அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க மத்தது எதுக்குங்க!

டிவிஎஸ் நிறுவனம் 2022 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஐக்யூப் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட மின்சார ஸ்கூட்டருக்கு மக்கள் கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனம் தற்போது ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2022 வெர்ஷனை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று புதிய வேரியண்டுகள், 10 நிற தேர்வுகள் மற்றும் ரியல் லைஃபில் 140 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் ஆகிய சிறப்புகளுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

வேரியண்டுகள் விபரம்:

ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகிய மூன்று வேரியண்டுகளிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில், ஐக்யூப் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதற்கு ரூ. 98,654 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி ஆன்-ரோட் விலை ஆகும். சென்னையில் இந்த தேர்வு ரூ. 1.65 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின்கீழ் ரூ. 1.14 லட்சத்திலேயே சென்னை வாசிகளால் வாங்கிவிட முடியும். இதுவும் ஆன்-ரோடு விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இந்த இரு நகர வாசிகளால் மட்டுமே டிவிஎஸ்-இன் இந்த சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

தற்போது ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகிய இரு தேர்வுகளின் விலை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. உயர்நிலை தேர்வான ஐக்யூப் எஸ்டி வேரியண்டின் விலை வெளியிடப்படவில்லை. அதேவேலையில், மூன்று வேரியண்டுகளுக்குமான புக்கிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

சிறப்பம்சங்கள்:

டிவிஎஸ் நிறுவனம் புதிய 2022 ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் (SmartXonnect system) எனும் அம்சத்தை அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக அது வழங்கும் ஓர் அம்சமாக வழங்கியிருக்கின்றது. இதன் தொழில்நுட்ப அம்சத்தினால் அதி-நவீன தயாரிப்பாக அது மாறியுள்ளது. தொடர்ந்து, 5 அங்குல வண்ண டிஎஃப்டி திரை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

இந்த அம்சம் ஐக்யூப் எஸ் தேர்வில் 7 அங்குலத்தில் இது காணப்படும். இதே அளவிலியே ஐக்யூப் எஸ்டி வேரியண்டில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அது தொடுதிரை வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் அம்சத்தின் வாயிலாக நேவிகேஷன், மொபைல் இணைப்பு உள்ளிட்ட முக்கிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

இத்துடன் மிக சிறப்பான அம்சமாக ஜியோஃபென்சிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் வாயிலாக ஸ்கூட்டர் எங்கிருக்கின்றது என்பதை செல்போன் திரை வாயிலாகவே தெரிந்துக் கொள்ள முடியும். இதுதவிர செல்போனுக்கு வரும் அழைப்பு, பயணிக்கும் தூரத்தின் இடைவெளி போன்ற முக்கிய தகவல்களையும் அறிந்து கொள்ளும் வசதிகளும் அத்திரையில் வழங்கப்பட்டுள்ளன.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் விபரம்:

டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எஸ்டி வேரியண்டை 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கிலும், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் ஆகிய இரு வேரியண்டுகளை 3.04 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கிலும் வழங்க இருக்கின்றது. அனைத்து பேட்டரிகளும் ஐபி67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் தர சான்று பேட்டரிகள் ஆகும். இந்த பேட்டரிகளை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4.30 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

ஐக்யூப் எஸ்டி வேரியண்டை 1500வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 2.30 மணி நேரங்களிலேயே 0-80 சதவீத சார்ஜை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மின் மோட்டாரை பொருத்தவரை அனைத்த தேர்வுகளும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதாவது, 4.4 kW பிஎல்டிசி ஹப் மவுண்டட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

இது 3kW பவர் மற்றும் 140 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆனால், இவை வேகமா செல்வதில் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. ஐக்யூப் எஸ்டி வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 82 கிமீ ஆகும். ஆனால் ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் ஆகியவற்றின் உச்சபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ மட்டுமே ஆகும்.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

இத்துடன், மின் மோட்டாரில் ரிவர்ஸ் மற்றும் ஃபார்வார்டு ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்த வேகத்தில் பயணிப்பதற்கு எகனாமி மோடும், அதிக வேகத்தில் பயணிப்பதற்கு பவர் எனும் மோடும் வழங்கப்பட்டுள்ளது. எகனாமி மோடில் வைத்து ஐக்யூப் ஸ்டி தேர்வில் பயணித்தால் முழுமையாக சார்ஜில் 145 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க ஓலா, ஏத்தர் எல்லாம் எதுக்கு!

பிற இரு தேர்வுகளும் 100 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். இத்தகைய மிற சிறப்பான வசதிகளுடனேயே ஏத்தர், பஜாஜ் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் டிவிஎஸ் ஐக்யூப் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
2022 tvs iqube launched in india at inr 98000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X