பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

பல்சர் (Pulsar) மாடலில் மேலும் இரு புதிய தேர்வுகளை பஜாஜ் (Bajaj) நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உண்மை நிலவரம் என்பது பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் பல்சர் (Pulsar) பைக் மாடலும் ஒன்று. இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால், ஏனோ கடந்த சில காலங்களாக இதன் மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் சற்றே குறைந்திருப்பதைப் போல் தென்படுகின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

இந்த நிலையை உணர்ந்து பல்சர் பைக்கை பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் முயற்சியில் பஜாஜ் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் அவ்வப்போது சில புதுப்பித்தல்களையும், புதுமுக மாடல்களையும் நிறுவனம் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

அந்தவகையில், நிறுவனம் இரு புதிய ஸ்டைலிலான பைக்குகளை வெகுவிரைவில் கொண்டு வர இருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில், பல்சர் எலன் (Pulsar Elan) மற்றும் பல்சர் எலிகன்ஸ் (Pulsar Eleganz) ஆகிய இரு புதுமுகங்களுக்கான வர்த்தக பதிவை பஜாஜ் நிறுவனம் செய்திருக்கின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

இந்த ஸ்மார்ட் மூவின் வாயிலாகவே பல்சர் பைக்கிற்கு வலுசேர்க்க இருக்கின்றது, பஜாஜ். வர்த்தக பதிவானது மார்ச் மாதமே செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வெகு விரைவில் இரு புதுமுகங்களும் இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

மிக சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக் மாடலில் இரட்டையர்கள் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது. பல்சர் எஃப்250 (Pulsar F250) மற்றும் பல்சர் என்250 (Pulsar N250) ஆகிய இரட்டையர்களையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இரண்டிற்கும் இளைஞர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

இவற்றைத் தொடர்ந்தே பல்சர் வரிசையில் புதிய பல்சர் எலன் மற்றும் பல்சர் எலிகன்ஸ் ஆகிய மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பஜாஜ் களமிறங்கியிருக்கின்றது. மேலும், இதுகுறித்த தகவல் வெளியாகிய உடன் பல்சர் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இவ்விரு புதுமுகங்களும் என்ன மாதிரியான ஸ்டைலில் உருவாக்கப்பட இருக்கின்றதோ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

இதுகுறித்த ஆர்வம் நம்மிடையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. சமீப காலமாக இந்தியாவில் ரெட்ரோ ஸ்டைலிலான புதுமுக பைக்குகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இந்த தோற்றத்தில் பல்சர் எலன் மற்றும் பல்சர் எலிகன்ஸ் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

ஆனால், நிறுவனம் இதுவரை இந்த இருசக்கர வாகனங்கள் என்ன மாதிரியான ஸ்டைலில் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது பற்றிய தகவலை துளியளவும் வெளியடவில்லை. ஆகையால், அவை மாறுபட்ட ஸ்டைலில் இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக தென்படுகின்றது. கடந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வந்த எஃப் 250 மற்றும் என் 250 இரட்டையர்களே இதற்கு மிக சிறந்த சான்று.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

ஆம், இவ்விரு பைக்குகளும் இளைஞர்களைக் குறி வைத்து முற்றிலும் கவர்ச்சியான மாடல்களாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், என் 250 நேக்கட் டிசைனிலும், எஃப்250 செமி ஃபேரிங் டிசைனிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை வடிவமைக்க நிறுவத்திற்கு கிட்டத்தட்ட 5 வருடங்கள் செலவானதாக கூறப்படுகின்றது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

பஜாஜ் நிறுவனம் 125சிசி, 150சிசி மற்றும் அதிகபட்சமாக 220சிசி வரையிலான திறன் கொண்ட பல்சர் பைக்குகளை முன்னதாக விற்பனைக்கு வழங்கி வந்தது. இந்த நிலையை மாற்றி கொண்டு வரப்பட்டதே இந்த இரு 250 சிசி பல்சர் பைக்குகளும். இந்த இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான 4-ஸ்ட்ரோக் ஆயில்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்சர் பெயரில் இரண்டு புதுமுக மாடல்களை கொண்டு வருகிறது பஜாஜ்... வர்த்தக பதிவுகூட வெற்றிகரமாக முடிஞ்சிருச்சு!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடியது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த எஞ்ஜினில் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1,43,814 ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். எஃப் 250 ஒற்றை நிற தேர்விலும், என்250 மூன்று விதமான நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Bajaj auto trademarked for pulsar elan and pulsar eleganz here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X