ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்...

ஏத்தர் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 3779 வாகனங்களை விற்பனை செய்து 255 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முக்கியமான நிறுவனம் ஏத்தர் எனர்ஜி, இந்நிறுவனம் இந்தியாவில் பிரிமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவு ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது என்ற ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஒராண்டில் இந்நிறுவனம் தனது விற்பனையை 255.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

பெங்களூரூவை மையமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மக்கள் பலரால் விரும்பி வாங்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. மக்கள் விரும்பினாலும் இதைவிலை சற்று அதிகம் என்பதால் விற்பனை மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

ஆனால் இந்த ஸ்கூட்டரை வாங்கியவர்கள் பலர் விலைக்கு ஏற்ற தரம் இருப்பதாக கூறுகின்றனர். ஏத்தர் நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு அந்நிறுவனம் வழங்கும் சர்வீஸ் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்காக அந்நிறுவனம் தங்கள் சேவைகளை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கி வருகிறது. அதற்கு அந்நிறுவனம் தரமான சேவை வழங்க வேண்டும் என விரும்புவதும் முக்கியமான காரணம்.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் விற்பனை செய்த ஸ்கூட்டர்கள் குறித்த அறிக்கையை வழங்கியுள்ளது.அதன்படி அந்நிறுவனம் ஒரு மாதத்தில் மொத்தம் 3779 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையான 1064 ஸ்கூட்டர்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிடடும் போது மொத்தம் 255 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

அதேநேரத்தில் கடந்த மார்ச் மாத விற்பனையை ஒப்பிடும் போதும் ஏப்ரல் மாதம் விற்பனை அதிகரித்துள்ளது. மார்ச்ச மாதம் வெறும் 2591 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்தது. தற்போது ஏப்ரல் மாதம் அதன் விற்பனை 45.85 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

ஏத்தர் இதுவரை இல்லாத அளவு ஏப்ரல் மாதம் தான் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை பிஸ்னஸ் ஆஃபீசர் மார்க் கூறும் போது மக்கள் மத்தியில் ஏத்தர் நிறுவனத்தின் 450X மற்றும் 450 Plus ஆகிய ஸ்கூட்டர்கள் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருப்பதாகம், பாதுகாப்பான, நன்றாக உழைக்கும் தயாரிப்புகளை தாங்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

ஏத்தர் நிறுவனம் தற்போது Statiq மற்றும் Park+ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ திட்டமிட்டுள்ளனர். தற்போது திரூர், மலப்புரம், அவுரஙகாபாத் ஆகிய பகுதிகளில் ஏத்தர் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விற்பனையை துவக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 37 இடங்களில் இந்த நிறுவனம் விற்பனையை செய்துவருகிறது.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

இதில் Statiq என்ற நிறுவனம் ஏத்தர் நிறுவனத்திற்காக டில்லி பகுதியிலும், Park+ நிறுவனம் மும்பை பகுதியிலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது. இந்த இடங்களில் ஏத்தர் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்க அதிகரிக்க விற்பனையையும் அதிகமாகி வருகிறது.

ஒரே ஆண்டில் 255 சதவீதம் வளர்ச்சி.. எகிறியடிக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

ஏத்தர் நிறுவனம் தங்கள் நிறுவனம் சார்பில் 2 விதமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. 450x மற்றும் 450+ என்ற இரண்டு ஸ்கூட்டர்களும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன. இதில் இரண்டு டிரைவிங் மோட்கள் உள்ளன அதில் 450x முழு சார்ஜில் ரைடு மோடில் 70 கி.மீ வரையிலும் எகோ மோடல் 85 கிலோ மீட்டர் வரையிலும் செல்லும் திறன் கொண்டது, 450+ ஸ்கூட்டர் ரைடு மோடில் 65 கி.மீ வரையிலும் எக்கோ மோடில் 75 கிலோ மீட்டர் வரையிலும் பயணிக்கும் திறன் கொண்டது. ஏத்தர் ஸ்கூட்டர்கள் விலை ரூ1.18 லட்சத்திலிருந்து விற்பனையாகிறது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather
English summary
Ather grows 255 Percent sales in 2022 april find the sales report here
Story first published: Wednesday, May 4, 2022, 21:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X