சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

சீன நிறுவனமான ஜோன்டஸ் (Zontes), அதன் அனைத்து இருசக்கர வாகனங்களின் விலையை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

பிரபல சீன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜோன்டஸ் (Zontes), அண்மையில் இந்திய சந்தையில் அதன் ஐந்து புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 350ஆர் (350R), 350 எக்ஸ் (350X), ஜிகே 350 (GK350), 350 டி (350T) மற்றும் 350 டி அட்வென்சர் (350T ADV) ஆகிய இருசக்கர வாகன மாடல்களையே ஜோன்டஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

இவற்றிற்கான விலைகளையே நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. விலை விபரங்களைப் பட்டியலாகக் கீழே காணலாம்:

ஜோன்டஸ் 350 விலை விபரம்
Blue ₹3,15,000
Black ₹3,25,000
White ₹3,25,000
ZONTES 350X Price
Black and Gold ₹3,35,000
Silver and Orange ₹3,45,000
Black and Green ₹3,45,000
ZONTES GK350 Price
Black and Blue ₹3,37,000
White and Orange ₹3,47,000
Black and Gold ₹3,47,000
ZONTES 350T ADV
Orange ₹3,57,000
Champagne ₹3,67,000
சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

மேலே விலைகளின்கீழே ஜோன்டஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன. இந்த அனைத்து டூ-வீலர்களையும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (Adishwar Auto Ride India) கூட்டணியின் கீழாகவே ஜோன்டஸ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஜோன்டஸ் நிறுவனம் இந்த அனைத்து டூ-வீலர்களிலும் 348 சிசி திறனை வெளியேற்றக் கூடிய லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 38 எச்பி மற்றும் 32 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. எஞ்ஜின் விஷயத்தில் மட்டுமின்றி இன்னும் சில முக்கிய அம்சங்களிலும் இவை ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், உருவம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அந்தந்த பைக்குகள் அவற்றின் பெயருக்கே ஏற்ப ஸ்டலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

350ஆர் பைக் நேக்கட் (naked) தோற்றத்திலும், 350 எக்ஸ் ஸ்போர்ட்பைக் (sport bike) தோற்றத்திலும், ஜிகே 350 கஃபே ரேசர் (cafe racer) தோற்றத்திலும், 350 டி மற்றும் 350 டி ஏடிவி டூரர் (ADV tourer) தோற்றத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில், 350 டி ஏடிவி பைக்கை தவிர்த்து மற்று அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் அலுமினியம் காஸ்ட் கட் அலாய் வீலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

இந்த வீல்களில் இந்தியாவின் சவால் நிறைந்த சாலைகளை சமாளிக்கும் திறன் கொண்ட 120/70-17, 160/60-17 ஆகிய அளவிலான டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 350 டி ஏடிவி ஓர் அட்வென்சர் பைக் என்பதால் அதன் தோற்றத்தை மெருகேற்ற வேண்டும் என்பதற்காக ஸ்போக் வீலே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற டயர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

சஸ்பென்ஷனை பொருத்த வரை அனைத்து பைக்குகளிலின் முன் பக்கத்திலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த பிரேக்கிங் வசதிக்காக பைக்கின் முன் பக்கத்தில் 320 மிமீ டிஸ்க்கும், 265 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ் அனைத்து பைக் மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

இதுமட்டுமின்றி, ஹெட்லைட், டெயில் லேம்ப்புகள், டிஆர்எல்கள், இன்டிகேட்டர் உள்ளிட்டவற்றில் எல்இடி தர மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முழு வண்ண எல்சிடி டிஎஃப்டி திரை, முழு சாவியில்லா கன்ட்ரோல் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோட்கள், டூயல் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

இப்பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் டிஎஃப்டி திரையானது ஸ்பீடோ மீட்டர், நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு, மியூசிக், செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல், குறுஞ்செய்திகளை படித்தல் மற்றும் இன்னும் பல அம்சங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

சீன நிறுவனம் என்பதை நிரூபித்த ஜோண்டஸ்... அனைத்து டூ-வீலர்களின் விலையையும் வெளியிட்டாச்சு!

இத்தகைய பன்முக சிறப்புகளைக் கொண்ட பிரீமியம் தர பைக்குகளையே சற்று குறைவான விலையில் ஜோன்டஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பொதுவாக சீன நிறுவனங்கள் அதிக சிறப்பு வசதிகளை குறைவான விலையிலேயே வாரி வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. இதனையே ஜோன்டஸ் நிறுவனமும் இந்த பைக்குகளின் விலையை அறிவித்ததன் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Chinese brand moto vault announces price of zontes 350 range
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X