என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் அதன் பல்சர் துணை பிராண்டை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு நாடு முழுவதும் பல்சர் பைக்குகள் பிரபலமாகி உள்ளன.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

2000ஆம் துவக்கத்தில் இருந்து வரவேற்பை காண துவங்கிய பல்சர் பைக்குகளின் விற்பனை சமீப மாதங்களாக வெகுவாக குறைய துவங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள கடந்த 2022 பிப்ரவரி மாத பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

இந்திய சந்தையில் 125சிசி; 150சிசி; 160, 180 & 200சிசி; 220எஃப் & 250 என நான்கு பிரிவுகளில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த மாதத்தில் 54,951 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் சுமார் 32.54% அதிகமாக 81,454 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

அதேபோல் இந்த எண்ணிக்கை 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 17.79% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 66,839 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 125சிசி பல்சர் பைக்குகளை பொறுத்தவரையில், இந்த பிரிவில் கடந்த மாதத்தில் மொத்தம் 30,006 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 பிப்ரவரியில் 39,323 பல்சர் 125 பைக்குகளும், கடந்த ஜனவரியில் 44,181 பல்சர் 125 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

இந்த வகையில் பார்கும்போது, பல்சர் 125 பைக்குகளின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 23.69 சதவீதமும், மாதம்- மாதம் ஒப்பிடுகையில் 32.08 சதவீதமும் குறைந்துள்ளது. மொத்த பல்சர் பைக்குகளின் கடந்த மாத விற்பனையில் 125சிசி மாடல்களின் பங்கு மட்டுமே 54.61% ஆகும். பல்சர் 150 பைக்குகள் கடந்த மாதத்தில் 17,804 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இது 25,550 பல்சர் 150 பைக்குகள் விற்கப்பட்டு இருந்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 30.32% குறைவாகும்.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

என்றாலும், 2022 ஜனவரி மாதத்தை காட்டிலும் 58.41% அதிகமாகும். ஏனென்றால், கடந்த ஜனவரியில் 11,239 பல்சர் 150 பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த ஒரு விஷயமே கடந்த மாத பல்சர் பைக்குகளின் விற்பனையில் பஜாஜ் ஆட்டோவிற்கு நல்ல விஷயமாக இருக்கும். பல்சர் 160, 180 & 200சிசி என இவை மூன்றும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதத்தில் 4,666 யூனிட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

ஆனால் 2021 பிப்ரவரியில் இந்த பிரிவில் 11,643 யூனிட் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. இதன்படி சுமார் 59.92 சதவீதமும், 5,407 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த 2022 ஜனவரியை காட்டிலும் 13.70 சதவீதமும் பல்சர் 160, 180, 200 பைக்குகளின் விற்பனை குறைந்துள்ளது. 220எஃப் மற்றும் என்250 & எஃப்250 மாடல்கள் அடங்கும் பிரிவில் இருந்து கடந்த மாதத்தில் 2,475 யூனிட் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

ஆனால் 2021 பிப்ரவரியில் இந்த பிரிவில் 4,938 யூனிட் பைக்குகளின் விற்பனை பதிவாகி இருந்தது. இத்தனைக்கும் இதன் பிறகே கடந்த ஆண்டு இறுதியில் என்250 & எஃப்250 என்ற புதிய 250சிசி பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் விளைவாக 2022 பிப்ரவரியில் 6,012 யூனிட் பைக்குகளை இந்த பிரிவில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரியில் இதனை காட்டிலும் சுமார் 58.83% குறைவாக வெறும் 2,475 யூனிட் பைக்குகளின் விற்பனையே பதிவாகி உள்ளது.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில், பல்சர் 160, 180 & 200 பிரிவு முன்னிலை வகிக்கிறது. இந்த பிரிவில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 13,518 பைக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 பிப்ரவரியில் இந்த பிரிவில் இருந்து 14,689 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து பல்சர் 150 பைக்குகள் 7,788 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

என்னங்க இப்படி ஆயிடுச்சு... இந்தியாவில் பெரிய அளவில் சரியும் பல்சர் பைக்குகளின் விற்பனை!!

ஆனால் 2021 பிப்ரவரியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பல்சர் 150 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. பல்சர் 125 பைக்குகள் கடந்த மாதத்தில் 4,065 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் ஏற்றுமதியில் பெரியதாக மாற்றமில்லை. ஆனால் 2022 ஜனவரியில் 4,224 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த பல்சர் 220 & 250 பைக்குகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 772 யூனிட்கள் மட்டுமே இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Bajaj pulsar sales breakup feb 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X