இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி தரலாம்! விலைக்காக மட்டுமில்ல வேறொரு காரணம் இருக்கு!

ஜிடி ஃபோர்ஸ் (GT Force) நிறுவனத்தின் இரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவைகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

ஜிடி ஃபோர்ஸ் (GT Force) இரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜிடி சோல் வேகாஸ் (GT Soul Vegas) மற்றும் ஜிடி டிரைவ் ப்ரோ (GT Drive Pro) ஆகிய இரு புதுமுக மாடல்களையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் உங்க பசங்களுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

ஏனெனில் இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் மிகக் குறைவான வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இவற்றின் அதிகபட்ச வேகமே மணிக்கு 25 கி.மீட்டர்., மட்டுமே ஆகும். தற்போது நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்து சம்பவங்களுக்கு அதீத வேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

அதிக வேகத்தில் பயணித்த காரணத்தினால் இவரின் சொகுசு கார் விபத்தில் சிக்கியது. பலதரப்பட்ட பாதுகாப்பு கருவிகள் இருந்தும் இவர் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மறைய நேரிட்டது. இதுமாதிரியான கசப்பான அனுபவங்களை தவிர்க்க குறைந்த வேகத்தில் பயணிப்பது அவசியமானதாக உள்ளது. இதை மையமாகக் கொண்டே ஜிடி போர்ஸ் நிறுவனம் ஜிடி சோல் வேகாஸ் மற்றும் ஜிடி டிரைவ் ப்ரோ ஆகிய இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

ஜிடி சோல் வேகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்:

ஜிடி சோல் வேகாஸ் இரு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். லீட் ஆசிட் மற்றும் லித்தியன் அயன் பேட்டரி ஆகியவையே அவை ஆகும். லீட் ஆசிட் பேட்டரி கொண்ட தேர்விற்கு ரூ. 47,370ம், லித்தியம் அயன் பேட்டரி தேர்விற்கு ரூ. 63,641ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியின் ரேஞ்ஜ் திறன் 60-65 கிமீ ஆகவும், லீட் ஆசிட் பேட்டரி தேர்வின் ரேஞ்ஜ் திறன் 50-60 கிமீட்டராகவும் இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

நகர்புற பயன்பாட்டை கருத்தில் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்தளவு மிகக் குறைவான ரேஞ்ஜ் திறனுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இத்துடன், மணிக்கு உச்சபட்சமாக 25 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய மின் மோட்டாரே ஜிடி சோல் வேகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

இதுதவிர, சிறப்பு வசதிகளாக ஆண்டி தெஃப்ட் அலாரம், ரிவர்ஸ் மோட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், இக்னிசன் லாக் ஸ்டார்ட், ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் டூயல் ட்யூப் தொழில்நுட்பம் கொண்ட சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. குளாஸி ரெட், கிரே மற்றும் ஆரஞ்சு ஆகிய நிற தேர்வுகளில் ஜிடி சோல் வேகாஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

ஜிடி டிரைவ் ப்ரோ:

மேலே பார்த்த ஜிடி சோல் வேகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஜிடி டிரைவ் ப்ரோ காட்சியளிக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் லீட் ஆசிட் மற்றும் லித்தியம் அயன் என இரு விதமான பேட்டரி பேக் தேர்வை ஜிடி ஃபோர்ஸ் வழங்குகின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

இதன் லீட் ஆசிட் பேட்டரி தேர்வானது ரூ. 67,208க்கும், லித்தியம் அயன் பேட்டரி தேர்வு ரூ. 82,751க்கும் விற்கப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் நகர்புறத்தின் குறைந்த தூர பயணத்தை கருத்தில் கொண்டு உருவாக்கியிருப்பதால் மிகக் குறைவான ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

அந்தவகையில், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 1.34 kWh லீட் ஆசிட் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50-60 கிமீ ரேஞ்ஜையும், 1.24 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கை ஒரு முறை ஃபுல்லாக சார்ஜ் செய்தால் 60-65 கிமீ வரையிலும் ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், கூடுதல் சிறப்பு வசதிகளாக ஜிடி டிரைவ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்டி தெஃப்ட் அலாரம், பார்க்கிங் மோட், ரிவர்ஸ் மோட், செல்போன் சார்ஜிங் வசதி மற்றும் கட்-ஆஃப் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்க பசங்களுக்கு தயங்காம வாங்கி கொடுக்கலாம்... விலைக்காக மட்டுமே இல்ல முக்கிய காரணம் ஒன்னு இருக்கு!

ஜிடி நிறுவனம் வெகு விரைவில் அதன் விற்பனையாளர்கள் மையத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, 80க்கும் மேற்பட்ட நகரங்களில் நிறுவனம் அதன் விற்பனையகங்களை நிறுவ இருக்கின்றது. தோராயமாக 100க்கும் மேற்பட்ட நிலையங்களை அது உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மஹராஷ்டிரா, கர்நாடகா, ஹர்யானா, பஞ்சாப், உபி, உத்தர்காண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Gt force launches soul vegas and drive pro e scooters launched in india
Story first published: Thursday, September 29, 2022, 21:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X