'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை லட்சத்துக்கும் கம்மி!

பென்லிங் (Benling) நிறுவனம் அதன் பிலீவ் எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இளைஞர்களைக் கவரும் வகையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

குருகிராமை மையமாகக் கொண்டு மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு நிறுவனம் பென்லிங் (Benling). இந்நிறுவனம் இந்தியாவின் 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. 'பிலீவ்' (Believe) எனும் பெயரில் இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. 'நம்புங்க' எனும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

ஆமா, எதற்கு நம்பணும்?... சமீப காலமாக மின்சார இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக தீ விபத்தில் சிக்கிய வண்ணம் இருக்கின்றன. சார்ஜ் ஏற்றும்போது, சாலையில் சென்றுக் கொண்டிருக்கும், ஏன், சில சமயங்களில் சும்மா நிறுத்தி வைத்திருந்த நேரங்களில்கூட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் திடீரென தீ விபத்தைச் சந்தித்திருக்கின்றன. இத்தகைய ஓர் சம்பவத்தை சந்தித்துவிடுமோ என்கிற அச்சம் இல்லாமல் பயணிக்கலாம் என்பதை தெரியப்படுத்தும் விதமாக பென்லிங் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பிலீவ் எனும் பெயரை வைத்திருக்கின்றது.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இந்த வாகனம் ரூ. 97,520 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். மேஜிக் கிரே, பர்ப்பில், பிளாக், ப்ளூ, மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களிலேயே பென்லிங் பிலீவ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

நிறுவனம் ஏற்கனவே 3 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைக்காக தயார் செய்துவிட்டது. இன்னும் 9 ஆயிரம் யூனிட்டுகளை வரும் நவம்பருக்குள் உற்பத்தி செய்து வெளியேற்ற இருப்பதாக பென்லிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். ஈகோ மோடில் பயணிக்கும்போது மட்டுமே இந்த உச்சபட்ச ரேஞ்ஜை பெற முடியும்.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இதுதவிர மற்றுமொரு மோடையும் பென்லிங் பிலீவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கியிருக்கின்றது. இந்த மோடில் பயணிக்கும்போது 70 கிமீ முதல் 75 கிமீ வரையிலான ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக புதிய தலைமுறை பேட்டரிகளை பென்லிங் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இந்த பேட்டரியை தனியாக கழட்டி மாட்டிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், தனியாக கழட்டி மாட்டிக் கொள்ள முடியும். இத்துடன், எல்எஃப்பி பேட்டரி உடன் மைக்ரோ சார்ஜர் மற்றும் ஆட்டோ கட்-ஆஃப் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த பேட்டரியை வெறும் நான்கே மணி நேரத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுக்காகவும், அதிக ரேஞ்ஜை தருவதற்காகவும் மேலே பார்த்த தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, மிக முக்கியமான அம்சமாக ஸ்மார்ட் பிரேக் டவுண் அசிஸ்ட் அம்சமும் இந்த இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது பிரேக் டவுண் காலத்தில் ஸ்மூத்தாக 25கிமீ தூரம் வரை பயணிக்க உதவும். இதற்கு அந்த க்னாப்பை மட்டும் நாம் பிடித்துக் கொண்டிருந்தால்போதும்.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இந்த சூப்பரான பேட்டரி உடன் மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய பிஎல்டிசி மோட்டார் பென்லிங் பிலீவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 248 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களைக்கூட அசால்டாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க வெறும் 5.5 செகண்டுகளிலேயே மணிக்கு 40 கிமீ வேகத்தை அது எட்டிவிடும்.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இத்தகைய சூப்பரான அம்சம் கொண்ட 3.2 kWh பிஎல்டிசி மோட்டாரே இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் எலெக்ட்ரிக் மற்றும ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக பென்லிங் நிறுவனத்தின் பிலீவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இந்த இருசக்கர வாகனத்தின் மின் வாகன பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஏற்கனவே பார்த்ததைப் போன்ற பன்முக டிரைவிங் மோட்கள், சாவியே இல்லாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் வசதி, பார்க் அசிஸ்ட், செல்போனை இணைக்கும் வசதி, ரியல் டைம் டிராக்கிங் டிவைஸ், மொபைல் சார்ஜிங் போர்ட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் திருட்டைத் தவிர்க்க கூடிய அலாரம் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

'நம்புங்க' எனும் பெயரில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... இதோட விலை ஒரு லட்சத்துக்கும் கம்மி!

இதுமட்டுமின்றி சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக டிஸ்க் பிரேக்குகள் முன் மற்றும் பின் பக்க வீல்களிலும், சூப்பரான சஸ்பென்ஷன் செட்-அப்பும் பென்லிங் பிலீவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்கள் நிச்சயம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Benling launched believe electric scooter in india at rs 97520
Story first published: Wednesday, August 17, 2022, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X