யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்! தரமான சம்பவம் தயாரா இருங்க!

பஜாஜ் நிறுவனம் விரைவில் பல்சரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உண்மை நிலவரம் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

யாருமே எதிர்பார்த்திராத சம்பவம் விரைவில் இந்தியாவில் அரங்கேற இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இளைஞர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலாக பஜாஜ் பல்சர் இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகமாவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது உருவாகியுள்ளன.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தினார். அவர், "தங்கள் நிறுவனம் மின்சாரம் மற்றும் எரிபொருளில் இயங்கும் வாகனம் ஆகிய இரண்டையும் தயாரிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக" தெரிவித்தார்.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

பஜாஜ் நிறுவனம் தற்போது சேத்தக் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்பைக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தியை திறனைக் காட்டிலும் புக்கிங் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் வகையில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டுள்ளது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

இதன் விளைவாக உரிய நேரத்தில் டெலிவரி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கின்றது. இதனை சரிகட்டும் பொருட்டு, அதாவது, சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் நிறுவனம் அண்மையில் புனேவில் உள்ள ஆர்குடியில் புதிய ஆலையை திறந்து வைத்தது. பிரத்யேகமாக எலெட்க்ரிக் வாகன உற்பத்திக்கென இந்த ஆலை தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

இதுமட்டுமின்றி, மின்வாகனம் சார்ந்த பணிகளையும் கணிசமாக உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் யூலூ உடன் கூட்டணியைத் தொடங்கியது. இந்த இணைவின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களை யூலூவிற்கு அது வழங்க இருக்கின்றது. வழங்கப்படும் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் நிறுவனம் வாடகை, டெலிவரி போன்ற பொது சேவையில் ஈடுபடுத்தும் என யூகிக்கப்படுகின்றது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் பேட்டி வெளியாகியுள்ளது. அவர் வெளியிட்டிருக்கும் தகவலின் வாயிலாக பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனம் இரண்டின் மீதும் பஜாஜ் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

நிறுவனம் பல்சரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மற்றும் கேடிஎம்-ஹஸ்க்வர்னா ஆகியவற்றின் மின்சார வாகனங்களையும் தற்போது பரீசிலனையில் வைத்துள்ளது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகலாம் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

இவற்றில் பல்சர் எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகை நிறுவனத்திற்கு கூடுதல் பக்க பலமாக அமையும். இந்த இருசக்கர வாகனத்திற்கு ஏற்கனவே இந்திய சந்தையில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் இதன் மின்சார வருகை பற்றி சொல்லவா வேண்டும். நிச்சயம் பஜாஜிற்கு எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இந்த செயல் மிகப் பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

சேத்தக்கை மின்சார வாகனங்களுக்கான தனி பிராண்டாக மாற்றும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

யாருமே எதிர்பார்த்திராத தகவல்... எலெக்ட்ரிக் பல்சரை உருவாக்கும் திட்டத்தில் பஜாஜ்... அப்படிபோடு தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்தியாவில் எரிபொருளால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் இறுதி நாட்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு தற்போது வரை ஏற்படவில்லை. அதேவேலையில், எலெக்ட்ரிக் அதிக வேகத்தில் பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையினாலயே மின்சார வாகனம் மற்றும் பெட்ரோல் வாகனம் என இரண்டிலும் கவனத்தைச் செலுத்த பஜாஜ் தயாராகியிருக்கின்றது.

Source: auto car india

Most Read Articles

English summary
Bajaj planning to launch pulsar ev here is full details
Story first published: Tuesday, June 21, 2022, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X