ஹார்லி டேவிட்சன் குறைந்த விலை எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கி வரும் லிவ்ஒயர் ஒன் (LiveWire One) எலெக்ட்ரிக் பைக்கைவிட குறைவான விலைக் கொண்ட மற்றுமொரு மின்சார மோட்டார்சைக்கிளை விரைவில் உலகளவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

மின் வாகனங்களுக்கு உலகளவில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. சுற்றுசூழல் பாதுகாப்பில் இவை முக்கிய பங்கினை வகிப்பதால் மக்கள் பலர் தாமாக முன் வந்து எலெக்ட்ரிக் பயன்பாட்டை ஆதரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். முன்னணி வாகன உற்பத்தியாளர்களும் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாறி வருகின்றனர்.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

அந்தவகையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஏற்கனவே கால் தடம் பதித்த நிறுவனங்களில் ஒன்றாக பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது உலக நாடுகள் சிலவற்றில் லிவ்ஒயர் ஒன் (LiveWire One) எனும் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

சற்று காஸ்ட்லியான வாகனமாக அது விற்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் 21,999 டாலர்களுக்கு லிவ்ஒயர் எலெக்ட்ரிக் பைக் விற்கப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக அதன் விலை 16.93 லட்சம் ஆகும். இதனை மிக மிக அதிக விலை என கருதுபவர்களுக்கு குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்கு வழங்க ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டிருக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

அதன் உலக வெளியீட்டு நிகழ்வே வரும் மே 10ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எஸ்2 டெல் மார் லி (S2 Del Mar LE) எனும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே வரும் 10ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்கை உலகளவில் அது வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்தியாவிலும் இந்த மின்சார பைக் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

நிறுவனம் சமீபத்தில் மின்வாகனங்களுக்கென புதிய துணை பிராண்டை உருவாக்கியது. லிவ் ஒயர் எனும் பிராண்டையே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் கீழாகவே குறைந்த விலை மின்சார வாகனத்தை நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் தற்போது மின் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய எஸ்2 டெல் மார் லி விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

பத்து ஆண்டுகள் இந்திய பயணத்தை நிறுத்திக் கொள்வதாக 2020 செப்டம்பரில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நிறுவனம் நாட்டில் மேற்கொண்டு வந்த நேரடி விற்பனை மற்றும் தயாரிப்பு பணிகள் என அனைத்தையும் நிறுத்தியது. நிறுவனத்தின் இந்த செயல் அனைத்து பிரீமியம் இருசக்கர வாகன பிரியர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணியின்கீழே புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் புதிய மாடுலர் ஆரோ இவி ஆர்கிடெக்சர் வாயிலாகவே புதிய எஸ்2 டெல் மார் எல்இ மோட்டார்சைக்கிள் கட்டமைக்கப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விலை குறைவாக விற்பனைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை வாகனத்தின் உருவாக்கத்தில் ஹார்லி டேவிட்சன் கையாண்டிருக்கின்றது. அந்தவகையில், சில சிறப்பம்சங்கள் குறைப்பு, எளிமையான இருசக்கர வாகன வடிவமைப்பு உள்ளிட்டவற்றை அது கையாண்டுள்ளது. இவ்வாறே விலை குறைப்பு யுக்தியை நிறுவனம் கையாண்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

என்னதான் விலை குறைப்பிற்காக பல அதிரடி நடவடிக்கைகளை புதிய பைக்கில் நிறுவனம் கையாண்டிருந்தாலும், அது திறன் வெளிப்பாட்டில் சற்று குறைவில்லாத வாகனமாக இருக்கும் என நம்பக தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஹார்லி டேவிட்சனின் பிற தயாரிப்புகளை போலவே புதிய டெல்மாரும் இருக்கும் என நம்பப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சனின் குறைந்த விலை எலெக்ட்ரி பைக் அறிமுகம் எப்போது? எதிர்பார்பிற்கு முற்று புள்ளி வைத்த நிறுவனம்!

இப்பைக் அமெரிக்காவிலேயே முதலில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே அடுத்தடுத்த கட்டங்களாக உலக நாடுகளுக்கு அது விற்பனைக்கு அறிமுகமாகும். அமெரிக்காவில் 7.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு களமிறங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Sharley davidson globally unveils entry level electric bike s2 del mar le on may 10
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X