பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும்

இன்று ஸ்கூட்டர் வாங்கும் பலருக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா? அல்லது பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அதற்குப் பதில் சொல்லும் வகையில் இந்த பதிவை உங்களுக்கான வழங்கியுள்ளோம் அதைக் காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

ஆட்டோமொபைல் துறை மிகச் சமீபகாலமாக ஒரு பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பெட்ரோல் வாகனங்கள் மட்டுமே மார்கெட்டில் இருந்த நிலையில் கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பே மார்கெட்டிற்கு எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது. ஆனால் அதன் வேகம் மிகக் குறைவாக இருந்ததால் மக்கள் பலர் அதைப் பெரிய அளவில் விரும்பவில்லை. ஆனால் இன்று வேகம் மற்றும் ரேஞ்ச் அதிகமாகி ஸ்கூட்டர்கள் வந்துவிட்டன.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

ஓலா நிறுவனம் வெளியிட்ட எஸ்1 ப்ரோ, ஏத்தர் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் எல்லாம் நல்ல வேகம் மற்றும் அதிக ரேஞ்ச் கொண்ட வாகனங்களாக மார்கெட்டிற்கு வந்தது மக்களை ஈர்த்துள்ளது. மக்கள் பலர் தற்போது ஆர்வமாக எலெக்டரிக் ஸ்கூட்டர்களை வாங்கத் துவங்கிவிட்டனர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பற்றி எரிந்த செய்திகள் வைரலானாலும் இது ஒட்டு மொத்தமாக விற்பனையை எல்லாம் பெரிய அளவில் பாதிக்கவில்லை மக்கள் பலர் தொடர்ந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

அதனால் பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களின் விற்பனை குறைகிறது என அர்த்தம் இல்லை. இதன் விற்பனையும் சிறப்பாகவே இருக்கிறது. இன்று ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிட்டர், டிவிஎஸ் என் டார்க் ஆகிய வாகனங்களுக்கு மார்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை மற்றும் பல விஷயங்களை மனதில் வைத்து மக்கள் பலருக்குப் பாரம்பரியமாக உள்ள பெட்ரோல் ஸ்கூட்டர்களை வாங்குவதா அல்லது எலெக்டரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதா? எது லாபம்? எது பாதுகாப்பானது? எது நீடித்து உழைக்கும் எனப் பல சந்தேகங்கள் உள்ளது. இது குறித்த விரிவாகத் தகவல்களைத் தான் இங்கே காணப்போகிறோம்.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

விலை

பொதுவாக பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்டரிக் ஸ்கூட்டர்கள்தான் விலை அதிகம். ஆனால் தற்போது அரசு எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க எலெக்டரிக் ஸ்கூட்டர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விலையும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே தரமான விலைக்கு வந்துவிட்டது.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

பராமரிப்பு விஷயத்தைப் பார்த்தால் எலெக்டரிக் வாகனங்கள் தான் மிகவும் குறைவான பராமரிப்பு அம்சங்களைக் கொண்டது. பொதுவாக எலெக்டரிக் வாகனங்களில் மிகக் குறைவான அளவிலேயே உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இயங்கும் தொழிற்நுட்பமும் மிகவும் சிம்பிளானது தான் அதனால் இதைப் பராமரிப்பது என்பது எளிது, குறைந்த செலவிலேயே பராமரிப்பைச் செய்ய முடியும். ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் எலெக்டரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் கூடுதல் பராமரிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

நீடித்து உழைக்கும் விஷயத்தைப் பொருத்தவரை பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான் மிக நீண்ட காலங்களுக்குத் தனது உழைப்பு வழங்குகிறது. எலெக்டரிக் வாகனங்களைப் பொருத்தவரை அதன் பேட்டரிக்கு 4 ஆண்டுகள் வரை ஆயுள் இருக்கும். அதற்குப் பிறகு ஆயுள் குறையும். பேட்டரியை மாற்றினால் அதன் உழைப்பு அதிகரிக்கும். ஆனால் பேட்டரியை மாற்றும் செலவு மிகவும் அதிகம்.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

