விலை ரூ. 39,999 மட்டுமே... இவ்ளோ அழகான ஸ்கூட்டரை இவ்ளோ குறைவான விலையில் கொடுக்குறதுக்கு தனி மனசு வேணுங்க...

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்ரெட்டா (Greta), புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அழகான அந்த ஸ்கூட்டரை மிகக் குறைவான விலையில் அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

கிரெட்டா நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹார்பர் இசட்எக்ஸ் சீரிஸ்-ஐ (Harper ZX Series-I) எனும் மாடலையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 41,999 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

மிகக் குறைவான பல சிறப்பு வசதிகளையும், அழகான தோற்றத்திலும் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருப்பது மிந் வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பன்முக பேட்டரி மற்றும் சார்ஜர் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி பன்முக நிற தேர்வுகளிலும் இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

கிரீன், ஜெட் பிளாக், குளாஸ்ஸி கிரே, மேஜஸ்டிக் மேக்னடா, ட்ரூ ப்ளூ மற்றும் கேன்டீ ஒயிட் ஆகிய நிற தேர்வுகளிலேயே கிரெட்டா ஹார்பர் இசட்எக்ஸ் சீரிஸ்-ஐ ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த மின்சார ஸ்கூட்டரில் பிஎல்டிசி மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மின் சக்தி வழங்க லித்தியம் அயன் பேட்டரி பேக்கே வழங்கப்படுகின்றது.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

இந்த பேட்டரி பேக் ஏற்கனவே கூறியதைப் போல் நான்கு விதமான தேர்வுகளில் கிடைக்கும். அவை V2 48v-24Ah, V3 48v-30Ah, V2 60v-24Ah, V2 60v-30Ah ஆகும். இதில், V2 48v-24Ah மற்றும் V2 60v-24Ah ஆகிய இரு பேட்டரி பேக்குகளும் ஓர் முழு சார்ஜில் 60 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். இதைவிட சற்று ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக்குகளாக V3 48v-30Ah மற்றும் V2 60v-30Ah பேட்டரி பேக்குகள் இருக்கின்றன. இவை ஓர் முழுமையான சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

இதேபோல் விருப்பத்தின் பேரில் வெவ்வேறு விதமான திறன்கள் கொண்ட சார்ஜர்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதன் விலை ரூ. 3 ஆயிரம் முதல் ரூ 5 ஆயிரமாக இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து அதற்கான புக்கிங் பணிகள் தற்போது தொடங்கியிருக்கின்றது.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

ரூ. 2 ஆயிரம் முன் தொகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இப்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, புக் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து 45-75 நாட்களுக்கு உள்ளாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உடனடியாக புக் செய்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் சலுகை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ரூ. 39,999-க்கே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

புதிய கிரெட்டா ஹார்பர் இசட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக சிறப்பு வசதிகளை தாங்கிய மின்சார வாகனமாக காட்சியளிக்கின்றது. அதில், பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய லைட்டுகள், எலெக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம், ஆன்டி தெஃப்ட் அலாரம் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் ஷிஃப்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

இதுதவிர, எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை, சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, ஃபைன்டு மை ஹெயிக்கிள் அலாரம், யுஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்களும் புதிய கிரெட்டா ஹார்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மூன்றாண்டுகள் பேட்டரி வாரண்டியும் வழங்கப்பட இருக்கின்றது.

மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்!

எலெக்ட்ரிக் அனைத்து பேட்டரி தேர்வுகளும் முழு சார்ஜை ஏற்ற 5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். அதுவே, 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்களே போதுமானது இருக்கின்றது. ஈகோ, சிட்டி மற்றும் டர்போ என மூன்று விதமான ரைடிங் மோட்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பு: முதல் படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Greta harper zx e scooter launched at rs 41999
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X