டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாவே குறைஞ்சிடும்! செம்மையான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 அறிமுகம்!

தீ விபத்து அச்சத்தைப் போக்கக் கூடிய புதிய தொழில்நுட்ப வசதியுடன் பிகாஸ் (BGauss) நிறுவனம் அதன் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிகாஸ் (BGauss), அதன் மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. பிஜி டி15 (BG D15) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரு விதமான வேரியண்டுகளில் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

டி15 ஐ (D15 i) மற்றும் டி15 ப்ரோ (D15 Pro) ஆகிய இரு தேர்வுகளிலேயே அது விற்பனைக்கு கிடைக்கும். இவை வெகு விரைவில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளன. இதனை முன்னிட்டு பிகாஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் பணிகளை நாட்டில் தொடங்கியுள்ளது. இதன் டெலிவரி பணிகள் வரும் ஜுன் மாதம் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

நாட்டில் ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய இரு நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, சமீப சில காலமாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தையே ஓரங்கட்டும் வகையில் விற்பனையில் மிக சிறந்த வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சந்தித்து வருகின்றது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இத்தகைய ஓர் நிறுவனத்திற்கே போட்டியளிக்கும் வகையில் பிகாஸ் நிறுவனம் அதன் புதிய பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கின்றது. இதனை தற்போது நாட்டில் அறிமுகமும் செய்திருக்கின்றது. ரூ. 499 என்ற மிக மிகக் குறைவான முன் தொகையில் இ-ஸ்கூட்டருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 99,999 தொடங்கி ரூ. 1.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரும் விலைகள் ஆகும். இந்த விலைகளும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையை முன்னிட்டு நிறுவனம் விரைவில் நாட்டில் விற்பனையகங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

நிலை 1 மற்றும் நிலை 2 ஆகிய நகரங்களில் விற்பனையகங்களை புதிதாக நிறுவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 100 ஷோரூம்களை அது உருவாக்க இருக்கின்றது. இந்த நடவடிக்கையின் வாயிலாக பன் மடங்கு மக்களை ஈர்க்க முடியும் என பிகாஸ் நம்புகின்றது. பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது பிகாஸ் நிறுவனம்.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிமீ தூரம் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அராய் (ARAI)இன் சான்றும் கிடைத்திருக்கின்றது. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை வெறும் ஏழே செகண்டுகளில் தொடக் கூடிய மின் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும்.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

ஸ்போர்ட் மோடில் இ-ஸ்கூட்டரை இயக்கும்போதே இந்த உச்சபட்ச வேகத்தை தொட முடியும். இதுதவிர, ஈகோ மற்றும் ரிவர்ஸ் எனும் மேலும் சில மோட்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஈகோ மோடானது குறைவான வேகத்தில் மிக அதிக ரேஞ்ஜை பெற உதவும். ரிவர்ஸ் மோட் பின்னோக்கி செல்ல உதவும். இவையே பிற மோட்களின் சிறப்பு வசதியாகும்.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இ-ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இதில், 16 அங்குல அலுமினியம் அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயருடன் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக முன் மற்றும் பின் பக்கத்தில் டிரம் பிரேக்குகள் சிபிஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளன.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

தொடர்ந்து, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது வாகனத்தின் இயக்கத்தின்போது கணிசமான அளவு சார்ஜை மீட்டெடுக்க உதவும். இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக முன் பக்கத்தில் ஹைட்ராலிக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் இரட்டை ஹைட்ராலிக் ஸ்பிரிங் மற்றும் 3 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்ட மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இதுமாதிரியான இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் பிகாஸ் டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்தவகையில், மிக முக்கியமான அம்சமாக அதிக வெப்பநிலை உருவானால் தானாகவே செயல்திறனை குறைக்கும் தொழில்நுட்பம் டி15 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டிருக்கின்றது.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

சமீப காலமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதிக வெப்பநிலை மற்றும் பேட்டரி பேக்கில் கோளாறு ஆகிய காரணங்களால் தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் பிகாஸ் நிறுவனம் அதன் டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தானாக வெப்பநிலையைக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்திறனை குறைக்கும் (Temperature Based Performance Derating) வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது.

டெம்ப்ரேச்சர் அதிகமாச்சுனா செயல் திறன் தானாகவே குறைஞ்சிடும்... சூப்பரான அம்சங்களுடன் பிகாஸ் பிஜி டி15 இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

தொடர்ந்து, சிக்கல்களை கண்டறியும் தொழில்நுட்பம், சைடு ஸ்டாண்டு சென்சார், ரோல் ஓவர் சென்சார், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், ஜிஎஸ்எம் இணைப்பு, செல்போன் ஆப் வாயிலாகவே வாகனத்தின் இயக்கத்தை ஆஃப் செய்யும் வசதி, ஜியோ ஃபென்சிங், ரிமோட் இம்மொபிலைசேஷன் என பல்வேறு அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளும் இ-ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

Most Read Articles

English summary
Bgauss d15 electric scooter revealed in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X