எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம், ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் -ஐ தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ்!

எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்த விவகாரத்தில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஓலா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

கடந்த மார்ச் மாதம் துவங்கி இந்தியாவில் பல பகுதிகளில் பல நிறுவனங்களில் பேட்டரி வாகனங்கள் தீ பிடித்த சம்பவம் ஆங்காங்கே நடந்தது. இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். சில சம்பவங்கள் சார்ஜ் போடும், போதும், சில சம்பவங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதும் நடந்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் விபத்திற்குள்ளான வாகனம் தயாரிப்பட்ட அதே பேட்சில் தயாரிக்கப்பட்ட மற்ற வாகனங்களைத் திருப்ப அழைத்து அதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா எனச் சோதனை செய்து வருகின்றனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

இந்நிலையில் இந்த சம்பவங்களில் சிக்கியது ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ், ஓலா நிறுவனங்களில் தயாரிப்பும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அந்தந்த நிறுவனங்களும், ஏன் இப்படியான சம்பவங்கள் நடந்தது? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்து கொள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து ஆய்வு விசாரிக்கத் தானே முன் வந்துள்ளது. இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்கக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

கடந்த மாதம் இந்த ஆணையம் ப்யூர் இவி மற்றும் பூம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்தது குறித்து விளக்கம் தரச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ஆணையம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 15 நாளில் இது குறித்து விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

இந்த நோட்டீஸில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தையும், வாகனம் தயாரிப்பதற்காகப் பின்பற்றப்படும் தரக்கட்டுபாடுகளையும்விளக்கமாக அளிக்கும்படி கேட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்த பின்பு ஓலா எலெக்டரிக் நிறுவனம் தனது 1,441 ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து சோதனையை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களின் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கு AIS 156 தரச்சான்றைப் பெற்றுள்ளது. இந்த AIS தரச்சான்று இந்தியாவில் பின்பற்றப்படும் தரச்சான்றாகும். இது போக ஐரோப்பிய தரச்சான்றான ECE 136 தரச்சான்றும் இந்த நிறுவனத்தின் பேட்டரிக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் AIS தரச்சான்று ஜப்பான், ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம் . . . ப்யூர் இவி , பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ் !

ப்யூர் இவி நிறுவனம் பின்பற்றி வரும் தரக் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தற்போது Bureau of Indian Standards (BIS) அமைப்பை அணுகியுள்ளது. இந்த அமைப்பின் விசாரணை இயக்குநர் இது குறித்து தற்போது விசாரணை நடத்திவருகிறார். இந்நிலையில் தான் ஓலா நிறுவனத்திடமும் இந்நிறுவனம் விளக்கம் கேட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
CCPA notice Ola seeks explanation on e scooter fire in 15 days
Story first published: Thursday, June 23, 2022, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X