யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

யமஹா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த எஃப்இசட் 25 மான்ஸ்டர் எடிசன் (Yamaha FZ25 Monster Energy edition) நாட்டில் முழுமையாக விற்று தீர்ந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் மிக முக்கியமான இருசக்கர வாகன மாடல்களில் ஆர்15 (YZF-R15)ம் ஒன்று. இந்த பைக் மாடலில், மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் (YZF-R15 V4 MotoGP edition) எனும் சிறப்பு பதிப்பை யமஹா அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

இந்த ஸ்பெஷல் தயாரிப்பை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அது விற்பனைக்குக் கொண்டு வந்த அனைத்து யூனிட் ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் பைக்குகளும் விற்று தீர்ந்துவிட்டதாக மிக சமீபத்தில் யமஹா நிறுவனம் தகவல் வெளியிட்டது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

இதைத்தொடர்ந்து, இதுமாதிரியான மற்றுமொரு சிறப்பு பதிப்பும் முழுமையாக தற்போது விற்று தீர்ந்திருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் எஃப்இசட்25 (FZ25) மோட்டார்சைக்கிளும் ஒன்றாக உள்ளது. இந்த பைக் மாடலிலேயே ஆர்15 மாடலில் கொண்டு வந்ததைப் போல் பிரத்யேக எஃப்இசட்25 மான்ஸ்டர் எடிசன் (FZ25 Monster Energy edition)-ஐ அது விற்பனைக்குக் கொண்டு வந்தது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

இந்த தேர்வின் அனைத்து யூனிட்டுகளும்தான் தற்போது விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை ரூ. 1.38 லட்சம் என மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கி வந்தது. இந்த மிகக் குறைவான விலை யுக்தியாலும், அதிக கவர்ச்சியான சிறப்பம்சங்களை அதுக் கொண்டிருந்ததாலும் இந்தியர்களை அது வெகுவாக கவர்ந்தது. இதன் வெளிப்பாடக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட அனைத்து யூனிட்டுகளும் முழுமையாக விற்று தீர்ந்திருக்கின்றன.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

மேலே பார்த்தது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வழக்கமான எஃப்இசட் 25 பைக்கைக் காட்டிலும் சற்று வித்தியாசமானதாக மான்ஸ்டர் எனர்ஜி எஃப்இசட் 25 காட்சியளிக்கின்றது. இதற்கு நிறுவனம் கையாண்டிருக்கும் பிரத்யேக நிற அலங்கரிப்பு மற்றும் கிராஃபிக் அலங்காரங்களே முக்கிய காரணமாக உள்ளது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

மான்ஸ்டர் எனர்ஜி மற்றும் இனியோஸ் லோகோக்கள் இந்த ஸ்பெஷல் எடிசனில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையே பைக்கிற்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கக் காரணமாக உள்ளன. அத்துடன், அதிக முரட்டுத்தனமான தோற்றத்தையும் அவை வழங்கியிருக்கின்றன. இம்மாதிரியான புதிய அலங்காரங்கள் மட்டுமே எஃப்இசட்25 பைக்கில் செய்யப்பட்டுள்ளது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

பைக்கின் எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் யமஹா செய்யவில்லை. 249 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே எஃப்இசட் 25 மான்ஸ்டர் எடிசன் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.5 பிஎச்பி மற்றும் 20.1 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த மோட்டாரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

இதே வசதிக் கொண்ட எஞ்ஜினே வழக்கமான எஃப்இசட்25 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யமஹா 25 பைக்கில் முழு எல்இடி தர புரஜெக்டர் ரக எல்இடி ஹெட்லைட், எல்இடி தர டிஆர்எல் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற மிக ஆரம்ப நிலை அம்சங்களும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. பைக்கில் உள்ள குறைபாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

அதேவேலையில், எஞ்ஜின் கட்-ஆஃப் தொழில்நுட்பம், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகிய மிக சிறப்பான அம்சங்கள் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை வழக்கமான அம்சங்களாக யமஹா நிறுவனம் பைக்கில் வழங்கியிருக்கின்றது. மான்ஸ்டர் எனர்ஜி எடிசன் எஃப்இசட் 25 இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்தது.

யமஹாவின் இந்த பைக்கையும் இந்தியர்கள் வாங்கியே தீத்துட்டாங்களா?.. யமஹாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் நீலம் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்தது. தற்போது அனைத்தை யூனிட்டுகளையும் இந்தியர்கள் வாங்கி தீர்த்துவிட்டதால் இது விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியிருக்கின்றது.

குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
After that yamaha yzf r15 v4 motogp edition fz25 monster energy edition also sold out in india
Story first published: Saturday, May 14, 2022, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X