இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

அரசாங்கங்களை தாண்டி, தற்போது வாடிக்கையாளர்களும் எலக்ட்ரிக் வாகனங்களை விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதில் சிலர் பெட்ரோல், டீசல் அல்லாத மாற்று எரிபொருளிலாவது குறைந்தப்பட்சம் வாகனத்தை வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

ஆனால் மிகவும் சிலரோ வழக்கமான வாகனத்தில் புதியதாக எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி ஹைப்ரீட் வாகனமாக மாற்றுகின்றனர். இந்த வகையில் ஹைப்ரீட் பைக்காக, அதாவது எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட பஜாஜ் அவென்சர் பைக் ஒன்றினை பற்றிதான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இதுதொடர்பாக யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இதேபோன்று முன்பு ஒருமுறை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் ஒன்று எலக்ட்ரிக் வாகனமாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. அதனை பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கூட பார்த்திருந்தோம். ஆனால் அந்த ஸ்பிளெண்டர் பைக் முற்றிலுமாக மின்சார ஆற்றலின் மூலமாக மட்டுமே இயங்கக்கூடியதாக இருந்தது.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

ஆனால் இந்த பஜாஜ் அவெஞ்சர் எலக்ட்ரிக் ஹைப்ரீட் பைக்கை தேவைக்கேற்ப பெட்ரோலிலோ அல்லது எலக்ட்ரிக் வெர்சனிலும் இயக்கி கொள்ளலாம். இந்த கஸ்டமைஸ்டேஷன் செயல்பாட்டில் உட்படுத்தப்பட்டிருப்பது பஜாஜ் அவெஞ்சர் 220 க்ரூஸ் பைக் ஆகும். இதில் கோகோஏ1 (GoGoA1) என்ற இவி மாற்று தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொகுப்பின் விலை ரூ.27,760 ஆகும்.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

இந்த இவி மாற்று தொகுப்பில் 2000 வாட்ஸ், 17-இன்ச் ப்ரஷ் இல்லா ஹப் மோட்டார், ரீஜெனரேட்டிவ் கண்ட்ரோலர், விரிஸ்ட் த்ரோட்டல் மற்றும் கேட்ச்சர், தட்டு & இணைப்பான் உடன் டிஸ்க் உள்ளிட்டவை அடங்குகின்றன. தோற்றத்தை பொறுத்தவரையில், இது வழக்கமான பஜாஜ் அவெஞ்சர் 220 க்ரூஸ் மோட்டார்சைக்கிளே ஆகும். புதியதாக முன் சக்கரம் மட்டும் ப்ர்ஷ்லெஸ் ஹப் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்குவதற்கான பேட்டரி பைக்கின் பின்பக்கத்தில் சிறிய பெட்டகம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெட்ரோல் & எலக்ட்ரிக் வெர்சன்களை தேர்வு செய்ய ஹேண்டில்பாரின் வலதுப்பக்கத்தில் சிறிய ஸ்விட்ச் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் அமைப்பு பார்ப்பதற்கு எளிமையானதாக தெரியலாம்.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

ஆனால் செய்து முடிக்க தாங்கள் மிகவும் சிரமப்பட்டதாக மேலுள்ள வீடியோவில் கஸ்டமைஸ்ட் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக புதிய முன் சக்கரத்தை எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்துவதினால் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகளிலும், முன்பக்க டிஸ்க் ப்ரேக்கிலும் நுட்பமான மாடிஃபிகேஷன்கள் தேவைப்பட்டுள்ளன.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

பின்பக்கத்தில் பேட்டரிக்கான பெட்டகம் கட்டிங் & வெல்டிங் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பைக்கின் பின்பக்க டர்ன் இண்டிகேட்டர்கள் சற்று இடம் மாற்றப்பட்டுள்ளன. இந்த அவெஞ்சர் 220 க்ரூஸ் எலக்ட்ரிக்-ஹைப்ரீட் பைக்கில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரின் திறன் 71 வோல்ட் மற்றும் லித்தியம்-இரும்பு பேட்டரியின் திறன் 35 ஆம்பியர் ஆகும்.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

பைக்கின் எலக்ட்ரிக் அமைப்பில் கண்ட்ரோலர் சிறிய திருத்தங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. அவெஞ்சர் 220 பைக்கின் வழக்கமான என்ஜின் அதன் டிரான்ஸ்மிஷன் அமைப்பின் மூலமாக பின் சக்கரத்தையும், புதிய எலக்ட்ரிக் மோட்டார் முன் சக்கரத்தையும் இயங்குகிறது. எலக்ட்ரிக் மோடில் அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

முழு-சிங்கிள் சார்ஜில் இந்த பைக்கில் 40இல் இருந்து 50கிமீ தொலைவிற்கு செல்ல முடியுமாம். அத்துடன் முக்கிய அம்சமாக இந்த அவெஞ்சர் ஹைப்ரீட் பைக்கில் எலக்ட்ரிக் வெர்சனில் ரிவர்ஸிலும் குறிப்பிட்ட வேகத்தில் செல்லலாம். இருப்பினும் இந்த அவெஞ்சர் 220 க்ரூஸ் எலக்ட்ரிக்-ஹைப்ரீட் பைக்கை பார்க்கும்போது ஒரு கேள்வி மட்டுமே எழுகிறது.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

வாகன பதிவு அலுவலகத்தால் அனுமதிக்கப்பட்ட எலக்ட்ரிக்-மாற்று தொகுப்பு தான் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது பொருத்தப்பட்ட பிறகு ஆர்டிஓ-வில் முறையான அனுமதி பெற்றப்பட்டதா என்பதுதான் அந்த கேள்வி ஆகும். ஏனெனில் இல்லையேல் ரூ.28 ஆயிரமும் வீண் தான்.

இது நல்லாருக்கே!! எலக்ட்ரிக்-ஹைப்ரீடில் பஜாஜ் அவெஞ்சர் 220 பைக் - செலவு வெறும் ரூ.28 ஆயிரம்

அதுமட்டுமின்றி இதனை சார்ஜ் ஏற்றுவதும் எவ்வாறு?, வழக்கமான வீட்டு உபயோக மின்சாரத்தையே பயன்படுத்தலாமா? எந்த மாதிரியான சார்ஜர் இதற்கு பயன்படுத்த வேண்டும்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லை. ஆனால் நிச்சயமாக இவற்றிற்கான பதில்களை தெரிந்து வைத்தில்லாமல் கஸ்டமைஸ்ட் திட்டத்தில் இறங்க மாட்டார்கள்.

Most Read Articles
English summary
Bajaj avenger modified to electric hybrid motorcycle find here all details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X