பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!

டிவிஎஸ் இருசக்கர வாகன விற்பனையாளர் ஒருவர் ஒரே நாளில் 80 யூனிட்டுகள் வரை ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரிக் கொடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

டிவிஎஸ் (TVS) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஐக்யூப் (iQube).

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

இந்த இருசக்கர வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஓர் தரமான சம்பவம் இந்தியாவில் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

ஒரே நேரத்தில் 80 யூனிட் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி கொடுக்கப்பட்ட நிகழ்வே இந்த வாகனத்திற்கு இந்தியாவில் மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வு கேரளா மாநிலம் கொச்சினிலேயே அரங்கேறியிருக்கின்றது.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

இந்த நிகழ்வின் வாயிலாக கேரள வாசிகளின் மிகவும் பிரியமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக டிவிஎஸ் ஐக்யூப் மாறியிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிவிகின்றது. இந்த இருசக்கர வாகனம் கேரள வாசிகளுக்கு மட்டுமில்லைங்க நாட்டின் பிற மாநில வாசிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2022 ஜூன் மாதத்தில் 4,667 யூனிட் ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது உண்மையில் மிக சிறந்த விற்பனை எண்ணிக்கையாகும். இதுவரை எந்த மாதத்திலும் இத்தகைய அதிக எண்ணிக்கையில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கொச்சினில் ஒரே நாள் ஒரே நேரத்தில் 80 யூனிட் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

டிவிஎஸ் நிறுவனம் சமீபத்திலேயே ஐக்யூப்-இன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்பு விற்பனையில் இருந்த வெர்ஷனைக் காட்டிலும் மிக சூப்பரான அம்சங்களுடன் 2022 ஐக்யூப் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

ஐக்யூப் (iQube), ஐக்யூப் எஸ் (iQube S) மற்றும் ஐக்யூப் எஸ்டி (iQube ST) ஆகிய இரு விதமான வேரியண்டுகளிலேயே அது கிடைக்கும். இதில், தற்போதைக்கு ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகிய இரு வேரியண்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. உயர்நிலை வேரியண்டான ஐக்யூப் எஸ்டி-யின் விலைகள் அறிவிக்கப்படவில்லை.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

ஐக்யூப் வேரியண்டிற்கு ரூ. 1.65 லட்சமும், ஐக்யூப் எஸ் வேரியண்டிற்கு ரூ. 1.72 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அரசின் மானியத் திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைப்பதால், இந்த எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இருந்து ரூ. 51 ஆயிரம் கழிக்கப்பட்ட நிலையிலேயே அவை விற்பனைக்குக் கிடைக்கும்.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

அதாவது, ஐக்யூப் வேரியண்ட் ரூ. 1.14 லட்சத்திற்கும், ஐக்யூப் எஸ் வேரியண்ட் ரூ. 1.21 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கும். டிவிஎஸ் நிறுவனம் அப்டேட்டின்கீழ் பல்வேறு சிறப்பு வசதிகளை 2022 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில்வழங்கியிருக்கின்றது. இதில், புதிய நிற தேர்வுகளும் அடங்கும். ஷைனிங் ரெட், டைட்டானியம் கிரே, மெர்குரி கிரே, காப்பர் ப்ரோன்ஸே, மின்ட் ப்ளூ, கார்பரேட் ப்ரோன்ஸே, லூசிட் யெல்லோ, ஸ்டார்லைட் ப்ளூ, கோரல் சேன்ட், காப்பர் ப்ரோன்ஸே மேட் மற்றும் டைட்டானியம் கிரே மேட் என்கிற இத்தகைய பன்முக நிற தேர்வுகளிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

டிவிஎஸ் நிறுவனம் புதிய 2022 ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில் பன்முக சிறப்பு வசதிகளை வாரி வழங்கியிருக்கின்றது. அதில், மிக சிறப்பான ஓர் அம்சமாக டிவிஎஸ் ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் (SmartXonnect system) அம்சம் உள்ளது. இது ஓர் அதி-நவீன தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக நேவிகேஷன், மொபைல் இணைப்பு உள்ளிட்ட முக்கிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

இத்துடன் ஜியோஃபென்சிங், செல்போனுக்கு வரும் அழைப்பு, பயணிக்கும் தூரத்தின் இடைவெளி போன்ற முக்கிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தகவல்கள் அனைத்தையும் காணும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் 5 அங்குல வண்ண டிஎஃப்டி திரை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை ஐக்யூபில் வழங்கியிருக்கின்றது. இதே திரை ஐக்யூப் எஸ் தேர்வில் 7 அங்குலத்தில் காணப்படும். இதே அளவுள்ள திரையே ஐக்யூப் எஸ்டி வேரியண்டிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ் வேரியண்டில் வழக்கமான திரையாகவும், எஸ்டி வேரியண்டில் தொடுதிரை வசதிக் கொண்டதாகவும் அது இருக்கும்.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எஸ்டி வேரியண்டை 4.56 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கிலும், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் வேரியண்டுகளை 3.04 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கிலும் வழங்க இருக்கின்றது. அனைத்து பேட்டரிகளும் ஐபி67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் தர சான்றுகள் பெற்றவை ஆகும். இந்த பேட்டரிகளை அதிக வேகமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4.30 மணி நேரங்களே போதுமானது.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

மின் மோட்டாரை பொருத்தவரை அனைத்த தேர்வுகளிலும் ஒரே மாதிரியானதாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 4.4 kW பிஎல்டிசி ஹப் மவுண்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3kW பவர் மற்றும் 140 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆனால், இந்த மோட்டார் ஐக்யூப் எஸ்டி வேரியண்டில் மணிக்கு 82 கிமீ வேகத்திலும், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் ஆகிய வேரியண்டுகளில் மணிக்கு 78 கிமீ வேகத்தையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு... படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள் டெலிவரி கொடுத்திருக்காங்க!

இந்த மின் மோட்டாரில் ரிவர்ஸ் மற்றும் ஃபார்வார்டு ஆகிய சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்த வேகத்தில் பயணிப்பதற்கு ஏதுவாக எகனாமி மோட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அதிக வேகத்தில் பயணிப்பதற்கு பவர் எனும் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், எகனாமி மோடில் வைத்து பயணிக்கும்போதே அதிக ரேஞ்ஜை பயனர்களால் பெற முடியும். ஐக்யூப் எஸ்டி தேர்வு முழு சார்ஜில் 145 கிமீ ரேஞ்ஜையும், மற்ற இரு தேர்வுகள் 100 கிமீ ரேஞ்ஜ் திறனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கேரள மக்கள் வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Cochin tvs dealer delivered 80 units iqube electric scooter in single day
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X