நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க.. 7வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

ஏழு ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்துவந்த அரிய வகை டுகாட்டி பைக்கை இளைஞர் ஒருவர் கடும் முயற்சியை அடுத்து மீட்டெடுத்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

டுகாட்டி நிறுவனம் தயாரித்த மிக முக்கியமான இருசக்கர வாகன மாடல்களில் 1098 எஸ் ட்ரிகலர் (Ducati 1098 S Tricolore) மாடலும் ஒன்று. இந்த அரிய வகை இருசக்கர வாகனத்தையே கொச்சி டிஆர்ஐ பிரிவினர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதை அடுத்து ஏழு வருடங்களாக இந்த பைக் அவர்களின் அலுவலக வளாகத்தில் திறந்த வெளியில் விடப்பட்டிருக்கின்றது.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

வெகு நீண்ட கால கவனிப்பின்றி விடப்பட்டதால் இந்த வாகனம் மழை மற்றும் வெயிலால் சேதமுற்றது. அரிய வகை பைக்கிற்கு ஏற்பட்ட இந்த நிலை இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இணையத்தில் இருசக்கர வாகனம் குறித்த படங்கள் வைரலாகி அனைவரையும் கவலையடையச் செய்தது.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

இந்த நிலையிலேயே டுகாட்டியின் இந்த அரிய வகை பைக்கை கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் மீட்டெடுத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மீட்டெடுத்த கையோடு அந்த இருசக்கர வாகன காதலர் அப்பைக்கை சாலையில் இயங்கும் வகையில் ரெடி செய்திருக்கின்றார். இத்துடன், அவ்விருசக்கர வாகனத்தை புதிது மீட்டெடுத்திருக்கின்றார்.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

இளைஞரின் இந்த செயலால் பைக் தற்போது மறு அவதாரம் எடுத்திருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளாக கொச்சின் டிஆர்ஐ-இன் அலட்சியத்தால் மக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த டுகாட்டி 1098 எஸ் ட்ரிகலர் தற்போது அனைவரையும் கவரக் கூடிய ஓர் இருசக்கர வாகனமாக மாறியிருக்கின்றது. இந்த பைக்கை கொச்சின் டிஆர்ஐ பறிமுதல் செய்ததற்கான துள்ளியமான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

உரிய அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்த காரணத்தினால் இப்பைக்கை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த காரணங்களுக்காகவே கடந்த காலங்களில் கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரிகள் பல வாகனங்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். வரி ஏய்ப்பு செய்ய ஒரு சிலர் இவ்வாறு சட்ட விரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்துக் கொண்டிருக்கின்றனர்.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

இதனைத் தவிர்க்கும் பொருட்டு சட்டவிரோத இறக்குமதி வாகனங்களை டிஆர்ஐ பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை செய்து பறிமுதல் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான அதிரடி வேட்டையில் கைப்பற்ற டுகாட்டி பைக்கே தற்போது ஏலத்தின் வாயிலாக விற்கப்பட்டு அது மற்றொருவரின் கைகளுக்கு பயன்பாட்டிற்காக சென்றிருக்கின்றது.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

டுகாட்டி 1098 எஸ் ஏன் அரிய வகை பைக்?

டுகாட்டி நிறுவனம் இந்த பைக்கை வெறும் 1013 யூனிட்டுகளை மட்டுமே தயாரித்தது. உலகம் முழுவதிலும் விற்பனைச் செய்வதற்கே இத்தகைய குறைவான யூனிட்டை அது உருவாக்கியிருந்தது. இதில், ஒன்றே டிஆர்ஐ-இன் பிடியில் இத்தனை நாட்களாக சிக்கியிருந்தது. 2007ம் ஆண்டிலேயே இந்த பைக்கை நிறுவனம் முதல் முறையாக இந்த பைக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தற்போதும் இந்த பைக்கிற்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

கவர்ச்சிகரமான உருவ தோற்றம், லிமிடெட் யூனிட் மற்றும் அதிக பவர்ஃபுல் மோட்டார் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த பைக் உலகம் முழுவதிலும் ஃபேமஸானதாக உள்ளது. இத்தாலி நாட்டின் கொடியைப் பிரதிபலிக்கும் வகையிலேயே டுகாட்டி நிறுவனம் இந்த பைக்கிற்கு மூவண்ண நிறத்தை வழங்கியிருக்கின்றது. இந்த பைக்கை டிராக் மற்றும் வழக்கமான சாலை ஆகிய இரண்டிலும் வைத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கியிருக்கின்றது.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

இந்த பைக் அரிதான பைக்காக காட்சியளிக்க இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. இதற்கு அப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முக்கியமான அணிகலன்களும் காரணம். பிரத்யேக டெர்மிக்னோனி ரேஸ்-ஸ்பெக் எக்சாஸ்ட் சிஸ்டம், இசியூ உள்ளிட்ட அம்சங்கள் டுகாட்டி 1098 எஸ் ட்ரிகலர் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, ட்ரெல்லிஸ் ஃப்ரேமைக் கொண்டும் இந்த பைக் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

நல்ல வேலை எப்படியோ பைக்கை மீட்டுட்டுங்க... 7 வருஷமா மழையிலும், வெயிலும் காய்ந்து வந்த ரேர் டுகாட்டி பைக் மீட்பு!

மேலும், ரேசிங் கோல்டு நிறத்தால் இந்த பைக் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. இப்பைக்கில் அதீத திறனை வெளிப்படுத்தும் விதமாக 1098 சிசி எல்-ட்வின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 123 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வாயிலாகவே இந்த சூப்பரான பவரை டுகாட்டி 1098 எஸ் ட்ரிகலர் வெளியேற்றும்.

டுகாட்டி நிறுவனம் இந்த பைக்கில் சிங்கிள்-சைடட் ஸிவிங்கர்மை பொருத்தியிருக்கின்றது. மேலும், சஸ்பென்ஷனுக்காக 43 மிமீ ஓஹ்லிஹ்க்ஸ் ஃபோர்க் மற்றும் ஓஹ்லிங்க்ஸ் 45பிஆர்சி மோனோஷாக் உள்ளிட்டவற்றை அது பொருத்தியிருக்கின்றது. இந்த சஸ்பென்ஷன்கள் முழுக்க முழுக்க அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கின் மதிப்பு ரூ. 35 லட்சம் என கூறப்படுகின்றது. இத்தகைய விலையுயர்ந்த அரிய வகை பைக்கையே டுகாட்டி நிறுவனம் 7 ஆண்டுகளாக மழை, வெயிலில் கிடப்பில் போட்டிருந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
After 7 years spent in open parking rare ducati 1098s tricolore restored
Story first published: Monday, September 19, 2022, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X