இந்தியா பைக் வீக்கில் பட்டைய கிளப்பிய புதிய டூ-வீலர்கள்! பைக் லவ்வர்ஸ்களை சப்பு கொட்டவிட்ட பைக்குகளின் லிஸ்ட்!

அண்மையில் கோவாவில் 2022 இந்தியா பைக் வீக் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற இருசக்கர வாகன ஷோவில் இதுவும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களைக் கவரும் இடம் பெற்றிருந்த முக்கியமான இருசக்கர வாகனங்கள் சிலவற்றை பற்றியே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தியா பைக் வீக் வாகன கண்காட்சி கோவாவில் அண்மையில் நடைபெற்றது. விழாபோல் நடைபெற்ற இந்த கண்காட்சியில் இருசக்கர வாகன பிரியர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து மக்கள் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது. 2 டிசம்பர் மற்றும் 3 டிசம்பர் வரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த பைக் ஷோவில் உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் புதுமுக வாகனங்களைக் காட்சிப்படுத்தினர்.

பைக் வீக்

அந்த வகையில், சீன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்யூஜே, கேடிஎம், பிஎம்டபிள்யூ மோட்டாராட், ஹார்லி டேவிட்சன் போன்ற முன்னணி பிராண்டுகள் கலந்துக் கொண்டு தங்களின் எதிர்கால இருசக்கர வாகன மாடல்களைக் காட்சிப்படுத்தின. இவற்றில் அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில மோட்டார் சைக்கிள்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

822 ஹிமாலயன்:

இந்த பெயரையும், பைக்கையும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு யோசிக்கிறீங்களா. ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க இது நம்ம தமிழக நிறுவனமான ராயல் என்பீல்டுடைய தயாரிப்புதான். ஆமாங்க ஹிமாலயனேதான். இதையே ஆட்டோலாக் டிசைன் மற்றும் ஆட்டோ என்ஜினா எனும் இரு நிறுவனங்கள் இணைந்து மாடிஃபை செய்து அதனை கண்காட்சியில் காட்சிப்படுத்தின. மாடிஃபிகேஷன்கீழ் ஹிமாலயன் பைக்கில் 822 சிசி பாரல்லல் ட்வின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் பைக்கில் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்படுகின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 45 எச்பி பவரையும், 55 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும். இதைவிட அதிக பவர்ஃபுல் மோட்டாரே தற்போது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 822 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரின் துள்ளியமான திறன் வெளிப்பாடு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இருப்பினும் இந்த பைக்கில் எக்கசக்க மாற்றங்களை நிறுவனங்கள் செய்திருக்கின்றன என்பதை நம்மால் காண முடிகின்றது. 2-டூ-1 எக்சாஸ்ட், ஸ்விங்கார்ம் போன்ற அம்சங்கள்கூட இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பைக்கின் மதிப்பு ரூ. 13 லட்சமாக அதிகரித்துள்ளது.

2023 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்:

பிரபல பிரீமியம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ 2023 எஸ்1000 ஆர்ஆர் பைக் மாடலை இந்தியா பைக் வீக்கில் காட்சிப்படுத்தியது. அதிக பவர்ஃபுல் மாடலாக இதனை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் திறன் வெளிப்பாடு 210 எச்பி ஆகும். இப்பைக்கின் எடை 197 கிலோவாக இருக்கின்றது. முழுமையாக பெட்ரோல் நிரப்பப்பட்ட நிலையிலேயே இந்த எடையில் பைக் இருக்கும். இத்துடன், பைக்கின் லுக்கிலும் லேசான மாற்றங்களை நிறுவனம் செய்திருக்கின்றது. ஆகையால், முந்தைய வெர்ஷன்களைக் காட்டிலும் இந்த லேட்டஸ்ட் வெர்ஷன் அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ வருகை வரும் 10ம் தேதி அரங்கேற இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

க்யூஜே மோட்டார்:

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் க்யூஜே மோட்டார்ஸ் பன்முக மோட்டார்சைக்கிள்களைக் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. எஸ்ஆர்கே 400, எஸ்ஆர்வி 300 மற்றும் எஸ்ஆர்சி 500 ஆகியவற்றையே நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதில், எஸ்ஆர்சி என்பது கிளாசிக் ரோட்ஸ்டர் ரக பைக்காகும். எஸ்ஆர்வி 300 க்ரூஸர் ரக மாடல் ஆகும். இதேபோல், எஸ்ஆர்கே 400 ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகமாகும். இவற்றில் குறைவான விலைக் கொண்டதாக எஸ்ஆர்சி 500 பைக் உள்ளது. இதற்கு ரூ. 2.69 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். பிற மாடல்களுக்கு ரூ. 3.59 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர்:

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் போதிய அளவு வரவேற்பு இல்லாத காரணத்தினால் அண்மையில் சந்தையை விட்டு வெளியேறியது. நேரடி வர்த்தகத்தை நிறுத்திய நிலையில் நிறுவனம் ஹீரோ உடன் இணைந்து இந்திய இருசக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையிலேயே 2022 இந்தியா பைக் வீக்கில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக நிறுவனம் நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிளைக் காட்சிப்படுத்தியது. இது 975 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 எச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கை நிறுவனம் ரூ. 14.99 லட்சம் தொடங்கி ரூ. 15.13 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேடிஎம் 890 அட்வென்சர் ஆர்:

இந்தியாவில் அட்வென்சர் ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதரியான சூழலில் ஒட்டுமொத்த அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக கேடிஎம் நிறுவனம் 890 அட்வென்சர் ஆர் பைக்கை 2022 இந்தியா பைக் வீக்-இல் காட்சிப்படுத்தியிருக்கின்றது. இந்த பைக்கில் நிறுவனம் 889 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வருகை குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Bikes showcased in india bike week
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X