விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

புதிய பஜாஜ் சிடி125எக்ஸ் (Bajaj CT 125X) மோட்டார்சைக்கிள்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

இந்தியாவில் மிக பெரும் 2-வீலர் பிராண்ட்களுள் ஒன்று பஜாஜ் ஆட்டோ எனலாம். 2-வீலர்கள் மட்டுமின்றி, புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3-வீலர்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பஜாஜ் ஆட்டோவின் அடையாளம் என்று பார்த்தால், பல்சர் தான்.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

இருப்பினும் இந்த பிராண்டின் சிடி பைக்குகளும் வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக உள்ளது. குறிப்பாக குறைவான விலையில் மோட்டார்சைக்கிளை வாங்க நினைக்கும் எளிய மக்களின் முதல் தேர்வு பஜாஜ் சிடி என கூட சொல்லலாம். ஏனெனில் அதிகளவில் அலங்கார பேனல்களை கொண்டில்லாத சிடி பைக்குகள் 100சிசி & 110சிசி-களில் கிடைக்கின்றன.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

ஆனால் 125சிசி-யில் பட்ஜெட் பைக்கை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்வதில்லை என்கிற சிறிய குறை இருந்து வந்தது. பல்சர் 125 விற்பனையில் இருந்தாலும், எளிய மக்களை பொறுத்தவரையில் பல்சர் 125 சற்று விலைமிக்கதே. ஆனால் தற்போது இந்த குறையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிடி 125எக்ஸ் பைக்கின் மூலமாக நிவர்த்தி செய்துள்ளது.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிடி125எக்ஸ் பைக்கின் அறிமுகம் குறித்து தற்போதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தற்போது சிடி125எக்ஸ் பைக் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே சிடி110எக்ஸ் மோட்டார்சைக்கிளை முயற்சி செய்து பார்த்தது. வழக்கமான சிடி110 பைக்கின் அலங்கரிப்புகள் சேர்க்கப்பட்ட வெர்சனாக சிடி110எக்ஸ் களமிறக்கப்பட்டது.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

ஆனால் சிடி110எக்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் எடுப்பட்டதா என கேட்டால், பெரியதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பஜாஜ் நிறுவனம் 125சிசி என்ஜின் உடன் மீண்டும் அதே பாணியை முயற்சி செய்து பார்க்கிறது. புதிய சிடி125எக்ஸ் பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், 'V' வடிவிலான எல்இடி டிஆர்எல் உடனான ஹெட்லைட் அமைப்புடன் முன்பக்கம் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

ஹெட்லைட்டை பாதுகாக்கும் விதமாக இரு உலோக கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் முன்பக்கத்தில் சிறிய விஸரும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஆனது ஃபோர்க் கெய்டர்களை கொண்டுள்ளது. முன்பக்க ஹெட்லைட், பின்பக்க டெயில்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் அனைத்தும் ஹலோஜன் பல்புகளாக உள்ளன.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

தோற்றத்தில் சிடி110எக்ஸ் மற்றும் சிடி125எக்ஸ் பைக்குகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை என்று பார்த்தால், பெட்ரோல் டேங்கில் ரப்பர் க்ரிப் மற்றும் பின் இறுதிமுனையில் பொருட்களை கட்டி எடுத்து செல்வதற்கான ராக்கை சொல்லலாம். புதிய சிடி125எக்ஸ் பைக்கை சுற்றிலும் பெரும்பாலான பேனல்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருப்பது நம்மை கவர்ந்திழுக்கிறது.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

இருக்கை கவர்களில் தையல்கள் வெளிப்படையாக தெரிகின்றன. பின்பக்கத்தில் சஸ்பென்ஷனுக்கு இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டிருக்க, பின் இருக்கை பயணி கால் வைத்து கொள்வதற்கான கேரியர் சரியாக எக்ஸாஸ்ட் குழாய்க்கு மேலாக பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கிற்கு கீழே, பைக் கீழே விழுந்தால் பாதுகாக்கும் கம்பிகளில் ரப்பர்கள் வழங்கப்பட்டிருப்பதை இந்த படங்களில் காண முடிகிறது.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

மற்றப்படி ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்கில் வழங்கப்பட்டிருப்பது போன்று எந்தவொரு மொபைல்போன் இணைப்பு வசதியும் இந்த புதிய சிடி125எக்ஸ் பைக்கில் வழங்கப்படவில்லை. இந்த பைக்கில் மைய கன்சோல் பகுதியில் வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரே தொடரப்பட்டுள்ளது. புதிய சிடி125எக்ஸ் பைக்கின் என்ஜின் குறித்த எந்தவொரு தகவலும் தற்போதைக்கு இல்லை.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

பல்சர் 125 மற்றும் பல்சர் என்எஸ்125 பைக்குகளில் வழங்கப்படும் அதே 125சிசி என்ஜின் தான் இந்த புதிய 125சிசி சிடி பைக்கிலும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11.6 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..

இதே 125சிசி என்ஜின் தான் டிஸ்கவர் 125 பைக்கிலும் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் சிடி110எக்ஸ் பைக்கில் 4-ஸ்பீடு கியர்பாக்ஸே கொடுக்கப்படுகிறது. புதிய பஜாஜ் சிடி125எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

English summary
Bajaj ready to launch the all new ct 125x motorcycle in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X