டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ (Scrambler 1100) மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ.12.89 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

இத்தாலியன் இருசக்கர வாகன பிராண்டாக விளங்கும் டுகாட்டி பிராண்டில் இருந்து முதல் ஸ்க்ராம்ப்ளர் பைக் 1971இல் அறிமுகம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ ஆகும். இதனை தற்போது இந்திய சந்தையில் ரூ.12.89 லட்சம் என்கிற விலையில் டுகாட்டி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

1970களில் பயன்பாட்டில் இருந்த பழமையான டுகாட்டி லோகோ உடன் இந்த பைக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கின் தோற்றம் பழமையான ஸ்டைலை தற்கால மாடர்ன் தொடுதல்களுடன் கொண்டதாக உள்ளது. டுகாட்டியின் வழக்கமான ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கும் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும். இருப்பினும் அதனை தாண்டி பழமையான தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காக டுகாட்டி நிறுவனம் இந்த ட்ரிபியூட் ப்ரோ வெர்சனில் வட்ட வடிவிலான ஹெட்லைட், சிறிய அலவிலான முன்பக்க ஃபெண்டர் உள்பட சில அம்சங்களை வழங்கியுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

மேல்நோக்கி தூக்கப்பட்ட பைக்கின் பின் இறுதிமுனை, சரியாக இருக்கைக்கும் பின் சக்கரத்திற்கு மத்தியில் இரட்டை-எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பு மற்றும் வயர்-ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த அம்சங்களில் சேர்க்கலாம். இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஸ்பெஷல் எடிசன் பைக்கிற்கு கியாலோ ஓக்ரா பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி இயந்திர பாகங்கள் வழக்கமான ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கையே ஒத்து காணப்படுகிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

இதன்படி முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய, தலைக்கீழான 45மிமீ மர்சோச்சி ஃபோர்க் முன்பக்கத்திலும், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கயாபா மோனோஷாக் பின்பக்கத்திலும் சஸ்பென்ஷன் யூனிட்களாக வழக்கம்போல் தொடர்கின்றன. பிரேக்கிங் பணியை 320மிமீ ரோடார்கள் முன்பக்கத்திலும், 245மிமீ டிஸ்க் பின்பக்கத்திலும் கவனித்து கொள்கின்றன

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

இயக்க ஆற்றலை வழங்க 1,079சிசி, எல்-இரட்டை, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 86 பிஎச்பி மற்றும் 4,750 ஆர்பிஎம்-இல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் வழக்கமான ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்குகளில் இதே என்ஜின் அதிகப்பட்சமாக 84.48 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படுகிறது. என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருக்க, வழக்கமான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் விலை ரூ.11 லட்சமாக உள்ளது. இந்த எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் டார்க் ப்ரோ வேரியண்ட் கிடைக்கிறது. இவை இரண்டிற்கும் மத்தியில் ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ வேரியண்ட் ரூ.11.95 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டிரிபியூட் ப்ரோ வேரியண்ட்டை காட்டிலும் விலைமிக்கதாக ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.74 லட்சமாக உள்ளது. மற்ற மூன்று வேரியண்ட்களுடன் புதிய டிரிபியூட் வேரியண்ட் சக்கரங்களின் டிசைனில் வேறுப்படுகிறது. ஏனெனில் மற்ற மூன்று அலாய் சக்கரங்களுடன் வழங்கப்பட, புதிய வேரியண்ட் மட்டும் பழமையான தோற்றத்திற்காக ஸ்போக் சக்கரங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ட்ரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.12.89 லட்சம்!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் ஓட்டுனர் இருக்கை 810மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டர்கள் ஆகும். வழக்கமான ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் மொத்த கெர்ப் எடை 206 கிலோ. ஆனால் புதிய டிரிபியூட் எடிசனின் எடை சற்று அதிகமாக 211 கிலோ ஆகும். முன்பக்கத்தில் இந்த பைக்குகள் முழு-எல்இடி விளக்கை பெறுகின்றன.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati scrambler 1100 tribute pro launched in india features engine details
Story first published: Thursday, March 10, 2022, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X