பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

பஜாஜ் பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகள் விற்பனையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

பஜாஜ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்சர் என்250 (Bajaj Pulsar N250) மற்றும் பல்சர் எஃப்250 (Bajaj Pulsar F250) ஆகிய இரண்டு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் மூலம் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் வரிசை பைக்குகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியது.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், பஜாஜ் பல்சர் என்250 பைக்கின் விலை 1.38 லட்ச ரூபாய் ஆகவும், பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் விலை 1.40 லட்ச ரூபாய் ஆகவும் இருந்தது. ஆனால் தற்போது பஜாஜ் பல்சர் என்250 பைக்கின் விலை 1.44 லட்ச ரூபாய் ஆகவும், பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் விலை 1.45 லட்ச ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 10 ஆயிரம் பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளை விற்பனை செய்து பஜாஜ் நிறுவனம் அசத்தியுள்ளது. இதன் மூலம் மிக வேகமாக 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டிய 250 சிசி மோட்டார்சைக்கிளாக பஜாஜ் பல்சர் 250 உருவெடுத்துள்ளது என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

இது பஜாஜ் நிறுவனத்தால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 250 சிசி பைக் கிடையாது. இந்தியாவின் 250 சிசி செக்மெண்ட்டில் ஏற்கனவே டோமினார் 250 (Bajaj Dominar 250) பைக்கை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் தங்களது கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) பிராண்டுகளின் கீழும் பஜாஜ் நிறுவனம் 250 சிசி பைக்குகளை விற்பனை செய்து கொண்டுள்ளது.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

ஆனால் பல்சர் என்ற பெயரின் காரணமாகவே பஜாஜ் நிறுவனத்தால் 250 சிசி செக்மெண்ட்டில் இந்த புதிய விற்பனை மைல்கல்லை எட்ட முடிந்ததாக கருதப்படுகிறது. இந்திய சந்தையை பொறுத்தவரை பல்சர் என்ற பெயருக்கே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. பஜாஜ் நிறுவனம் விற்பனையில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன் களமிறக்கிய முக்கியமான பைக்குகளில் ஒன்று டோமினார் 400 (Bajaj Dominar 400).

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

ஆனால் பஜாஜ் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு டோமினார் 400 பைக் விற்பனையாவதில்லை. ஒருவேளை பல்சர் என்ற பிரபலமான பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சரி, அது முடிந்து போன கதை.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

தற்போது பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளுக்கு வருவோம். இந்த இரண்டு பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அது 249.07 சிசி, சிங்கிள்-சிலிண்டர், 2 வால்வு, எஸ்ஓஹெச்சி, ஆயில் கூல்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்மில் 24.5 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 21.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த பைக்குகளின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதியையும் பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

அதே நேரத்தில் இந்த பைக்குகளில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பைக்குகளில், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது பிரபலமாகி வரும் ஸ்பிளிட் சீட் செட்-அப்பை இந்த பைக்குகள் பெற்றுள்ளன.

பல்சர் அப்படிங்கற பெயர் மட்டுமே போதும்... இதை விட பெருசா வேற என்னங்க வேணும்... தட்டி தூக்கிய பஜாஜ்!

விற்பனையில் சாதனை படைத்திருப்பதால், வரும் மாதங்களில் பஜாஜ் பல்சர் என்250 மற்றும் பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்குகளின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பல்சர் என்ற பெயருடன், சரியான விலை நிர்ணயம் போன்ற அம்சங்களும் இந்த பைக்குகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Bajaj delivers 10k units of pulsar 250 twins in india details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X