டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்!

பிரபல பிரீமியம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati), அதன் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி (Streetfighter V4 SP) சிறப்பு பதிப்பு பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் சிறப்பு வசதிகள் மற்றும் விலை விபரம் உள்ளிட்டவற்றை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலையுயர்ந்த கார்களில் கியா கார்னிவல் (Kia Carnival)-ம் ஒன்று. இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எம்பிவி ரக காராகும். ஓர் பெரிய குடும்பம் பயணிப்பதற்கு ஏதுவான அதிக இருக்கைகள் மற்றும் மிக தாராளமான இட வசதியைக் கொண்ட வாகனம் இதுவாகும். ரூ. 30.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து கார்னிவல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

இந்த காரைக்காட்டிலும் பன்மடங்கு அதிக விலையிலேயே ஓர் பைக் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. டுகாட்டி நிறுவனத்தின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி மோட்டார்சைக்கிளே அது ஆகும். இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 34.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

ஆன்-ரோடில் வரிகள், இன்சூரன்ஸ் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டு இன்னும் பல லட்சம் அதிக விலையிலேயே இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இது கியா கார்னிவல் காரின் ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டிலும் மிக மிக அதிகம் ஆகும். இத்தகைய அதிக விலைக்கு அப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் அதிக சிறப்பு வசதிகளும், அப்பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கும் விதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

டுகாட்டி நிறுவனம் வழக்கமான ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளைக் காட்டிலும் மிக அதிக சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி மாடலைஉருவாக்கியிருக்கின்றது. இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து பைக்கிற்கான புக்கிங் பணிகளை டுகாட்டி தற்போது தொடங்கியிருக்கின்றது. டுகாட்டி இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வாயிலாக இந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

தலைநகர் டெல்லியில் மட்டும் இப்போதே டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்போர்ட் புரொடக்சன்' என்பதை குறிக்கும் வகையிலேயே 'எஸ்பி' என்கிற கூடுதல் நேம்-பேட்ஜுடன் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. நேம் பேட்ஜ் மட்டுமல்ல அதி திறனை வெளிப்படுத்தக் கூடிய மோட்டாரும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று, இன்னும் பல்வேறு சுவாரஷ்யமான அம்சங்களைக் கொண்டதாக இப்புதுமுக பைக் காட்சியளிக்கின்றது.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

இதனால்தான் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி மிக மிக அதிக விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில் வழக்கமான எஸ் வேரியண்டுகளைக் காட்டிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் ரூ. 14 லட்சம் வரை அதிக விலைக் கொண்டது என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்ததாக உள்ளது. பிரீமியம் அம்சங்களும், ஸ்பெஷல் கூறுகளையும் வழக்கமான வேரியண்டுகளை மிக அதிகளவில் பைக் தாங்கியிருக்கின்றது.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

அதுமட்டுமின்றி, பன்முக நிறங்களாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், மேட் கார்பன் ஃபைபர், பிரஷ்ஷட் அலுமினியம் ஷேட் மற்றும் சிவப்பு நிறம் ஆகிய வண்ணங்களே இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பைக்கில் மர்செஷினி ஃபோர்ஜட் மக்னீசியம் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான அலுமினிய வீல்களைக் காட்டிலும் 0.9 கிலோ எடைக் குறைவானதாக உள்ளது.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

இதைத்தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் திறனுக்காக ஷெல்ஃப் ப்ரெம்போ ஸ்டைலிமோ ஆர் காலிபர்களும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக ஓஹ்லின்ஸ் ஸ்மார்ட் இசி 2.0 செட்-அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், அட்ஜெஸ்டபிள் அலுமினியம் மற்றும் சிஎன்சி மெஷின்ட் ஃபூட்பெக்குகள், கார்பன் ஃபிரெண்ட் மட்குவார்ட் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளிட்டவை இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ்பி பைக் அறிமுகம்... கப்பல்போலிருக்கும் கார்னிவல் காரைவிட விலை அதிகம்... தலையே சுத்துது!

மிக சிறந்த இயக்கத்திற்காக இருசக்கர வாகனத்தில் 1,103 சிசி வி4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 208 பிஎச்பி பவர் மற்றும் 123 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், எஞ்ஜின் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati launched streetfighter v4 sp super bike in india at inr 34 99 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X