ராயல் என்ஃபீல்டு புல்லட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்...! இன்னும் கொஞ்ச நாள்ல இப்படி ஒரு பைக் வரப்போகிறது

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்தாண்டு புதிய புல்லட் 350 பைக், புதிய 450 சிசி பைக், 650 சிசி பைக் என மொத்தம் 3 பைக்குகளை அடுத்த 2023ம் ஆண்டில் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தற்போது நீங்கள் ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கும் எண்ணத்திலிருந்தால் சற்று காத்திருங்கள், புதிய பைக்கின் ஆப்ஷன்களும் உங்களுக்குக் கிடைக்கும். அடுத்தடுத்து வெளியாகவுள்ள பைக்குகள் ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்...! இன்னும் கொஞ்ச நாள்ல இப்படி ஒரு பைக் வரப்போகிறது

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சமீபத்தில் இத்தாலியின் நடந்த 2022 EICMA-வில் தனது சூப்பர் மீட்டியோ 650 பைக்கை அறிமுகப்படுத்தியது. இதே பைக்கை இந்நிறுவனம் தனது ரைடர் மேனியாவில் இந்தியாவிற்கான வெர்ஷனை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பைக் வரும் 2023 ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பைக்கின் மீது ராயல் என்ஃபீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த பைக்கின் ரிவியூவிற்காக பலர் காத்திருக்கின்றனர்.

2023ம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு மிக முக்கியமான வெளியீடாகத் தனது புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பைக் ஏற்கனவே இந்தியாவில் டெஸ்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் லீக் ஆகியிருந்தது. இந்நிறுவனம் சமீபத்தில் ஹன்டர் 650 பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது. அது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. பல இந்த பைக்கை ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இந்த பைக்கிற்கான புக்கிங் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக் தான் அந்நிறுவனத்திலேயே குறைந்த விலை பைக்காக இருக்கிறது. அடுத்தாக ஹன்டர் 350 பைக் அதை விட சற்று விலை அதிகமாக இருக்கிறது. தற்போது புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை பொருத்தவரை அதே குறைந்த விலையில் தான் விற்பனைக்கு வரும். புதிய டிசைன் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இந்த பைக்கிற்கு புதிய ஒரு லுக்கை கொடுக்கும் எனத் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய பைக் டபுள் கிரேடில் சேஸிஸ் கொண்டுள்ளது. 349சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஏர் மற்றும் ஆயில் கூல்டு SOHC ப்யூயல் இன்ஜெக்சன் இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் தான் தற்போது உள்ள பைக்கிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2023 புல்லட் 350 பைக்கில் முக்கியமாக பைக் முன் மற்றும் பின்பக்க பிரேக்குகள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக முன்பக்கத்தில் எப்பொழுதும் போல வட்டமான ஹெட்லைட், க்ரோம் கேஸ்கள் கொண்ட டெயில் லைட், ஹேலஜன் டர்ன் சிக்னல், பிரபலமான சுவிட்ச் கியர், ட்யூப்லர் கிராப் ரயில், உயர்த்தப்பட்ட ஹேண்டில் பார் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது.

இது மட்டுமல்ல இது போக முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ட்வின் சைடட் ரியர் ஷாக்ஸ், ட்யூப்டு டயர்களுடன் கூடிய வயர் ஸ்போக்டு வீல்கள், உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் இடம் பெறவுள்ளது. இந்த பைக் 2023ம் ஆண்டின் முதல் பாதியிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக 650 சிசியில் ஒரு பைக் 2023ம் ஆண்டு இரண்டாம் பாதியில் வரும் என்றும் 450 சிசியில் முற்றிலுமாக புதிய பைக் 2023ம் ஆண்டு இறுதியில் வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக புல்லட் பைக் வாங்கப் போகிறீர்கள் என்றால் புதிய தலைமுறை புல்லட் இன்னும் சில மாதங்களில் வருகிறது. காத்திருந்து அதை வாங்குங்கள்

Most Read Articles
English summary
2023 new gen bullet 350 is the next big launch for royal enfield
Story first published: Friday, November 25, 2022, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X