ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

சூப்பர் பைக் பிராண்ட்களில் இருந்து கடந்த 2021-22 நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

இந்தியாவில் பட்ஜெட் ரக பைக்குகளுக்கே சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. இருப்பினும் சில சூப்பர் பைக் மாடல்களும் (1000சிசி மற்றும் அதற்குமேல்) நம் நாட்டில் விற்பனையில் உள்ளன. இத்தகைய விலையுயர்ந்த பைக்குகள் டிரையம்ப், கவாஸாகி, ஹார்லி-டேவிட்சன், சுஸுகி மற்றும் ஹோண்டா பிராண்ட்களில் இருந்து சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

நம் நாட்டில் சூப்பர் பைக்குகள் விற்பனை என்றாலே கவாஸாகியின் கை தான் ஓங்கி இருக்கும். கடந்த சில வருட புள்ளி விபரங்களும் அதைதான் வெளிக்காட்டி இருந்தன. ஆனால் நிறைவுற்ற கடந்த 2021-22 நிதியாண்டில் மேற்கூறப்பட்ட 5 பிராண்ட்களில் அதிசயமாக ஹார்லி-டேவிட்சன் முதலிடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும், அமெரிக்காவை சேர்ந்த இந்த சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக கடந்த 2020ஆம் ஆண்டில்தான் அறிவித்தது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

இதன்படி தொழிற்சாலையையும், டீலர்ஷிப் ஷோரூம்களையும் மூடிய ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் நேரடி விற்பனையை தவிர்த்து, ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்ந்து மறைமுக விற்பனையை துவங்கியது. அதாவது தற்சமயம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் நாடு முழுவதும் உள்ள ஹீரோவின் டீலர்ஷிப்களில் குறிப்பிட்ட ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

இந்த வணிக மாற்றம் எந்த அளவிற்கு ஹார்லி-டேவிட்சன் பிராண்டிற்கு நன்மை பயக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் விற்பனை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கடந்த நிதியாண்டில் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்தம் 601 யூனிட் பைக்குகளின் விற்பனை உடன் மற்ற பிராண்ட்களை முந்திக்கொண்டு ஹார்லி-டேவிட்சன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

அதுவே 2020-21 நிதியாண்டில் வெறும் 206 ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால் இந்த அமெரிக்க பிராண்டின் பைக்குகள் விற்பனை ஆனது இந்திய சந்தையில் சுமார் 191.75% அதிகரித்துள்ளது. 601 யூனிட்களில் கிட்டத்தட்ட 531 யூனிட்கள் 1,000சிசி-க்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட ஹார்லி-டேவிட்சன் பைக்குகளாகும். இதில் சமீபத்திய அறிமுகமான பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் மற்றும் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்குகளின் பங்கு இன்றியமையாதது ஆகும்.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

மற்ற பிராண்ட்களின் விற்பனையும் சேர்த்து கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,524 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஹார்லி-டேவிட்சனின் பங்கு மட்டுமே 39.44% ஆகும். ஹார்லி-டேவிட்சனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உள்ளது. டிரையம்ப் பிராண்டில் இருந்து கடந்த நிதியாண்டில் மொத்தம் 336 யூனிட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

இந்த பிராண்டின் விற்பனையும் 178 பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 88.76% அதிகமாகும். மொத்த விற்பனையில் டிரையம்ப்பின் பங்கு 22.05% ஆகும். மூன்றாவது இடத்தை ஜப்பானிய சூப்பர் பைக் பிராண்டான கவாஸாகி 283 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் உண்மையில் கவாஸாகி சூப்பர் பைக்குகளின் விற்பனை முந்தைய 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக 3.74% குறைந்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

அதாவது அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 11 கவாஸாகி சூப்பர் பைக்குகள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 4வது மற்றும் 5வது இடங்களிலும் ஜப்பானிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களான சுஸுகி மற்றும் ஹோண்டாவே உள்ளன. இவற்றின் கடந்த நிதியாண்டு விற்பனை எண்ணிக்கைகள் முறையே 233 மற்றும் 71 யூனிட்களாகும்.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

இதில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த நிதியாண்டில் இருந்துதான் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய ஆரம்பித்தது. ஆனால் ஹோண்டா நிறுவனம் 2020-21 நிதியாண்டில் 92 சூப்பர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் ஹோண்டா சூப்பர் பைக்குகளின் விற்பனை கடந்த நிதியாண்டில் 22.83% அதிகரித்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பு!! எல்லாம் ஹீரோ மோட்டோகார்பின் செயல்!

இந்த 5 பிராண்ட்களில் ஹார்லி-டேவிட்சனின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஹீரோ மோட்டோகார்பையும், அதன் பரந்த டீலர்ஷிப் நெட்வொர்க்கையுமே காரணமாக சொல்ல வேண்டும். மேலும் இந்தியாவில் இருந்த ஹார்லி-டேவிட்சனின் 13 டீலர்ஷிப் மையங்கள் மற்றும் 10 சர்வீஸ் செண்டர்களையும் ஹீரோ மோட்டோகார்ப் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

Most Read Articles
English summary
Harley davidson takes top spot 1000cc plus motorcycle segment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X