ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் புதியதாக இரு மோட்டார்சைக்கிள்கள் உருவாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான ஸ்பை படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் இந்த புதிய டிரையம்ப் பைக்குகளை பற்றி தெரிய வந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் நீண்ட மாதங்களாக கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில் புதிய இரு டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கள் தயாராகி வருவதாகவும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவினை கீழே காணலாம். இதில் ஒரு நாக்டு பைக்கையும், ஒரு ஸ்க்ராம்ப்ளர் பைக்கையும் காணலாம்.

புதியதாக வெளிவரவுள்ள இந்த இரு டிரையம்ப் பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே உள்ளன. இவற்றில் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆதலால் இவை இரண்டும் மலிவான டிரையம்ப் பைக்குகளாக களமிறக்கப்படலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய டிரையம்ப் பைக்குகள் ராயல் என்பீல்டின் மீட்டியோர்க்கு சவால் அளிக்கக்கூடிய வகையில் இருக்குமாம்.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

Image Courtesy: Motobo And MCN

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நமது ராயல் என்பீல்டிற்கு சவாலானதாக விளங்க போராடி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே தயாரிக்கிறது இந்த இரு புதிய பைக்குகள். முக்கோண வடிவிலான சட்டகத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள இவற்றின் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அமைப்பானது டிரையம்பின் பொன்னேவில்லே மோட்டார்சைக்கிள்களை ஞாபகப்படுத்துகிறது.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

பைக்கின் ஹேண்டில்பாருக்கு கீழே பெரிய அளவில் ரேடியேட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் இது திரவ-குளிர்விப்பு என்ஜின் ஆகும். கேடிஎம் பைக்குகளில் வழங்கப்படுவதை போல் 4-வால்வுகள் இந்த என்ஜின் அமைப்பில் இருக்கும். ஆனால் கேடிஎம் பைக்குகளில் சங்கிலி ஆனது இடதுப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய டிரையம்ப் பைக்குகளில் சுவாரஸ்யமானதாக வலதுப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

இவ்விரு டிரையம்ப் பைக்குகளையும் எக்ஸாஸ்ட்-குழாய் அமைப்பு முக்கியமானதாக வித்தியாசப்படுத்துகிறது. இதில் ஸ்க்ராம்ளர் பைக்கில் இரட்டை எக்ஸாஸ்ட்-குழாயினை டிரையம்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட இதே மாதிரியான எக்ஸாஸ்ட்-குழாய் அமைப்பினை தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4-வால்வு மோட்டார்சைக்கிளும் கொண்டுள்ளது. இது எத்தகைய அளவுடைய என்ஜின் என்பது துல்லியமாக தெரியவில்லை. 200- 400சிசி என்ஜினாக இருக்கலாம்.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

எதிர்காலத்தில் கேடிஎம் பைக்குகளை போன்று இதனை காட்டிலும் அதிக சிசி கொண்ட என்ஜின்களுடனும் இந்த டிரையம்ப் நாக்டு & ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் கொண்டுவரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம் இவை கேடிஎம் பைக்குகளின் என்ஜின்களில் இருந்தும் வரையறுக்கப்படலாம். இந்த பஜாஜ்- டிரையம்ப் பைக்குகளின் உருவாக்கத்தில் கேடிஎம் சிஇஓ ஸ்டீவன் பையருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இதற்கும் வாய்ப்புள்ளது.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

கேடிஎம் பைக்குகளை போன்று ட்ரெல்லிஸ் சட்டகத்தில் இந்த புதிய டிரையம்ப் பைக்குகள் உருவாக்கப்படவில்லை. மாறாக, சமீபத்திய அறிமுகமான பஜாஜ் பல்சர் 250 பைக்குகளின் குழாய் இரும்பு சட்டகத்தின் அடிப்படையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் பின்பக்கத்தில் போல்ட் துணை ஃப்ரேம்களை கொண்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

இருப்பினும் ஸ்க்ராம்ப்ளர் மாடலில் நீண்ட டிராவல் உடன் சஸ்பென்ஷன் அமைப்பை எதிர்பார்க்கிறோம். பின்பக்கத்தில் சஸ்பென்ஷனுக்கு, பெரிய அளவிலான டிரையம்ப் பைக்குகளில் வழங்கப்படுவதை போன்று இரட்டை ஷாக் கொடுக்க வாய்ப்பில்லை. இந்த படங்களிலும் இவற்றின் சோதனை மாதிரிகள் பின் சஸ்பென்ஷன் யூனிட்களாக மோனோஷாக்கையே கொண்டுள்ளன.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

பிரேக்கிங் பணியை கவனிக்க முன்பக்கத்தில் 4-பிஸ்டன் காலிபர் உடன் சிங்கிள் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இரண்டிலும் அலாய் சக்கரங்கள் தான். இருப்பினும் புதிய ஸ்க்ராம்ப்ளர் டிரையம்ப் பைக்கில் முன்பக்கத்தில் சற்று பெரியதான 19-இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் மெட்ஸெலெர் காரோ ஸ்ட்ரீட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை உடைக்க தயாராகும் இரு புதிய டிரையம்ப் பைக்குகள்!! மலிவான விலையில் வரவுள்ளதாம்!

நாக்டு தோற்றத்தில் இருக்கும் ஸ்ட்ரீட் பைக்கில் எத்தகைய டயர்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், இந்த புதிய விலை குறைவான டிரையம்ப் பைக்குகளில் ஓட்டுனர் இருக்கை நன்கு உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், தரையில் இருந்து இவற்றின் இருக்கைகள் 830- 840மிமீ உயரத்தில் இருக்கலாம். இந்த புதிய பைக்குகளின் முன்பக்கத்தில் சிறிய அளவிலான என்ஜின் வழங்கப்பட்டிருப்பதை சொல்லியே ஆக வேண்டும்.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Bajaj triumph motorcycles new spy pictures reveal fresh details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X