இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் கார்களில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...

டிரையம் நிறுவனம் 2022 டைகர் 1200 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்தியாவில் அதிக சிசி பைக்குகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனம் டிரையம்ப். இந்த நிறுவனம் தற்போது 2022 டைகர் 1200 பைக்கை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் என்னென்ன வசதிகள் இருக்கிறது? என்ன அம்சங்கள் இருக்கிறது? காணலாம் வாருங்கள்

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

டிரையம்ப் நிறுவனம் 2022 டைகர் 1200 பைக் மொத்தம் 4 வேரியன்டில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி ஜிடி ப்ரோ, ரேலி ப்ரோ, ஜிடி எக்ஸ்ப்ளோரர், ரேலி எக்ஸ்ப்ளோரர் ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் BMW R 1250 GS, ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா, டுகாட்டி மல்டிஸ்ராடா ஆகிய பைக்களுக்கு போட்டியாக மார்கெட்டில் களம் இறங்கியுள்ளது.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்த பைக்கின் முந்தைய தலைமுறை பிஎஸ்4 இன்ஜின் உடன் விற்பனையாகியது. தற்போது இந்தியாவில் பிஎஸ் விதிகளில் படி பிஸ்6 இன்ஜினாக மாற்றப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் பழைய பைக்கிலிருந்து பெரும்பாலான மாற்றங்களைப் பெற்றுள்ளது. இதன் இன்ஜின், பிளாட்ஃபார்ம், சேசிஸ் என எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்த பைக்கில் 1,160 சிசி இன்லைன் ட்பிளில் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது T-பிளேன் கிராங்க்சாஃப்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 150 பிஎச்பி பவரையும் 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த திறன் இந்த கேட்டகிரி பைக்கில் தனித்துவமாக இருக்கிறது.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்த பைக் புதிய ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 5.5 கிலோ எடையிலிருக்கிறது. பழைய பைக்கின் பிரேமை விட இதன் எடை குறைவு தான். இந்த பைக்கில் அலுமினியம் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் இரண்டு பக்க ஸ்விங் ஆர்ம் ஷெட்களை பெற்றுள்ளது. ஒரு பக்க ஸ்விங் ஆர்ம் ஷெட் முந்தைய மாடலில் உள்ள ஸ்விங் ஆம் செட்டிலிருந்து 1.5 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பைக்கின் எடை பழைய பைக்கை விட 25 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்த 2022 டிரையம்ப் பைக் பல தொழிற்நுட்ப அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த பைக்கில் பிளைட் ஸ்பாட்களை கண்டு பிடிக்கும் ரேடார் சிஸ்டம் மற்றும் லேன் மாறுவதை எச்சரிக்கும் சிஸ்டம் உள்ளன. இது மட்டுமல்லாமல் லீன் சென்சிடிவ் கார்னர் லைட்கள், ப்ளு டூத் உடன் இணைக்ககூடிய 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஎஃப்டி டிஸ்பிளே, எலெக்ட்ரானிக் சஸ்பென்சன், 6 ரைடிங் மோடுகள், மேலும் கீழுமாக விரைவாக கியர்களை மாற்றும் சாஃப்டர், ஹில் ஹோல்டு, க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட்டட் கிரிப்ஸ், கீ இல்லாமல் செயல்படும் தொழிற்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் இந்த பைக்கில் உள்ளது.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

ஆனால் இதைவிட இதன் போட்டியாளராக டுகாட்டி மல்டிஸ்ட்ரடா பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்டரால் உடன் கூடிய ஃபார்வேர்டு பேசிங் ரேடார் வசதி உள்ளது. இந்த பைக்கில் அந்த ஒரு வசதி மிஸ்சிங் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை வேரியன்டை பொருத்து மாறுபடுகிறது. ஜிடிப்ரோ பேசிக் வேரியன்டாக வருகிறது. இது மார்கெட்டில் ரூ19.19 லட்சம் என்ற விலையிலும், ரேலி ப்ரோ பைக் ரூ20.19 லட்சம் என்ற விலையிலும், ஜிடி எக்ஸ்ப்ளோரர் பைக் ரூ20.69 லட்சம் என்ற விலையிலும், ரேலி எக்ஸ்ப்ளோரர் பைக் ரூ21.69 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இது எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைகளாகும்.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இதில் ஜிடி வேரியன்ட் ஸ்ட்ரீட் பைக் வேரியன்டாக உள்ளது. நகர் பகுதிகளில், டிராபிக் நிறைந்த பகுதிகளில் ஓட்ட இந்த வேரியண்ட் பைக் சிறப்பானதாக இருக்கும். ரேலி வேரியன்ட் பைக் ஆஃப்ரோடு பைக்காக வருகிறது. இது நீண்ட தூர பயணம் மற்றும் கரடு முரடான பயணங்களுக்கு ஏற்ற பைக் ரேலி வேரியண்ட்டில் வயர் ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜிடி வேரியன்டில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக் வாங்கும் விலை 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது . . .

இந்த பைக்கில் ப்ரோ மற்றும் எக்ஸ்ப்ளோரர் ஆகிய வேரியன்டின் வித்தியாசம் என்பது பெட்ரோல் டேங்க் அளவில் இருக்கிறது. எக்ஸ்ப்ளோரர் வேரியன்டில் 30 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் ப்ரோ வேரியன்டில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதை வைத்து உங்களுக்குத் தேவை ப்ரோ வேரியன்டா, எக்ஸ்ப்ளோரர் வேரியன்டா, அதில் ஜிடி வேரியன்டா, ரேலி வேரியன்டா என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப்
English summary
2022 triumph tiger 1200 bike launched know price spec and other details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X