இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேரல் மோட்டார்ஸின் வெலோக்-இ என்ற பெயரிலான இரட்டை-பயன்பாட்டு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான பேரல் மோட்டார்ஸ் (Barrel Motors) அதன் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன வடிவமைப்பில் ஈடுப்பட்டு வருகிறது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சாதாரண சாலை மற்றும் ஆஃப்-ரோடு என இரு விதமான பயன்பாட்டிற்கும் ஏற்ற அதி-செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பில் பேரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் இவ்வாறான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாராகுவது இதுவே முதல்முறை. வெலோக்-இ என அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பொது விற்பனைக்கு 2024ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், நமக்கு பரீட்சையமான, அனைவரையும் கவரக்கூடிய வகையிலான ஸ்டைலை வெலோக்-இ கொண்டுள்ளது.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

இதன் தோற்றத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஹீரோ எக்ஸ்பல்ஸ் மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குகள் ஞாபகத்திற்கு வரலாம். வெலோக்-இ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இன்னும் முன்மாதிரி நிலையிலேயே உள்ளது. அதாவது இதன் வடிவமைப்பு பணிகள் இன்னமும் இறுதிக்கட்டத்தை அடையவில்லை. இதற்கு இன்னும் 1இல் இருந்து 1.5 வருடங்கள் வரையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆகலாம்.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

இதுகுறித்து பேரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வான கிரிதர் சுந்தரராஜன் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் உருவாக்குவது இரட்டை-பயன்பாட்டு எலக்ட்ரிக் பைக் ஆகும், இது இந்தியாவில் முதல்முறைகளுள் ஒன்று. நாங்கள் இதனை (வெலோக்-இ) ஹீரோ எக்ஸ்பல்ஸ் மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு மத்தியில் நிலைநிறுத்தவுள்ளோம்.

இந்த பைக்கினை கேடிஎம்-இன் டார்க் திறனுக்கு இணையாக, அதேநேரம் 200சிசி-ஐ காட்டிலும் சிறந்ததாக கொண்டுவர விரும்புகிறோம்" என்றார். மேலும், வெலோக்-இ பைக்கின் இயக்குத்தளம் மற்றும் மென்பொருள் ஆனது பல்வேறு பயன்பாட்டளர்களுக்கு ஏற்றதாக, சந்தையின் தற்போதைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் எனவும் கிரிதர் தெரிவித்துள்ளார்.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

இதனாலேயே, எல்லை பகுதிகளில் இராணுவ வீரர்களின் ரோந்து பணிகளுக்கான வாகனமாக வெலோக்-இ இரட்டை-பயன்பாட்டு பைக்கை சந்தைப்படுத்தவும் பேரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டின் எல்லை ரோந்து வாகனமாக மட்டுமின்றி, பல்வேறு ஆஃப்-ரோடு பணிகளுக்கும் இந்த எலக்ட்ரிக் பைக்கை எதிர்காலத்தில் வழங்க பேரல் மோட்டார் விரும்புகிறது. இதற்கேற்ப, சகதி, மணல் மற்றும் பனி ஆகியவற்றில் பயணிப்பதற்கு ஏற்ற பைக்காக வெலோக்-இ விளங்குகிறது.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

வழக்கமான நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வேரியண்ட் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த அதி-செயல்திறன்மிக்க வேரியண்ட் என வெலோக்-இ எலக்ட்ரிக் பைக்கை 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்த பேரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக அட்வென்ச்சர் டூரிங் மற்றும் நெடுந்தூர டூரிங் என இரு விதமான பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் நுழைய முடியும் எனவும் இந்த பெங்களூர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

மற்றப்படி, இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட உள்ள எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி குறித்த விபரங்கள் எதையும் பேரல் மோட்டார்ஸ் தற்போதைக்கு வெளியிடவில்லை. இருப்பினும் வெலோக்-இ பைக்கின் அதிகப்பட்ச சிங்கிள்-சார்ஜ் ரேஞ்ச் 150கிமீ-ஆக இருக்கலாம் என கிரிதர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். பேரல் மோட்டார்ஸின் புதிய வெலோக்-இ பைக்கின் தோற்றம் வெளிநாட்டு இ-பைக்குகளை மிஞ்சக்கூடியதாக உள்ளது.

இப்படியொரு எலக்ட்ரிக் பைக் இந்தியாவிலா!! பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தரமான தயாரிப்பு!

ஆனால் அதேநேரம், இந்த எலக்ட்ரிக் பைக் கிட்டத்தட்ட 90% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டே உருவாக்கப்பட உள்ளது. இவ்வளவு ஏன், வெலோக்-இ பைக்கிற்கான பேட்டரி தொகுப்புகள் மற்றும் பேட்டரி மேலாண்மை அமைப்பிற்கான கண்ட்ரோலர்கள் கூட உள்நாட்டு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தே பெறப்பட உள்ளன. மீதி 10 சதவீத பாகங்களை மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பேரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போதுதான் துவங்கப்பட்டுள்ள பேரல் மோட்டார்ஸ் நிறுவனம் பொறியியலாளர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்தும், மற்ற நிபுணத்துவம் வாய்ந்தவர்களை மஹிந்திரா மற்றும் உலகின் மற்ற முக்கிய இவி தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கூறியதுதான், பேரல் மோட்டார்ஸின் வெலோக்-இ எலக்ட்ரிக் பைக் இந்தியாவிற்கு மிகவும் புதியது. இதனாலேயே நம் நாட்டில் இதற்கு விற்பனையில் போட்டி மாடல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.இவ்வளவு ஏன், உலகளவில் கூட எங்களுக்கு தெரிந்தவரையில் ஐரோப்பாவில் ஸீரோ எஃப்.எக்ஸ்.இ என்ற பெயரில் ஒரேயொரு அட்வென்ச்சர் பைக் உள்ளது.

Most Read Articles
English summary
Barrel veloc e electric dirt bike soon to launch will serve indian army patrolling
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X