லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

பஜாஜ் நிறுவனம் அதன் மலிவு விலை மற்றும் அதிக மைலேஜ் தரக் கூடிய சிடி 100 (Bajaj CT 100) பைக்கை விற்பனையில் வெளியேற்றி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் இந்த அதிரடிக்கான காரணம் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தகவல் பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் குறித்த முழு விபரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்கலில் சிடி100 (Bajaj CT 100)-ம் ஒன்று. இந்த பைக் தற்போது விற்பனையில் இருந்து அகற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் டூ-வீலர்களில் இதுவும் ஒன்று. அதிக மைலேஜை இது வாரி வழங்கும் என்கிற காரணத்தினால் அடித்தட்டு மக்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

இந்த பைக்கின் விலையும் பல மடங்கு குறைவு ஆகும். எனவேதான் இந்த பைக் பட்ஜெட் இருசக்கர வாகன விரும்பிகளின் முதல் தேர்வாக இருக்கின்றது. இத்தகைய சூப்பரான பைக்கையே பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் இருந்து வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

இந்த தகவல் அனைத்து இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியிலும் பெருத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, அடித்தட்டு மக்களிடையே இந்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த பைக்கின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

இந்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்னதாகவே நடைபெற்றுவிட்டது. அப்போதில் இருந்து பஜாஜ் சிடி100 பைக்கை டீலர்கள் ஸ்டாக் எடுப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே முழுமையாக பைக்கை பஜாஜ் நிறுவனம் நாட்டில் இருந்து அகற்றியிருக்கின்றது. இதன் வெளியற்றத்திற்கான தெளிவான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இது தற்காலிகமான வெளியேற்றமே என்றே தெரிவிக்கின்றன. மேலும், வெகுவிரைவில் சில மாற்றங்களுடன் அது மீண்டும் விற்பனைக்கு வரலாம் என அது கூறுகின்றது. இந்த தகவல்கள் பட்ஜெட் டூ-வீலர் பிரியர்கள் மத்தியில் சற்றே மன ஆறுதலை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

பஜாஜ் சிடி 100 ரூ. 53,696 என்ற மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்தளவு மிகக் குறைவான விலையில் நாட்டில் எந்த பைக் மாடலும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜையும் வழங்கும். ஒரு பெட்ரோலுக்கு 70க்கும் அதிகமான கிமீ வரை இந்த பைக் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. அதேநேரத்தில், கவர்ச்சியான தோற்றத்தையும் இந்த பைக் கொண்டிருக்கும். குறைவான பேனல்களே இந்த பைக்கை அலங்கரிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தாலும், அதிக அழகானதாக பைக்கிற்கு அமைந்துள்ளது.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

இத்துடன், சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் விதமாக பஜாஜ் அதன் எஸ்என்எஸ் சஸ்பென்ஷன் செட்-அப்பை இப்பைக்கில் வழங்கியிருக்கின்றது. முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்க வீலில் ட்யூவல் ஸ்பிரிங் கொண்ட சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இவை அதிக சௌகரியமான ரைடிங்கை வழங்கும்.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

இந்த பைக்கில் 102 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.79 பிஎச்பி பவர் மற்றும் 8.34 என்எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைந்தே இந்த சூப்பரான திறனை மோட்டார் வழங்குகின்றது.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருமே... இந்த பைக்கை விற்பனையில் இருந்து வெளியேத்த எப்படிதான் மனசு வந்துச்சோ!..

மிக சிறந்த நிறுத்தத்திற்காக இரு வீல்களிலும் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பஜாஜ் சிடி 100 ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக விற்பனையில் இருந்தது. வெகு நாட்களாக மிக சிறப்பான விற்பனையைப் பெறும் பைக் மாடலாக இவை இருந்துக் கொண்டிருக்கின்றன என் குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Bajaj discontinued most affordable motorcycle ct 100 in india
Story first published: Thursday, May 26, 2022, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X