ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் (Harley Davidson Nightster) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின்கீழ் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இரு நிறுவனங்களும் இணைந்து ஓர் புதுமுக ஹார்லி டேவிட்சன் பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. நைட்ஸ்டர் (Nightster) எனும் பைக்கையே அவை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

மோட்டார்சைக்கிளுக்கு அறிமுக விலையாக ரூ. 14.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை ஆகும். இந்த கார் ரூ. 13.53 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளை டிஸ்டிரிபியூட் செய்தல், பாகங்கள் மற்றும் அக்ஸசெரீஸ்களை விற்றல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக்கை அது சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

ஏற்கனவே இப்பைக்கிற்கான புக்கிங்குகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன. இதுமட்டுமின்றி டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கியிருக்கின்றன. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ்டர் பைக் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை பைக்கே இந்த நைட்ஸ்டர் மாடல். இது மிக முக்கியமாக பாபர் ரக இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

டிரையம்ப் பானேவில்லே பாபர் மற்றும் இந்தியன் ஸ்கவுட் பாபர் ஆகிய பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கே போட்டியாக விற்பனைக்கு வந்துள்ளது. ஒற்றை வேரியண்டில் மட்டுமே இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இது, மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கன்ஷிப் கிரே மற்றும் ரெட்லைன் ரெட் ஆKிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த நைட்ஸ்டர் பைக்கில் 975டி ரக பைக்குகளில் பயன்படுத்தக் கூடிய மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. அதாவது, வி-ட்வின் கான்ஃபிகரேஷன் மற்றும் லிக்யூடு கூலிங் வசதிக் கொண்ட மோட்டாரையே இப்பைக்கில் ஹார்லி பயன்படுத்தியுள்ளது. இம்மோட்டார் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமைக் கொண்டே இந்த பைக்கை ஹார்லி டேவிட்சன் கட்டமைத்திருக்கின்றது. மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக 41 மிமீ ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து சிறந்த பிரக்கிங் அனுபவம் வழங்க வேண்டும் என்பதற்காக 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 260 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

இத்தகைய சூப்பரான அம்சங்களுடனேயே ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இப்பைக்கில், ஒரே நேரத்தில் 11.7 லிட்டர் பெட்ரோலை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதன் ஒட்டுமொத்த எடை 218 கிலோவாகும். முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் சற்று குறைவான எடை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெகு விரைவில் மலிவு விலை மின்சார பைக் ஒன்றை உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே நிறுவனம் லிவ்ஒயர் ஒன் (LiveWire One) எனும் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 18 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதைவிட குறைவான விலையிலேயே புதிய எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மின்வாகனங்களுக்கு என புதிதாக தனி துணை பிராண்டையே உருவாக்கியிருக்கின்றது. லிவ் ஒயர் எனும் பிராண்டையே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் கீழாகவே நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. தற்போது உருவாக்கப்பட்டு வரும் குறைந்த விலை மின்சார வாகனத்தையும் நிறுவனம் இந்த பிராண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Most Read Articles

English summary
Harley davidson launches nightster bike in india at rs 14 99 lakh
Story first published: Friday, August 12, 2022, 20:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X