350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...

350 சிசிக்கு அதிகமான பைக் விற்பனையில் முதல் 4 இடங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் தான் இருக்கிறது. அந்த செக்மெண்ட்டை அந்நிறுவனமே தனி ஆளாக ஆண்டு வருகிறது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

350 சிசிக்கு மேல் உள்ள பைக்களுக்கு இந்தியர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. இந்த ரக பைக்குகளை ஆண்கள் பலர் விரும்பி வாங்குகின்றனர். நல்ல செயல்திறன், லுக் என பார்க்கும் பைக் பிரியர்களுக்கு ஏற்ற பைக்குகள் இந்த செக்மெண்டில் நிறைய இருக்கின்றது. இந்த செக்மெண்டில் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவு பைக்குகள் விற்பனையானது என்பது குறித்து காணலாம் வாருங்கள்

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இந்த செக்மெண்டில்மொத்தம் 51,827 பைக்குகள் விற்பனையாகினது இது கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் 47,650 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இது ஒரே ஆண்டில் 8.77 சதவீத வளர்ச்சியாகும். கடந்த மார்ச் மாதம் 55,432 பைக்களை இந்த செக்மெண்டில் விற்பனையாகியிருந்தது. தற்போது அதை விட 6.5 சதவீதம் குறைவாக விற்பனையாகியுள்ளது.

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

இந்த செக்மெண்டில் பாதிக்கும் மேற்பட்ட மார்கெட்டை பிடித்திருப்பது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் தான். இந்த பைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட செக்மெண்டில் 62.85 சதவீத பங்கை வைத்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 32,575 பைக்குகள் விற்பனையாகியிருந்தன. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 23,298 ஆக விற்பனையிருந்தது. இது 39.82 சதவீத வளர்ச்சியாகும். ஆனால் மார்ச் விற்பனையிலிருந்து ஏப்ரல் விற்பனை 0.36 சதவீதம் குறைந்ததுள்ளது. இந்த பைக் மார்கெட்டில் ரூ1.90 லட்சம் முதல் ரூ2.20 லட்சம் வரை விற்பனையாகிறது.

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் அதே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 7513 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 9,908 பைக்குகள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 24.17 சதவீதம் சரிந்துள்ளது. இந்தாண்டு இறுதியில் புதிய புல்லட் பைக் அறிமுகமாகவுள்ளதால் இந்த விற்பனை சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .
No Domestic 350cc Apr-22 Apr-21 Growth (%)
1 Classic 350 32,575 23,298 39.82
2 Bullet 350 7,513 9,908 -24.17
3 Meteor 350 4,617 7,844 -41.14
4 Electra 350 3,918 3,631 7.90
5 CB 350 3,204 2,969 7.92
No Exports 350cc Apr-21 Apr-21 Growth (%)
1 CB 350 2,221 840 164.40
2 Classic 350 1,797 724 148.20
3 Meteor 350 1,138 1,143 -0.44
4 Bullet 350 7 0 -
5 Electra 350 0 13 -100.00
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

பட்டியலில் 3வது இடத்தையும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் பைக் தான் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 4617 பைக்விற்பனையாகியிருந்தது. இதே பைக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 7844 பைக் விற்பனையாகியிருந்தது ஒரே ஆண்டில் 41.14 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பைக் சமீபத்தில் தான் அப்டேட் ஆனது. விலையும் ரூ5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டது. ஆனாலும் விற்பனை வளர்ச்சியடையவில்லை.

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

இந்த பட்டியலில் 4வது இடத்தில் எலெக்ட்ரா 350 பைக் இருக்கிறது. இது மொத்தம் 3918 பைக் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இது 3631 ஆக இருந்தது. 7.90 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. பட்டியலின் கடைசி இடத்தில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி 350 பைக் இருக்கிறது. இது மொத்தம் 3204 பைக் விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 2969 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 7.92 சதவீதம் வளர்ச்சி

350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிக்கு யாருமே இல்ல . . .

ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தையில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஏற்றுமதியில் ஹோண்டா சிபி 350 பைக் தான் நம்பர் 1 பைக்காக உள்ளது. சிபி 350 மொத்தம் 2221 பைக்குகளும், கிளசிக் 350 மொத்தம் 1797 பைக்குகளும், மீட்டியோர் 350 மொத்தம 1138 பைக்குகளும், புல்லட் 350 7 பைக்குகளும் இந்த செக்மெண்டில் ஏற்றுமதியாகியுள்ளன.

Most Read Articles

English summary
350 cc bikes april month sale report royal enfield capture whole segment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X