இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் ஸ்பிளெண்டரின் ஸ்பெஷல் எடிசனை ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஸ்பிளெண்டர் பைக் ஆனது சில புதிய மற்றும் அப்டேட்டான வசதிகளுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

இந்த புதிய அப்டேட்கள் அனைத்தும் ஏற்கனவே ஹீரோவின் பிளஷர் எக்ஸ்டெக் ஸ்கூட்டர் உள்பட சில ஹீரோ தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். அவற்றில் சில முக்கியமானவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

ப்ளூடூத்

புதிய ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கில் பிரிவிலேயே முதல்முறையாக ப்ளூடூத் இணைப்புடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் திரையின் வாயிலாக செயல்முறை மற்றும் பயன்பாட்டாளர்களுக்கு இணக்கமான அம்சங்களை பெறலாம்.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

இந்த அம்சங்களில் மொபைல்போன் அழைப்பு எச்சரிப்புகள், புதிய குறுஞ்செய்தி எச்சரிப்புகள், ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் & குறை எரிபொருள் இண்டிகேட்டர் உடன் இரு பயண மீட்டர் உள்ளிட்டவை அடங்குகின்றன. தற்கால வாகனங்களில் அடிப்படை அம்சமாக மாறிவரும் ப்ளூடூத் இணைப்பு வசதி உண்மையில் ஸ்பிளெண்டர் பைக்கின் பயண அனுபவத்தை மேம்படுத்தும்.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

யுஎஸ்பி சார்ஜிங்

ப்ளூடூத் இணைப்பு வசதிகளுக்கு முன்பாகவே இந்திய இருசக்கர வாகனங்களை வந்தடைந்துவிட்ட அம்சம்தான் யுஎஸ்பி சார்ஜிங் ஆகும். ஆனால் இந்த வசதி பெரும்பாலும் ஸ்கூட்டர்களிலேயே வழங்கப்பட்டு வந்தன. பைக்குகளில் தற்போதுதான் மெல்ல மெல்ல கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

குறிப்பாக, ஸ்பிளெண்டர் போன்ற அன்றாட பயன்பாட்டு பைக்குகளில் யுஎஸ்பி சார்ஜிங் போன்ற அம்சம் இடம்பெறுவது வாகனத்தை மேலும் செயல்முறைக்கு இணக்கமானதாக மாற்றும். மேலும், ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பெயரையும் பிரபலமானதாக மாற்றும்.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

எல்இடி விளக்குகள்

புதிய ஸ்பிளெண்டர் பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றும் விதமாக அதிக ஒளிச்செறிவு விளக்கு (HIPL) எல்இடி தரத்திலும், பிரத்யேகமான கிராஃபிக்ஸையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன் புதியதாக கொடுக்கப்பட்டுள்ள எல்இடி ஸ்ட்ரிப் ஆனது பைக்கின் முன்பக்கத்தை புத்துணர்ச்சியானதாக காட்டுகிறது.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

ஐ3எஸ் தொழிற்நுட்பம்

ஐடியல் ஸ்டாப்-ஸ்டார்ட் அமைப்பிற்கு ஹீரோ வைத்து கொண்டுள்ள பெயர்தான் ஐ3எஸ் ஆகும். பைக்கின் என்ஜின் அமைப்புடன் இணைந்து செயல்படுகின்ற இந்த தொழிற்நுட்பமானது வாகனத்தின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

என்ஜின்

புதிய ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கில் பிஎஸ்6 -க்கு இணக்கமான 97.2சிசி என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 7.9 பிஎஸ் மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 8.05 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் வழக்கமான 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

புதிய ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.72,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கிற்கு ஐந்தாண்டுகள் வரையில் சிறப்பு உத்தரவாதத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்க இருக்கின்றது. மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால், என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதியையும் புதிய ஸ்பிளெண்டர்+ பைக் பெற்றுள்ளது.

இந்த 5 அம்சங்களுக்காகவே புதிய ஹீரோ ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக்கை வாங்கலாம்!!

இதுமட்டுமின்றி, பைக் ஒரு பக்கமாக சரியும்போது என்ஜின் தானாக ஆஃப் ஆகும் வசதியும் புதிய ஸ்பிளெண்டர் மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பார்க்கிளிங் பெடா நீலம், கேன்வாஸ் கருப்பு, டொர்னடோ க்ரே, பேர்ல் வெள்ளை என மொத்தம் 4 விதமான நிறத்தேர்வுகளில் புதிய ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பு: முதல் 2 படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
English summary
Five new cool features of hero splendor plus xtec
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X