செயல்திறன்

செயல் திறனைப் பொருத்தவரை எலெக்டரிக் வாகனங்கள் நல்ல பிக்கப் கொண்டது. குறிப்பிட்ட வேகத்தை விரைவாக எட்டிவிடும். மேலும் ஸ்மூத்தான ஆக்ஸிலேரேஷனையும் வழங்கும். சிட்டிக்குள் பயன்படுத்துவதற்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் சிறப்பான செயல்பாட்டை வழங்கும். அதற்காக பெட்ரோல் வாகனங்கள் மோசம் எனச் சொல்ல முடியாது நீண்ட தூரப் பயணத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்கும்.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

ரேஞ்ச் மற்றும் பயன்பாடு

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே இந்த ரேஞ்ச் தான். வாகன நிறுவனங்கள் முழு சார்ஜில் அதிக தூரம் செல்லும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நாம் வாங்கி பயன்படுத்தும் போது அதை விட மிகக் குறைவான ரேஞ்சே கிடைக்கிறது. ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பொருத்தவரை நாம் அதன் மைலேஜை சுலபமாகக் கணக்கிட முடியும். வாகன நிறுவனங்கள் சொல்லும் மைலேஜிற்கும் நாம் பயன்படுத்தும் போது கிடைக்கும் மைலேஜிற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

அதுவே முழு சார்ஜில் ஒரு எவ்வளவு தூரம் செல்கிறது எனக் கணக்கிட்டால், அது முழு டேங்க் பெட்ரோலில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் செல்லும் தூரத்தை விடக் குறைவு தான். அதனால் நீண்ட தூரப் பயணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றது இல்லை. அடிக்கடி அதை சார்ஜ் போடுவது சிரமம். ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்களை பொருத்தவரை ஆங்காங்கே உள்ள பெட்ரோல் ஸ்டேஷன்களில் பெட்ரோல் அடைத்துக்கொள்ளலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜ் ஆக சில மணி நேரங்கள் ஆகலாம். ஆனால் பெட்ரோல் ஸ்டேஷன்களில் பெட்ரோல் அடிப்பது சுலபம்.

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

எதை வாங்குவது?

இதை எல்லாம் படித்ததும் உங்களுக்கு மேலும் குழப்பம் அதிகமாகியிருக்கலாம்.ஆனால் நீங்கள் தெளிவாக முடிவு செய்ய நாங்கள் ஒரு யோசனை சொல்கிறோம். அதாவது நீங்கள் வாகனம் வாங்கப்போகிறீர்கள் என்றால் அதை எங்கு, எதற்காகப் பயன்படுத்தப்போகிறீர்கள் என யோசனை செய்யுங்கள்

பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்கலாமா? எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வாங்கலாமா? குழப்பமா இருக்கா? இதை படிங்க தெளிவு கிடைக்கும் . . .

உங்கள் வாகனம் அதிக நெருக்கடி உள்ள சாலைகளில் சிறிய தூரம் மட்டுமே அதிகம் பயன்படுத்தினால் நீங்கள் தாராளமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம். ஆனால் நீங்கள் நீண்ட தூரம் ஓட்டுகிறீர்கள், நெடுஞ்சாலைகளில் அதிகம் பயன்படுத்துகிறீர்கள். அல்லது ஆஃப்ரோடு பயன்பாடு அதிகம் இருக்கும் என்றால் உங்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான் சிறந்தது. எலெக்டரிக் ஸ்கூட்டர் இன்னும் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் செயல்பாடுகளை சமன் செய்யும் அளவிற்கு தொழிற்நுட்பம் வளரவில்லை. அது என்று பெட்ரோல் ஸ்கூட்ரின் செயல்பாடுகளை எல்லாம் சமன் செய்கிறதோ அன்று பெட்ரோல் ஸ்கூட்டர்களின் தேவையே இல்லாமல் போகும் என்பதே உண்மை.

Most Read Articles
English summary
Electric Vs Petrol Scooter which is the best and most profitable to buy
Story first published: Monday, July 18, 2022, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X