க் மோனோ ஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 21 இன்ச் பின்பக்கம் 19 இன்ச் வயர் ஃபோர்க்டு வீல்களும், மெட்ஸீலர் என்ட்யூரோ 3 சகாரா டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் . . . ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கல . . . ஹோண்டா செமயா மாஸ் காட்டிருக்கு . . .

ஹோண்டாவின் இந்த வளர்ச்சிக்கு ஆக்டிவாவும் ஸ்கூட்டர் முக்கியமான காரணம். என்ட்ரி லெவல் ஸ்கூட்டர்களில் ஹோண்டா சிறப்பான ஒரு விற்பனையைப் பெற்று வருகிறது. இன்று முதன்முறையாக ஸ்கூட்டர் வாங்கும் பலருக்கு ஆக்டிவா தான் முதல் தேர்வாக இருக்கிறது. இருந்தாலும் வாகன் போர்டலின் படி ஹீரோவை முந்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
2022 September Honda Two Wheeler sales beat hero for the first time as per Vahan portal
Story first published: Monday, October 3, 2022, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X