வெறும் 6 பைசா செலவில் 1 கிமீ பயணம்... இந்திய நிறுவனம் களமிறக்கிய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எவோலெட் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போனி இஇசட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு கிமீ பயணிக்கு 6 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் எவோலெட் (Evolet)-ம் ஒன்று. இந்த நிறுவனமே இந்தியர்களைக் கவரும் விதமாக புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. போனி இஇசட் (Pony EZ) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை மிக மிக மலிவு விலையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓர் ஒன் பிளஸ் 9 ஆர்டி ஸ்மார்ட் போனுக்கு இணையான விலையிலேயே இந்த மின்சார இருசக்கர வாகனம் விற்பனைக்குக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 41,124 ரூபாயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக மிகக் குறைவான விலையிலேயே எவோலெட் இஇசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. அனைவராலும் நுகரக் கூடிய விலையே வாகனத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை மட்டுமே அதில் பயணிக்கும் செலவும் மிக மிக குறைவே ஆகும். நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி எவோலெட் போனி இஇசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 6 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களை இந்த தகவல் குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் மின்சார வாகனம் என்றாலே மிக மிக அதிக விலையைக் கொண்டவை என்ற கண்ணோட்டம் இருக்கின்றது. இதன் விளைவாகவே பலருக்கு எட்டாக் கனியாக அது இருப்பதாக கருத்துகள் கூறப்படுகின்றன. இவை அனைத்தையும் உடைத்தெறியும் வகையில் எவோலெட் நிறுவனம் போனி இஇசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஐசிஏடி சான்று பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

இதில், வாட்டர் ப்ரூஃப் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 250 வாட் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இத்துடன், ஓர் ஃபுல் சார்ஜில் 90 கிமீ முதல் 120 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேகத்தைப் பொருத்து ரேஞ்ஜ் திறன் மாறுபடும். மெதுவான வேகத்தில் சென்றால் மட்டுமே உச்சபட்ச ரேஞ்ஜை வழங்கும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எவோலெட் நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. போனி கிளாசிக் மற்றும் போனி இசட் எனும் இரு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இதில், இஇசட் தேர்வில் 48V / 28 Ah விஆர்எல்ஏ லீட் ஆசிட் பேட்டரியும், போனி கிளாசிக் தேர்வில் 48V / 25 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பன்முக நிற தேர்வுகளிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம் மற்றும் சில்வர் ஆகிய நிற தேர்வுகளே எவோலெட் நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக நிறுவனம் பன்முக சிறப்பு திட்டங்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், 1 வருட வாரண்டி இருசக்கர பேட்டரிக்கும், 18 மாதம் மோட்டாருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 150 கிலோ ஆகும். ஆகையால், அதனைக் கையாள்வது மிக சுபலம் இருக்கும். இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பட்ஜெட் மின்சார இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் பொருட்டு எவோலெட் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கும் மின் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Evolet pony ez launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X