Just In
- 1 hr ago
ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு
- 7 hrs ago
நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்
- 8 hrs ago
ஸ்கிராட்ச் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!
- 9 hrs ago
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ப்ளஸ், மைனஸ்... வாங்கறதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கங்க!
Don't Miss!
- Movies
வாரத்திற்கு ஒன்னு...ரெட் ஜெயண்ட் மூவிஸ் காட்டில் அடைமழை காலம் போல
- News
யூ டூ ப்ரூட்டஸ், ஜெகத் கஸ்பரை விட்டுட்டு.. கனல் கண்ணன் கைதா? நாளை பாருங்க! காடேஸ்வரா விட்ட அறிக்கை!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க... இனி இஎம்ஐ அதிகரிக்கலாம்..!
- Sports
தினேஷ் கார்த்திக்கால் வரும் பிரச்சினை.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி.. ரிஷப் பண்ட் வெளிப்படை பேச்சு!!
- Lifestyle
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
டுகாட்டியின் ஸ்க்ராம்ப்ளர் 800 வரிசையில் மற்றுமொரு புதிய பைக்!! ரூ.11 லட்சத்தை தாண்டும் விலை!
டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்க்ராம்ப்ளர் 800 மோட்டார்சைக்கிள் வரிசையை புதிய ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பைக்கின் மூலமாக விரிவுப்படுத்தியுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான லக்சரி மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி இன்று (ஜூன் 28) அதன் புதிய ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுகத்தை அறிவித்துள்ளது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 800 பைக்குகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் வசிக்கும் எந்தவொரு துணிச்சலான மற்றும் ஆர்வமிக்க ரைடருக்கும் ஏற்றதாக விளங்கும் புதிய அர்பன் மோட்டார்ட் மோட்டார்சைக்கிள் ஆனது பெரிய நகரங்களின் பயண சூழலை உடனடியாக உள்வாங்கக்கூடியது என்கிறது டுகாட்டி. இதன் அறிமுகத்தின்போது பேசிய டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுள் சந்த்ரா, "ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என்பது நகர்புற சூழலை வேடிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் அனுபவிக்கும் வகையில் டுகாட்டிஸ்டி-காக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

பைக்கின் அசல் பெயிண்ட் ஆனது தெரு கலை மற்றும் பெருநகர கிராஃபிக்ஸ் உலகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. நிகரற்ற ஸ்டைல் மற்றும் ஸ்போர்டியான பண்பால் நிச்சயமாக இது எவரொருவராலும் கண்டுக்கொள்ளப்படாமல் போகாது. புதிய ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என்பது ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் உள்ள ஒரு தனித்துவமான இயந்திரம் மற்றும் அதை எங்கள் ரைடிங் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!" என கூறியுள்ளார்.

பெயருக்கேற்ப இந்த புதிய டுகாட்டி பைக் ஆனது பெருநகரங்களில் வாழும் இளைஞர்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது. பெயிண்ட்டை பொறுத்தவரையில் சாலையில் எவரொருவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் புதிய ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பைக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

முன்பக்க மற்றும் பின்பக்க மட்கார்ட்கள் சிவப்பு நிறத்தில் இருக்க, பைக்கின் மைய பேனல்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பெட்ரோல் டேங்க் சிவப்பு மற்றும் வெள்ளை என இரு விதமான நிறங்களையும் கொண்டுள்ளது. பெட்ரோல் டேங்கிற்கு மத்தியில் ஸ்க்ராம்ப்ளர் பெயர் ஆங்கிலத்தில் கருப்பு நிறத்திலும், இதற்கு கீழே டுகாட்டி பெயர் ஆங்கிலத்தில் சிவப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் இல்லாமல் 180 கிலோ எடை கொண்டதாக இருக்கும் புதிய ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பைக்கில் 803சிசி எல்-இரட்டை டெஸ்மோட்ரோமிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,250 ஆர்பிஎம்-இல் 73 எச்பி மற்றும் 5,750 ஆர்பிஎம்-இல் 65 என்எம் டார்க்கை திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பைக்கின் ட்ரெல்லிஸ் சட்டகமானது கருப்பு நிற குழாய் இரும்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டுகாட்டி பைக்கின் இரு பக்கங்களிலும் கயபா சஸ்பென்ஷன் செட்அப் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் 17-இன்ச் ஸ்போக்டு சக்கரங்களில் பைரெல்லி டியாப்லோ ரோஸ்ஸோ 3 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் முன் டயரானது 120/70 அளவிலும், பின் சக்கரம் 180/55 என்ற அளவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் பணியை கவனித்துக்கொள்ள போஸ்ச் கார்னரிங் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

பைக்கில் முன் மட்கார்ட் சற்று உயரமாக பொருத்தப்பட்டிருக்க, இருக்கை ஆனது டுகாட்டி பிராண்டின் லோகோ உடன் தட்டையானதாக உள்ளது. ஹேண்டில்பார் சவுகரியமான பயணத்திற்கு ஏற்ப நன்கு அகலமானதாக வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் கியர் மற்றும் எரிபொருள் அளவை காட்டுவதாக உள்ளது.

அத்துடன் புதிய ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பைக் டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் (DMS)-ஐ ஏற்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பைக்கை ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போன் உடன் இணைக்க முடியும். மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான சாக்கெட் இருக்கைக்கு அடியில் நிலையான தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.11.49 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையினை பெற்றுள்ள புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பைக் தற்போதில் இருந்து அனைத்து விதமான டுகாட்டி இந்தியா டீலர்ஷிப் மையங்கள் வாயிலாகவும் கிடைக்கும். இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் உலகளவில் கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இதனுடன் பெரிய தோற்றம் கொண்ட ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிளும் அப்போது வெளியீடு செய்யப்பட்டது.
-
ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!
-
விமானத்தில் ஏறியதும் நிறைய பேர் தக்காளி ஜூஸ் குடிப்பாங்க! ஏன்? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா
-
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!