2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக்கை வாங்க முடியாது!

பஜாஜ் (Bajaj) நிறுவனம் அதன் பிரபல பல்சர் (Pulsar) பைக்கின் குறிப்பிட்ட மாடலை விற்பனையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. இப்பைக்கின் வெளியேற்றம் அதன் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எந்த மாடலை, எதற்காக வெளியேற்றியது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

பஜாஜ் (Bajaj) நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான பல்சர் 180 (Pulsar 180) பைக்கை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த பைக் பற்றிய அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் இந்த மாதிரியான செயலால் இனி இந்த இருசக்கர வாகனத்தை இந்தியாவில் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

திடீரென இந்த பிரபல இருசக்கர வாகன மாடலை வெளியேற்றியதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேவேலையில், சமீப காலமாக குறைந்து வரவேற்பு இப்பைக்கின் வெளியேற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. சமீப காலமாக இந்திய சந்தையில் புதுமுக இருசக்கர வாகனங்கள் போர் வீரர்களின் படையெடுப்பைப் போல் தொடர்ச்சியாக அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

இந்த நிலையே பல்சர் 180 பைக்கிற்கான வரவேற்புக் குறைய காரணமாக இருக்கின்றது. இதேபோன்று முன்பும் வரவேற்புக் குறைந்து காணப்பட்ட காரணத்தினாலேயே 2019ம் ஆண்டிலும் இந்த வாகனம் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இவ்வாகனம் விற்பனைக்கான அறிமுகத்திற்கு பின்னர் செய்யப்பட்ட முதல் வெளியேற்றம் ஆகும்.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

அப்போது இதன் வெளியேற்றத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் விதமாக செமி-ஃபேர்டு 180எஃப் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக மீண்டும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியேற்றப்பட்ட பல்சர் 180 பைக் இந்தியாவில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வருகையைத் தொடர்ந்து 180 எஃப் மாடல் வெளியேற்றம் செய்யப்பட்டது.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

ஆமாங்க, இந்த பைக் மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாகவே மீண்டும் பல்சர் 180 மறு அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டும் தோற்றத்தில் கணிசமான அளவு வித்தியாசங்களைக் கொண்டிருந்தாலும், எஞ்ஜினைப் பொருத்தவரை இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அதாவது, பல்சர் 180 பைக்குகளில் 178.6 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 17 எச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 14.2 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடனேயே இந்த மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சங்களாக பல்சர் 180 பைக்கில் ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

இதுதவிர, சிறந்த இயக்க அனுபவத்தை பல்சர் 180 வழங்கும் பொருட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக 280 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 230 மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்த்து ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

இந்த அம்சம் மிகவும் ஷார்ப்பான மற்றும் பாதுகாப்பான நிறுத்தத்திற்கு உதவியாக இருக்கும். இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட வாகனத்திற்கு பஜாஜ் நிறவனம் தற்போது முற்று புள்ளி வைத்திருக்கின்றது. இதன் வெளியேற்றத்தால் பல்சர் 180 பிரியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நிறுவனம் இதன் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வேறு ஏதேனும் ஓர் புதுமுக மாடலை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2வது முறை வெளியேத்துறாங்க... திரும்ப வருமாங்குறது சந்தேகம்தான்... இனி இந்த மாடல் பல்சர் பைக் வாங்க முடியாது!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆகையால், பல்சர் 180 வெளியேற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை பஜாஜ் நிறுவனம் நிரப்புமா அல்லது அப்படியே விட்டுவிடுமா என்கிற சந்தேகம் நம் அனைவரின் மத்தியிலும் எழும்பியிருக்கின்றது. அதேவேலையில், நிறுவனம் பல்சர் 180 பைக் மாடலை வெளியேற்றியிருந்தால் இன்னும் பல்வேறு சிசி பிரிவுகளில் பல்சர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது, பல்சர் 180 பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

Most Read Articles
English summary
Bajaj pulsar 180 discontinued again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X