பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

கடந்த 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா 2-வீலர்ஸ், டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்டவற்றிற்கு அடுத்து தற்சமயம் 4வது மிக பெரிய பிராண்டாக பஜாஜ் ஆட்டோ விளங்கி வருகிறது. பஜாஜ் ஆட்டோவில் இருந்து பல்சர், டோமினார், சேத்தக், அவெஞ்சர், சிடி மற்றும் பிளாட்டினா என்ற 2-வீலர்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

இவை அனைத்தும் கடந்த மாதத்தில் மொத்தமாக 1,23,719 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது பஜாஜ் ஆட்டோவின் கடந்த ஜூன் மாத உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை ஆனது 1,23,719 ஆகும். அதுவே 2021 ஜூன் மாதத்தில் 1,52,230 யூனிட் இருசக்கர வாகனங்களையே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

இந்த வகையில் பார்க்கும்போது, பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனை ஆனது 18.73% குறைந்துள்ளது. இருப்பினும் பஜாஜின் அடையாள மாடலான பல்சர் பைக்குகளின் விற்பனை ஆனது 5.78% அதிகரித்துள்ளது. அதாவது 2021 ஜூனில் 79,150 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் 83,723 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

பல்சருக்கு அடுத்து பிளாட்டினா பஜாஜ் ஆட்டோவின் விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இதன் விற்பனை 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 35.97% குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 27,732 பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2021 ஜூன் மாதத்தில் 43,313 பிளாட்டினா பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

ஆனால் உண்மையில், பிளாட்டினா பைக்குகள் ஆவது பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தியாவின் மிகவும் விலை குறைவான பைக்கான பஜாஜ் சிடி-இன் விற்பனை சுமார் 90.93% கடந்த மாதத்தில் உள்நாட்டு சந்தையில் சரிந்துள்ளது. ஏனெனில் கடந்த ஜூனில் வெறும் 2,413 சிடி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜூனில் கிட்டத்தட்ட 26,608 சிடி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

இதற்கு காரணம் சிடி100 பைக்கின் விற்பனை கடந்த மே மாத இறுதியில் நிறுத்தப்பட்டதால், தற்சமயம் சிடி110 மட்டுமே விற்பனையில் உள்ளது. இவ்வாறு இந்திய சந்தையில் பிரதான மாடல்களின் விற்பனை சரிந்திருப்பினும், பஜாஜ் ஆட்டோவிற்கு சற்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக அவெஞ்சர் பைக்குகள் விற்பனை ஆனது 212.86% அதிகரித்துள்ளது.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

2021 ஜூன் மாதத்தில் 2,217 அவெஞ்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் (6,936) அவெஞ்சர் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, அவெஞ்சர் 220 பைக்குகளின் விற்பனை 2021 ஜூனை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் 321.60% அதிகரித்துள்ளது. அவெஞ்சர் அடுத்து உள்ள டோமினார் பைக்குகளின் கடந்த மாத விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

கடந்த மாதத்தில் 446 டோமினார் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் டோமினார் 250 மற்றும் டோமினார் 400 என இரண்டும் அடங்குகின்றன. இந்த வரிசையில் மற்றொரு மாடலை முன்னரே குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் எலக்ட்ரிக் வாகனம் என்பதால் கடைசியில் குறிப்பிடுகிறோம். அதுதான் சேத்தக் ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 2,469 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 452 சேத்தக் இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில், பாக்ஸர் மோட்டார்சைக்கிள் எப்போதும் போல் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த பஜாஜ் மோட்டார்சைக்கிள் கடந்த மாதத்தில் 93,962 யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் அவெஞ்சர் பைக்குகளுக்கு திடீர் மவுசு பெருகுது!! சிடி பைக்குகள் விற்பனை தான் படுமோசம்!

இதற்கடுத்து பல்சர் பைக்குகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை 40,205 ஆகும். சிடி 25,152 யூனிட்களின் ஏற்றுமதி உடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சிடி பைக்குகளின் ஏற்றுமதி எண்ணிக்கை ஆனது 10 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது.

Most Read Articles
English summary
Bajaj auto sales breakup june 2022 avenger has seen yoy growth
Story first published: Monday, August 1, 2022, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X