சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

விற்பனைக்கு வரும் எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சைபோர்க் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை 'ஜிடி 120' என்கிற பெயரில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

இந்தியாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான இக்னிட்ரான் மோட்டோகார்ப் பிரைவேட் லிமிடெட் கஸ்டமைஸ்ட் வாகனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. இத்தகைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அதன் சைபோர்க் பிராண்டில் மூன்றாவது அதி வேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதை அறிவித்துள்ளது.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

ஜிடி120 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் முன்னோடியான டிசைனில், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது. இந்த பைக்கின் மூலமாக அட்டகாசமான இவி பயண அனுபவத்தை பெறுவது மட்டுமின்றி, பசுமையான போக்குவரத்திற்கு இணக்கமான தொழிற்நுட்பங்களையும் பெறலாம்.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

கருப்பு & டார்க் பர்பிள் என்கிற இரு விதமான நிறத்தேர்வுகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ள சைபோர்க் ஜிடி120 பைக்கானது இளம் ஆர்வலர்கள் தங்கள் வாழ்க்கை முறையை உயர்த்துவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் உற்சாகமூட்டும் அம்சங்களின் கலவையாக இருக்கும் என இக்னிட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

இந்த எலக்ட்ரிக் பைக் ஒரு சிறந்த செயல்திறன் மற்றும் புரட்சிக்கரமான வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் மூலமாக அன்றாட பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், சைபோர்க் ஜிடி120 பைக்கினை நீண்ட தூர பயணங்களுக்கும் தாராளமாக எடுத்து செல்லலாம். ஜிடி120 எலக்ட்ரிக் பைக்கில் 4.68kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

இதனை முழுவதுமாக சார்ஜ் செய்து 180கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது இக்னிட்ரான் நிறுவனம். ஜிடி120 ஸ்போர்ட்ஸ் பைக்கின் டாப்-ஸ்பீடு 125kmph ஆகும். தொழிற்நுட்ப அம்சங்களாக இந்த இ-பைக்கில் ஜியோ இருப்பிடம்/ ஜியோ ஃபென்சிங், பேட்டரி நிலைப்பாடு, யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் ப்ளூடூத், சாவி இல்லா நுழைவு மற்றும் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஜிடி120 பைக்கின் பேட்டரி ஆனது அளவில் சற்று பெரியது மற்றும் எடைமிக்கது.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

இதனால் பேட்டரி தொகுப்பு, பைக்கில் இருந்து நீக்க முடியாத வகையில், நீர்-எதிர்ப்பு அம்சத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 15 ஆம்பியர் விரைவு வீட்டு உபயோக சார்ஜர் வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி பேட்டரியை 4-5 மணிநேரங்களில் முழுவதும் சார்ஜ் நிரப்பிவிடலாமாம். 0-வில் இருந்து 40kmph வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய சைபோர்க் ஜிடி120 எலக்ட்ரிக் பைக்கில் ஈக்கோ, நார்மல் & ஸ்போர்ட் என 3 ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

இவை ஒவ்வொன்றும் ஓட்டுனரின் ரைடிங் ஸ்டைல் & தேவையை பொறுத்து செயல்படும் என சைபோர்க் தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரிவர்ஸில் கூட மிதமான வேகத்தில் செல்ல முடியும். பைக்கை பார்க்கிங் செய்வதற்கு பல்வேறு விதங்களில் ஒலி எழுப்பக்கூடிய சைரன் வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு ஜிடி120 பைக்கில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

ஜிடி120 -இன் அறிமுகம் குறித்து இக்னிட்ரான் மோட்டோகார்ப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ராகவ் கல்ரா கருத்து தெரிவிக்கையில், எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரிவில் எங்களது மூன்றாவது எலக்ட்ரிக் பைக்கை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் இ-பைக்குகளான யோடா & பாப்-இ மாடல்களின் வெற்றிக்கரமான அறிமுகத்திற்கு பிறகு, நாங்கள் இப்போது ஜிடி120 உடன் அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் நுழைகிறோம்.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

ஸ்டைலான தோற்றம் மற்றும் சிறந்த அம்சங்களை தவிர, எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், தயாரிப்பின் அதிவேக அனுபவத்தால் கவரப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் முழு-அளவிலான தயாரிப்புகளுடன், சமரசமற்ற அம்சங்கள் மற்றும் ஒப்பிட முடியாத பாணியுடன் மின்னேற்ற அனுபவத்தை வழங்குவதன் மூலம் எங்கள் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் பரந்த தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

சைபோர்க்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் - ஜிடி120!! மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லக்கூடியது!

எங்கள் மோட்டார்சைக்கிள்கள் எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரிவில் கேம் சேஞ்சராக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார். முன்னதாக சைபோர்க் பிராண்டில் இருந்து சமீபத்தில் யோதா என்ற பெயரிலான இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இதில் பொருத்தப்பட்ட 3.24kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பானது பைக்கிற்கு 150கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

Most Read Articles
English summary
CYBORG unveils its third 'Made in India' high speed electric sports bike 'GT 120'.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X