அஃக்ரோடெக்-ன் மின்சார வாகனம்! சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோக்கள் இந்தியாவில் களம் இறங்கியது!

By Staff

மின்சார வாகன உற்பத்தியாளரான Calliper Green Vehicles Limited, 12 வகை மின்சார வாகனங்களுடன் "AGROTECH GREEN" என்ற பெயரில் இந்தியச் சந்தையில் நுழைந்துள்ளது. இந்த நிறுவனம் சாமானிய மக்கள் பயன்படுத்தும் வகையில் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது. இதில் மோட்டரால் இயக்கப்படும் மிதிவண்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது

இம்மாதிரியான வாகனங்களைச் சந்தை படுத்த B2B மற்றும் B2C என இரு பிரிவுகளுக்கும் ஆனது. அதாவது, இந்த மின்சார வாகனங்கள் அனைத்தும், சரக்கு போக்குவரத்து மற்றும் தனியார் வாடிக்கையாளர்களுக்கு என இரு பிரிவுகளுக்கும் ஏற்றவாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அக்ரோடெக் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம்!

குறைவான வேகம் கொண்ட இந்த இரு சக்கர வாகனத்தை மணிக்கு 45 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிமீ வரை பயணிக்க முடியும். லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட இந்த மின்சார இரு சக்கர வாகனங்களை 3-4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

நகரங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்கி உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கமும் மானியங்களை வழங்கி வருகிறது, தற்போது இதுவரை எலெக்ட்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்த இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் டாக்குமெண்ட் தகவலின்படி, 2023ம் நிதியாண்டில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் அடாப்ஷன் மற்றும் தயாரிப்புக்கு ரூ.2,908 கோடி ஒதுக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் CALLIPER நிறுவனம் தனது வாகனங்களை இந்தியா முழுவதும் டீலர், டிஸ்ட்ரிபியூட்டர் நெட்ஒர்க் மூலம் மற்றும் அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் 8 மாவட்டங்களுக்கு ஒரு உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பயின்ற என்ஜினீர்ஸ் மட்டும் அல்லாமல் பல்வேறு அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் (மாணவர்களுக்கும்) வேலைவாய்ப்பு கிடைக்க பெற வாய்ப்பளிக்கிறது.

அக்ரோடெக் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம்!

இந்த நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான இ-ஸ்கூட்டர்கள், இ-மோட்டார்பைக்குகள் (E-Motorbikes), இ-ரிக்க்ஷாக்கள், இ-ஆட்டோக்கள், இ-லோடர்கள், இ-ஃபுட்கார்ட்கள் மற்றும் இ-குப்பை வாகனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனச் சந்தையில் மற்றொரு அசைக்க முடியாத சக்தியாக இந்த நிறுவனம் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது.

இந்நிறுவனம் தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்த தமிழ்நாடு முழுக்க டீலர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்களை நியமனம் செய்துவருகிறது. டீலர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் தொடர்பான விபரங்களுக்கு நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

Most Read Articles
Tamil
மேலும்... #sponsored
English summary
Agrotech green electric vehicles introduced in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X