திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் 125சிசி-யில் இருந்து அதிகப்பட்சமாக 250சிசி வரையிலான பல்சர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. குறைந்தப்பட்சமாக ரூ.66,586 என்கிற விலையில் இருந்து சந்தைப்படுத்தப்பட்டு வரும் பஜாஜ் பல்சர் பைக்குகள் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து மொத்தம் 86,979 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 18% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 1,06,068 பல்சர் பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்து இருந்தது.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

இருப்பினும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு ஏற்றுமதிகள் இதற்கு முந்தைய 2021 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 1.42% அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த மாதத்தில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 1,216 பல்சர் பைக்குகள் அதிகமாக இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

உள்நாட்டில் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை 59,225 ஆகும். 86,979 யூனிட்களில் மீதி 27,754 யூனிட் பல்சர் பைக்குகள் கடந்த மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பஜாஜ் பல்சர் பைக்குகளின் உள்நாட்டு விற்பனை ஆனது 2020 டிசம்பர் மற்றும் 2021 நவம்பர் என வருடம்-வருடம் ஒப்பீடுகையிலும், மாதம்-மாதம் ஒப்பீடுகையிலும் கடந்த மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

ஏனெனில் 2020 டிசம்பர் மாதத்தில் கடந்த மாதத்தை காட்டிலும் 14.22% அதிகமாக 69,044 பல்சர் பைக்குகளும், 2021 நவம்பரில் 4.34% அதிகமாக 61,913 பல்சர் பைக்குகளும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. உள்நாட்டில் வழக்கம்போல் பல்சர் 125சிசி பைக்குகளே அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் மொத்தம் 27,900 பல்சர் 125சிசி பைக்குகள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

இவ்வாறு அதிகளவில் விற்பனையாகும் பல்சர் பைக்குகளாக விளங்கினாலும், பல்சர் 125 பைக்குகளின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 2020 டிசம்பர் மற்றும் 2021 நவம்பர் மாதங்களில் 42 ஆயிரத்தை கடந்திருந்தது. இவ்வாறு ஒருபக்கம் 125சிசி பல்சர் பைக்குகளின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்க, மறுப்பக்கம் பல்சர் 150 பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் உயர்வை கண்டுள்ளது.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

2020 டிசம்பர் மாதத்திலும், 2021 நவம்பர் மாதத்திலும் முறையே 19,958 மற்றும் 13,084 பல்சர் 150 பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் இவற்றை காட்டிலும் முறையே 36.13% மற்றும் 107.65% அதிகமாக 27,169 பல்சர் 150 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனால் பல்சர் 125 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கைக்கும், பல்சர் 150-இன் விற்பனை எண்ணிக்கைக்கும் சில நூறுகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

அதேபோல் பல்சர் 220எஃப்/ 250 பைக்குகளின் விற்பனையும் 2021 நவம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் சுமார் 306.99% உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 644 பல்சர் 220எஃப்/ 250 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஒரேடியாக 2,621 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதற்கு பஜாஜ் பல்சர் பிராண்டில் இருந்து கடந்த 2021 அக்டோபர் மாத இறுதியில் புதிய 250சிசி பைக்குகளாக அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்250 & என்250 மாடல்களின் வருகையினை முக்கிய காரணமாக சொல்லலாம்.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

அக்டோபர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இவற்றின் டெலிவிரிகள் கடந்த நவம்பர் மாத மத்தியில்தான் துவங்கின. இருப்பினும் 2020 டிசம்பர் மாதத்தில் பல்சர் 220எஃப் பைக்குகள் மட்டுமே 4,498 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், பல்சர் 220எஃப்/ 250 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் 41.73% குறைந்துள்ளது.

திடீரென ஏற்றம் காணும் பல்சர்150 பைக்குகளின் சேல்ஸ்- புதிய பல்சர்250 எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன தெரியுமா

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் மொத்தம் 5,874 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த பல்சர் 160, 180, 200 பைக்குகள் கடந்த டிசம்பர் மாதத்தில் வெறும் 1,535 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இதில் இருந்து பல்சர் 160, 180 & 200 பைக்குகளை வாங்க நினைத்திருந்தோரில் பெரும்பகுதியினர் பல்சர் 250 பைக்குகளின் பக்கம் சென்றிருப்பதை அறிய முடிகிறது. 2020 டிசம்பரிலும் இவற்றின் விற்பனை எண்ணிக்கை 1,902 என்ற அளவிலேயே இருந்தது.

Most Read Articles
English summary
Bajaj pulsar sales saw de growth both in domestic and export markets
Story first published: Wednesday, January 26, 2022, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X