எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடகா மாநிலம் முழுவதும் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்களை பொருத்துவதற்காக அம்மாநில அரசும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கவுள்ளது. அத்துடன் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதையும் இது ஊக்குவிக்கும்.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

நமது எதிர்கால போக்குவரத்து எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் இருக்க போகிறது என்பதை தற்போது அனைவரும் உணர தொடங்கி விட்டனர். அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகளும் மக்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வேகமாக திருப்பி வருகின்றன.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஆனால் இன்னமும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ரேஞ்ச் தொடர்பாக உள்ள பதற்றம்தான். தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் ஓரளவிற்கு மட்டுமே இருக்கிறது. போதாக்குறைக்கு மக்களுக்கு கிடைக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் வேறு மிகவும் குறைவாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தால் பெரும் அளவிலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவர். எனவே அரசும், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன. இதன்படிதான் கர்நாடக மாநில அரசும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் தற்போது கைகோர்த்துள்ளன.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி மாறியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) முறையான ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

இதன் செயல்திறன் மற்றும் டிசைன் என பல்வேறு அம்சங்களும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சொந்த சார்ஜர் மற்றும் சார்ஜிங் க்ரிட் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சிறிய சார்ஜரை விற்பனை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

இதனை வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பொருத்தி கொள்ள முடியும். அதேபோல் ஃபாஸ்ட் சார்ஜரையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சொந்த சார்ஜிங் நெட்வொர்க்தான் ஏத்தர் க்ரிட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சார்ஜர்கள் டிசைன், பாதுகாப்பு, செயல்திறன் என அனைத்திலும் தலைசிறந்து விளங்குகின்றன.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது எஸ்காம்ஸ் (ESCOMs - Electricity Supply Companies of Karnataka) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த நிறுவனம்தான் மின்சார வினியோகத்தை கவனித்து கொண்டுள்ளது. கர்நாடகா முழுவதும் அமைக்கப்படும் ஏத்தர் எனர்ஜி சார்ஜர்களுக்கு இந்நிறுவனம்தான் மின்சாரத்தை வழங்கவுள்ளது.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடகா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்கள் அமைக்கப்படவுள்ளன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரும். எனவே கர்நாடக மாநிலத்தில் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை உயரவுள்ளது.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜர்களை அதிகளவில் நிறுவுவதற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு போட்டியாக டிவிஎஸ் (ஐக்யூப்), பஜாஜ் (சேத்தக்), ஓலா எலெக்ட்ரிக் (எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ) உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

இவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்கள் ஆகும். இதுதவிர இன்னும் பல்வேறு சிறிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இங்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் காலங்களில் அந்த நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Ather to install 1000 fast chargers in karnataka check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X