நம்பவே முடியல... இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்!

இப்பதிவில் நாம் பார்க்க இருக்கும் மின்சார பைக் ஓர் முழுமையான சார்ஜில் சென்னையில் இருந்து பாண்டிக்கு போய்ட்டு, மீண்டும் அங்கிருந்து சென்னைக்கே ரிட்டர்ன் வருமளவிற்கு சூப்பரான ரேஞ்ஜ் திறனுடன் உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையேக் கீழே உள்ள பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

எனெர்ஜிகா எக்ஸ்பீரியா எனும் நிறுவனம் அட்வென்சர் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தைக்காக வெளியீடு செய்திருக்கின்றது. மிக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட மின்சார பைக்காக இதனை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் மட்டுமல்ல பைக் ஓர் முழுமையான சார்ஜில் வழங்கும் ரேஞ்ஜ் திறனும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

அதாவது, இந்த பைக்கை ஒரு முறை முழுசா சார்ஜ் செஞ்சா சென்னையில் இருந்து பாண்டுக்கு போய்ட்டு, மறுபடியும் அங்கிருந்து சென்னைக்கு வந்திடலாம். இந்தளவிற்கு சூப்பரான ரேஞ்ஜை எனெர்ஜிகா எக்ஸ்பீரியா எலெக்ட்ரிக் அட்வென்சர் பைக் வழங்கும். அதாவது, முழு சார்ஜ் திறனில் 420 கிமீ வரை அது ரேஞ்ஜ் தரும்.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை-டூ-பாண்டி செல்ல சுமார் 155 கிமீ பயணிக்க வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக 310 கிமீ ஆகும். இந்த இடைவெளியையே ஒற்றை சார்ஜிலேயே இந்த எலெக்ட்ரிக் பைக் வாயிலாக கவர் செய்துவிட முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜை வழங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் 22.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

இதை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 40 நிமிடங்களே போதும். அதுவே 24kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்தால் இதைவிட விரைவாகவே பைக்கை சார்ஜ் செய்துவிட முடியும். ஆகையால், இந்த அட்வென்சர் எலெக்ட்ரிக் அதிக தூரம் பயணிக்கக் கூடிய வாகனம் மட்டுமல்ல, அது அதிக வேகத்தில் சார்ஜாக கூடிய வாகனமும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

ஆகையால், இந்த பைக் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து, பைக்கைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கும் வகையில் இன்னும் பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், 101 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்மோட்டார் இ-பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

இந்த மோட்டாரின் உச்சபட்ச வேகம் பற்றிய துள்ளியமான விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, ரேஸ் பைக்குகளுக்கு இணையாக சீறி பாய்ந்து செல்லும் திறன் இதற்கு உண்டு என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேநேரத்தில், எனெர்ஜிகா நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான ஸ்ட்ரீட்ஃபைட்டர் மற்றும் ரோட்ஸ்டர் பைக்குகளைக் காட்டிலும் சற்று குறைவான வேகத்தை அது வெளிப்படுத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

மோட்டார்சைக்கிளில் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈகோ, ரெயின், அர்பன் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், ஆறு லெவல்கள் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிஎஃப்டி திரை உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

ஆனால், இந்த மோட்டார்சைக்கிளை பிரத்யேகமாக சர்வதேச சந்தைக்காக மட்டுமே எனெர்ஜிகா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த தகவல் மட்டும் சற்றே வேதனையளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இந்தியர்கள் பலர் இதுமாதிரியான ஓர் எலெக்ட்ரிக் பைக்கையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

இந்த நிலையிலேயே எனெர்ஜிகா எக்ஸ்பீரியா அட்வென்சர் எலெக்ட்ரிக் பைக் இந்தியர்களுக்கு இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. எனெர்ஜிகா நிறுவனம் இந்த மின்சார பைக்கை புதிய ட்யூப்லர் ஃப்ரேமால் உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பேட்டரி, பேட்டரி கன்ட்ரோல்லர் மற்றும் மோட்டார் உள்ளிட்டவை ஸ்பெஷலாக இந்த பைக்கிற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மின்சார பைக் நம்ம கையில இருந்தா சென்னை-டூ-பாண்டி போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம்... வந்திட்டு இன்னும் கொஞ்சம் தூரம்கூட ஊர் சுத்தலாம்!

குறிப்பு: இந்த படம் நீண்ட தூர பயணத்தை குறிக்கும் விதமாக உதாரணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவான அம்சங்களே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இருக்கை, சஸ்பென்ஷன் உள்ளிட்ட ரைடிங் அம்சங்கள் அனைத்தும் லாங் டிரைவிற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், சில நவீன தொழில்நுட்ப கருவிகளும் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை நீண்ட தூர பயணத்தை சுவராஷ்யமானதாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Energica experia electric adventure bike unveiled for international market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X