2லட்ச ரூபா பட்ஜெட்டில் பைக் வாங்க யோசிட்டு இருக்கீங்களா? இந்தாங்க ஃபுல் லிஸ்ட்.. உங்களுக்கானதை சூஸ் பண்ணுங்க!

இருசக்கர வாகனங்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அனைத்து வயதுக் கொண்டவர்களின் விருப்பமான வாகனமாக இருசக்கர வாகனங்கள் (பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்) இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் மோட்டார்சைக்கிள் லவ்வர்களே அதிகளவில் இருக்கின்றனர். இதனால்தான் என்னமோ இருசக்கர வாகனங்களின் விலை அவ்வப்போது உயர்ந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும், தொடர்ச்சியாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதுமுக டூ-வீலர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் எண்ணற்ற டூ-வீலர் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை பற்றியே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அதாவது, 2 லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து ரக மோட்டார்சைக்கிளின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பைக்

ஸ்ட்ரீட் ரக மோட்டார்சைக்கிள்கள்:

2 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்ட்ரீட் ரக மோட்டார்சைக்கிள்களின் பட்டியலையே முதலில் பார்க்க இருக்கின்றோம். இதில் முதலாவதாக சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஜிக்ஸெர் 250 பைக் மாடல் பற்றியே பார்க்க இருக்கின்றோம். இந்த பைக் மாடல் ரூ. 1.77 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவின் 250 சிசி இருசக்கர வாகன சந்தையில் இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த பைக் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 எனும் பெயரிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 1,96,336 ஆகும். இரு தேர்விலும் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. 26.5 எச்பி மற்றும் 22.2 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது ஓர் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும். இதற்கு அடுத்தபடியாக ஸ்ட்ரீட் ரக மோட்டார்சைக்கிள் பிரிவில் யமஹா எம்டி15 வி2 இருக்கின்றது.

இந்த பைக்கின் விலை ரூ. 1.64 லட்சம் ஆகும். இந்திய இளைஞர்களின் ஃபேவரிட் பைக்காக இது காட்சியளிக்கின்றது. அதிக திறனை வெளியேற்றுவதாலும், கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் தோற்றத்தைக் கொண்டிருப்பதாலும் இந்த பைக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல மவுசு நிலவுகின்றது. இதனைத் தொடர்ந்து, பஜாஜ் பல்சர் என்250 இருக்கின்றது. இந்த பைக் ரூ. 1.44 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மிகவும் விலைக் குறைவான 250 சிசி பைக் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக நீங்கள் யமஹா எஃப்இசட் 25 பைக்கை வாங்க திட்டமிடலாம். இதவும் தற்போது சந்தையில் 2 லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கிலும் 250 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.5 பிஎச்பி பவரை வெளியேற்றும். இதன் விலை ரூ. 1.48 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்ட்ரீட் ரக மோட்டார்சைக்கிளில் நாம் கடைசியாக பார்க்க இருக்கும் டூ-வீலர் கேடிஎம் 200 ட்யூக் ஆகும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 1.9 லட்சம் என்கிற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த அதிக விலைக்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. டூயல் சேனல் ஏபிஎஸ், லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட மோட்டார் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்:

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250, மேலே ஸ்ட்ரீட் மோட்டார்சைக்கிளின் பட்டியலில் நாம் முதலில் சுஸுகி ஜிக்ஸெர் 250 பற்றி பார்த்திருப்போம். அந்த பைக்கின் மற்றுமொரு வெர்ஷனே ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 ஆகும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 1.80 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக விலை குறைவாக விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக யமஹா ஆர்15 வி4 இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.80 லட்சம் ஆகும். மேலே பார்த்த ஆர்15 வி2-வைக் காட்டிலும் பிரீமியம் அம்சங்கள் மிக ஏராளமாக இதில் இடம் பெற்றிருக்கும். இதேபோல், அதிகம் சிறப்பு மற்றும் பிரீமியம் அம்சங்கள் கொண்டதகா பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.71 லட்சம் ஆகும்.

க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள்:

2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு 350 சிசி மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஆகிய இரு பைக் மாடல்கள் மட்டுமே உள்ளன. இதில், ராயல் என்பீல்டு பைக்குகள் ரூ. 1.49 லட்சம் தொடங்கி ரூ. 1.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றம் புல்லட் 350 ஆகியவை நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகளாக இருக்கின்றன. பஜாஜ் நிறுவனம் அதன் அவென்ஜர் பைக்கை இந்த பிரிவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 2 லட்சம் ஆகும்.

Most Read Articles
English summary
Best bikes in under rs 2 lakh
Story first published: Saturday, November 26, 2022, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X