உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 350சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த சில மாதங்களாக குறை கடத்திகளின் பற்றாக்குறையினாலும், வைரஸ்கள் பரவலினாலும் பல விதங்களில் இன்னல்களை சந்தித்து வந்துள்ளது. இதன் விளைவாக தயாரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல் பல தயாரிப்பு நிறுவனங்கள் போராடி வந்துள்ளன.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

350சிசி மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், உள்நாட்டு விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் சற்று குறைந்துள்ளது என்றாலும், வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் 350சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் எப்போதும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம்தான்.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

ஏனெனில் சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தில் இருந்து கிளாசிக், மீட்டியோர், புல்லட் மற்றும் எலக்ட்ரா என 350சிசி பைக் மாடல்கள் ஏகப்பட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கிளாசிக் 350 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை வெர்சன் கடந்த 2021ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

அதேபோல் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350-யும் மாடர்ன் ராயல் என்பீல்டு பைக்கே ஆகும். இவற்றுடன் 350சிசி மோட்டார்சைக்கிளாக ஹோண்டா சிபி350 மாடலும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக மொத்தத்தில் தற்போதைக்கு ஐந்து 350சிசி பைக்குகள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

இதில் வழக்கம்போல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 தான் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 34,723 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இத்தனைக்கும் அவை முந்தைய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளாகும்.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

இந்த வகையில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை 11.69% குறைந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த 350சிசி பைக்குகளில் கிளாசிக் 350 மாடல் மட்டுமே கிட்டத்தட்ட 58.22 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. மீட்டியோர் 350 இந்த வரிசையில் கிளாசிக் 350-க்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் வெற்றிக்கரமாக மீட்டியோரின் விற்பனை எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

கடந்த மாதத்தில் மொத்தமாக 10,977 மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 8,569 மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 28.10% அதிகமாகும். கடந்த மாதத்தில் உள்நாட்டு விற்பனையில், வருடம்-வருடம் ஒப்பிடுகையில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த ஒரே மோட்டார்சைக்கிள் மீட்டியோர் 350 ஆகும்.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

முன்பு தொடர்ச்சியாக, கிளாசிக் 350 மாடலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துவந்த புல்லட் 350 கடந்த சில மாதங்களாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலை கடந்த 2021 டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. 2020 டிசம்பரில் கிட்டத்தட்ட 10,480 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த புல்லட் 350 கடந்த டிசம்பர் மாதத்தில் வெறும் 8,061 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

இதன்படி பார்க்கும்போது, புல்லட் 350 பைக்குகளின் விற்பனை 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 23.08% குறைந்துள்ளது. நான்காவது இடத்தில் உள்ள ராயல் என்பீல்டு எலக்ட்ரா 350-இன் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை. 2020 டிசம்பரில் 4,878 எலக்ட்ரா 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 4.521 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

கடைசி ஐந்தாவது இடத்தில் ஹோண்டா 2-வீலர்ஸின் 350சிசி பைக்கான ஹைனெஸ் சிபி350 1,364 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. மீட்டியோர் 350-க்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இதன் விற்பனை எண்ணிக்கை 2020 டிசம்பரிலும் (1,564 யூனிட்கள்) கிட்டத்தட்ட இதே அளவில்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக கடந்த 2021 டிசம்பரில் 59,646 350சிசி பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு விற்பனை & ஏற்றுமதி என இரண்டிலும் கெத்துக்காட்டும் மீட்டியோர் 350!! புல்லட்டின் விற்பனை குறைந்தது!

இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 7.97% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 64,812 350சிசி பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில், மீட்டியோர் 350-இன் கை ஓங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 2,276 மீட்டியோர் 350 பைக்குகளையும், 1,983 கிளாசிக் 350 பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து ராயல் என்பீல்டு நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
350cc motorcycle sales dec 2021 classic 350 leads
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X