இந்தியாவின் மிக விலை குறைவான 125சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்! இத பாத்தா விலை குறைவானதுனு சொல்லவே முடியல!

மிக மிக விலை குறைவான 125 சிசி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனம் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

மலிவு விலை இருசக்கர வாகன உற்பத்திக்கு பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் பஜாஜ் (Bajaj), இந்திய சந்தையில் மிக மிக குறைவான விலைக் கொண்ட 125 சிசி பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சிடி 125எக்ஸ் (Bajaj CT 125X) மாடலையே பஜாஜ் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 71,354 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி இந்த மலிவு விலை 125சிசி பைக்கை பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மிகவும் முரட்டுத் தனமான தோற்றம், பன்முக சிறப்பு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் சிலவற்றால் இப்பைக்கை பஜாஜ் அலங்கரித்திருக்கின்றது. பைக்கின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு அதன் ஹெட்லைட் கவுலும், வி வடிவ டிஆர்எல்-களும்தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

இந்த டிஆர்எல் எல்இடி தரத்திலானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், சிறிய விஷரும் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. பட்ஜெட் விலைக் கொண்ட பைக்கில் இத்தனை வசதிகளா என நம்மை வாயை பிளக்கச் செய்யும் வகையில் இத்தனை அம்சங்களும் புதிய சிடி 125 எக்ஸ் பைக்கில் பஜாஜ் வழங்கியிருக்கின்றது. இதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பல சிடி 110 எக்ஸ் பைக்கில் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

ஆம், பஜாஜ் நிறுவனம் இந்த சிடி 110எக்ஸ் பைக்கை தழுவியே சிடி 125எக்ஸ் பைக்கையும் உருவாக்கியிருக்கின்றது. அதேவேலையில், இந்த பைக்கில் பிற கம்யூட்டர் பைக்குகளில் வழங்கப்பட்டிருக்கும் இணைப்பு வசதி வழங்கப்படாதது ஓர் குறையாக தென்படுகின்றது. ஹீரோ நிறுவனம் அதன் பேஷன் எக்ஸ்டெக் பைக்கிலும், ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் பைக்கிலும் இணைப்பு வசதி வழங்குகின்றது.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

இந்த இரு பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பஜாஜ் நிறுவனம் புதிய சிடி 125எக்ஸ் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பைக்கின் ஹெட்லேம்பாக ஹாலோஜென் ரக லைட்டே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், டர்ன் இன்டிகேட்டர் மற்றும் டெயில் லைட்டுகளில் பல்ப் வகை லைட்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

இதைத்தொடர்ந்து, அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், யுஎஸ்பி சார்ஜர், டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை சிடி 125எக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், பைக்கை ரைடை இனிமையானதாக மாற்றும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க், ட்வின் ஷாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் பொருட்டு 17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் 80 மற்றும் 100 பிரிவிலான டயர்கள் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

இந்த அம்சங்களினால் மலிவு விலை சிடி 125எக்ஸ் பைக் மிக சூப்பரான தயாரிப்பாக மாறியிருக்கின்றது. இந்த கூற்றை மேலும் ஸ்ட்ராங்காக்கும் வகையிலேயே இதன் எக்ஸ் ட்ரிம்மில் டேங்க் பேட், ரிப்பட் இருக்கை கவர், லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கான கேரியர், எஞ்ஜின் குவார்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களினாலேயே கூடுதல் ரக்கட் தோற்றத்தை சிடி 125எக்ஸ் பெற்றிருக்கின்றது.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இருசக்கர வாகனமே இது. எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும், எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் சரி, இப்பைக்கின் வாயிலாக மேற்கொள்ளலாம் என கூறப்படுகின்றது. பஜாஜ் நிறுவனம் இப்புதிய பைக்கில் 124.5 சிசி மோட்டாரை பஜாஜ் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 10.9 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 11 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக விலை குறைவான 125 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாம அறிமுகம் செஞ்சிருக்காங்க!

இதே பவர்ஃபுல் மோட்டாரே பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கிலும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், இந்த பைக்கை மூன்று விதமான நிற தேர்வுகளில் பஜாஜ் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அவை கிரீன் மற்றும் பிளாக் (Green and Black), ரெட் மற்றும் பிளாக் (Red and Black), ப்ளூ மற்றும் பிளாக் (Blue and Black) ஆகி நிற தேர்வுகளிலேயே சிடி 125எக்ஸ் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.

Most Read Articles
English summary
Bajaj launched low cost 125 cc bike ct 125 x in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X