ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம்... செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக்...

இந்தியாவில் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நிலவரப்படி டாப் பட்டியல் வெளியாகியுள்ளது. எந்த நிறுவனம் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. எவ்வளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது வாருங்கள் முழுமையாகக் காணலாம்.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகமாகி வருகிறது. தற்போது மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விருப்பப்பட்டு வாங்கி வருகின்றனர். ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நல்ல வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் எலெக்டரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

அதன்படி பட்டியலில் இந்தியாவிலேயே அதிக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருப்பது ஓகினவா நிறுவனம் தான். இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 6,979 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது. இதுவே கடந்த மே மாதம் மொத்தம் 8,888 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது ஒரே மாதத்தில் 1912 ஸ்கூட்டர் விற்பனை குறைந்துள்ளது. இது 21.51 சதவீத விற்பனை சரிவாகும்.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

இரண்டாவது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 6,534 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் மொத்தம் 5,529 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது 18.18 சதவீதம் அதிகம். மார்கெட்டில் இந்நிறுவனம் மொத்தம் 16.89 சதவீத பங்கை வைத்துள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

அடுத்த இடத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் சிப் தட்டுப்பாடு காரணமாக எலெக்டரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாத காரணத்தால் மே மாதம் வெம் 2,739 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வரும் விதமாகக் கடந்த ஜூன் மாதம் 6,486 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. இது 136.80 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

அடுத்த இடத்தில் பலரும் எதிர்பார்த்த ஓலா நிறுவனம் இருக்கிறது. எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த செய்தி வைரலாக பரவிய நிலையில் கடந்த ஜூன் மாதம் வெறும் 5,689 ஸ்கூட்டர்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் 8,681 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன. ஒரே மாதத்தில் 34.47 சதவீத விற்பனை வீழ்ச்சியாகியுள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

பட்டியலில் 5வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் ஐக்யூப் ஸ்கூட்டரை மொத்த விற்பனையாக 4,667 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் வெறும் 2,637 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஒரே மாதத்தில் 76.98 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

பட்டியலில் 6வது இடத்தில் ஏத்தர் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 3,797 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த மே மாதம் 3,098 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. ஒரே மாதத்தில் 22.56 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

பட்டியலில் 7வது இடத்தில் ரிவோல்ட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் ஒட்டு மொத்தமாக 2,419 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் வெறும் 1,585 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரே மாதத்தில் 52.62 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 2,125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து 8 இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் ஜாய் இ பைக்ஸ், இந்நிறுவனம் மொத்த விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் 2,055 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 3.41 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ஒலா ஒகினாவிற்கு சோதனை காலம் . . . செம கம் பேக்கிற்காக காத்திருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் . . .

இந்த எலெக்டரிக் இருசக்கர வாகன செக்மெண்டே ஒட்டு மொத்தமாக 9.89 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த செக்மெண்டில் கடந்த ஜூன் மாதம் 38,693 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த மே மாதம் 35,212 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Electric scooter sales in June 2022 know ola Okinawa Ather position
Story first published: Tuesday, July 5, 2022, 11:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X