பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

பஜாஜ் பல்சர் என்250 மற்றும் எஃப்250 மோட்டார்சைக்கிள்களின் இரட்டை சேனல் ஏபிஎஸ் வெர்சன்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய 250சிசி பல்சர் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய பல்சர் என்160 பைக்கை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகளின் இரட்டை-சேனல் ஏபிஎஸ் வெர்சன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டையும் ப்ரோக்ளின் கருப்பு நிறத்தில் வாங்கலாம். இதே ப்ரோக்ளின் கருப்பு நிறமானது சமீபத்திய பல்சர் என்160 பைக்கிற்கும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

புதிய பல்சர் என்160 பைக் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் & இரட்டை-சேனல் ஏபிஎஸ் என இரு விதமான வேரியண்ட்களிலும் வழங்கப்படுவது இங்கு நினைவுக்கூரத்தக்கது. என்250 மற்றும் எஃப்250 பைக்குகளின் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வெர்சன்களை காட்டிலும் புதிய இரட்டை-சேனல் ஏபிஎஸ் வெர்சன்களின் விலைகள் வெறும் ரூ.5000 மட்டுமே அதிகமாகும்.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

அதாவது, இந்த பல்சர் 250சிசி பைக்குகளின் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வெர்சன்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1,43,680 மற்றும் ரூ.1,44,979 ஆக உள்ளன. இவற்றின் புதிய இரட்டை-சேனல் ஏபிஎஸ் வெர்சன்களின் ஆரம்ப விலை ரூ.1,49,978 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளின் அறிமுக விலைகளாக முறையே ரூ.1.38 லட்சம் மற்றும் ரூ.1.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

ஆனால் அதன்பின் இவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. கூடுதல் பாதுகாப்பிற்கு இரட்டை-சேனல் ஆண்டி-பிரேக் சிஸ்டம் மற்றும் புதிய ப்ரோக்ளின் கருப்பு நிற பெயிண்ட் தேர்வை தவிர்த்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

ப்ரோக்ளின் கருப்பு மட்டுமின்றி பஜாஜின் இந்த 250சிசி பல்சர் பைக்குகளை டெக்னோ க்ரே, ரேசிங் சிவப்பு மற்றும் நீல நிற பெயிண்ட் தேர்வுகளிலும் பெறலாம். இந்த இரு 250சிசி பல்சர் பைக்குகளில் என்250 ஆனது பேனல்களை அவ்வளவாக கொண்டில்லாத நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்காகும். அதுவே எஃப்250 ஆனது சற்று கூடுதல் அலங்கார பேனல்களை கொண்ட செமி-ஸ்போர்ட்ஸ் பைக்காகும். இது முன்பு விற்பனையில் இருந்த பல்சர் எஃப்220 பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

செயல்படுதிறனிற்கு என்250 & எஃப்250 இரண்டிலும் ஒரே மாதிரியான 249.07சிசி சிங்கிள்-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் SOHC இரட்டை-வால்வு, ஆயில்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 24.5 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

இந்த என்ஜினுடன் நிலையாக உதவி & ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் 5-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. பிரேக் பணியை இந்த பைக்குகளில் முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் 230மிமீ டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. இவற்றிற்கு துணையாக, ஏற்கனவே கூறியதுபோல் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் & இரட்டை-சேனல் ஏபிஎஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் மோனோஷாக்கும் உள்ளன. இந்த பல்சர் 250சிசி பைக்குகளில் சிறப்பம்சங்களாக எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 14 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

டயர்களின் அளவுகளை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் 100/80-17 அளவில் ட்யூப்லெஸ் டயரும், பின்பக்கத்தில் 130/70-17 அளவில் ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்படுகின்றன. இந்த பல்சர் 250 பைக்குகளில் ஓட்டுனர் இருக்கை ஆனது தரையில் இருந்து 795மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இவற்றின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 165மிமீ மற்றும் வீல்பேஸ், அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,351மிமீ ஆகும்.

பஜாஜ் பல்சர் 250சிசி பைக்குகளில் டபுள்-சேனல் ஏபிஎஸ் அறிமுகம்!! விலை ரூ.5,000 மட்டுமே அதிகமாம்!

சில தினங்களுக்கு முன்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கருப்பு நிறத்திலான பல்சர் என் 250 பைக்கின் படத்தை வெளியிட்டு இருந்தது. இதனால் பல்சர் என்250 மாடலில் பிளாக் எடிசன் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நம் எதிர்பார்ப்பிற்கெல்லாம் மாறாக, பல்சர் 250 பைக்குகளின் இரட்டை-சேனல் ஏபிஎஸ் வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Bajaj introduced dual channel abs system for pulsar n250 and f250 models with new colour option
Story first published: Saturday, June 25, 2022, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X