மலிவு விலையில் விற்கப்படும் டாப் 5 அட்வென்சர் பைக்குகள்... விலையில் மட்டுமல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லிதான்!

இந்தியாவில் மலிவு விலையில் விற்கப்படும் டாப் ஐந்து அட்வென்சர் பைக்குகளின் லிஸ்டை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

நாட்டில் தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட (கம்யூட்டர்) இருசக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே அட்வென்சர் ரக இருசக்கர வாகனங்களுக்கும் சூப்பராக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், சமீப காலமாக இந்த வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இதன் விளைவாக, முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் பலர் இந்த பிரிவில் தங்களின் பங்களிப்பையும் வகிக்கும் விதமாக சூப்பர் சூப்பரான ஸ்டைலில் அட்வென்சர் ரக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் எந்த இருசக்கர வாகனம் குறைவான விலையிலும், அதிக சிறப்பம்சங்களுடனும் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (Hero Xpulse 200)

நாட்டின் மிகக் குறைவான விலைக் கொண்ட அட்வென்சர் ரக பைக் என்றால் அது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மட்டுமே ஆகும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 1.23 லட்சம் தொடங்கி ரூ. 1.32 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

199.6 சிசி ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொள்ளும்போது மிக சிறப்பான திறன் வெளிப்பாட்டை இது வழங்கும். மோட்டாருடைய பிஎஸ் பவர் 19.1 ஆகவும், என்எம் டார்க் 17.35 ஆகவும் உள்ளது.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

சிறப்பு வசதியாக இந்த பைக்கில் ஆன் மற்றும் ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்வதற்கு ஏதுவான டயர்கள், 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட், எஞ்ஜினுக்கு அடிப்பகுதியில் அலுமினியம் பாஷ் பிளேட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இத்துடன், நீண்ட தூரமான பயணங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக 190 மிமீ சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், 10 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோ ஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழி காட்டக் கூடிய நேவிகேஷன், முழு எல்இடி ஹெட்லைட், பெரிய டிஸ்க்கு பிரேக்குகள் ஏபிஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றன.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

ஹோண்டா சிபி200எக்ஸ் (Honda CB200X)

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு அடுத்தபடியாக குறைவான விலைக் கொண்ட மோட்டார்சைக்கிளாக ஹோண்டா சிபி200எக்ஸ் இருக்கின்றது. இதுவும் ஓர் ஆரம்ப நிலை அட்வென்சர் ரக பைக்கே ஆகும். இந்த பைக் இந்திய சந்தையில் ரூ. 1.46 லட்சம் என்ற குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இதில், 184.4 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 17.2 பிஎஸ் மற்றும் 16.1 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இந்த மோட்டார் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும். ஹீரோ எக்ஸ்பல்ஸைப் போலவே இந்த பைக்கையும் ஆன் மற்றும் ஆஃப் ரோடு சாலை பயணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இப்பைக்கில் கூடுதல் சிறப்பு வசதிகளாக டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல், டிஜிட்டல் டேகோமீட்டர், லோ-ஃப்யூவல் அலர்ட், பில்லியன் கிராப்ரைல், எஞ்ஜின் கில் சுவிட்ச், வாட்ச், டிஜிட்டல் டிரிப்மீட்டர், ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச். 8 ஆன்-போர்டு சென்சார்கள் கொண்ட ஃப்யூவல் இன்ஜெக்சன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் நிலையான அம்சங்கள் ஆகும்.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

யெஸ்டி அட்வென்சர் (Yezdi Adventure)

யெஸ்டி நிறுவனம் மிக சமீபத்தில் அதன் மறு வருகையை இந்தியாவில் பதிவு செய்தது. இதன் வருகையைத் தொடர்ந்து மூன்று அட்டகாசமான மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்தவகையில், அது விற்பனைக்குக் களமிறக்கிய இருசக்கர வாகனங்களில் யெஸ்டி அட்வென்சர் பைக் மாடலும் ஒன்று.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இந்த பைக் தற்போது இந்திய சந்தையில் ரூ. 2.10 லட்சம் தொடங்கி ரூ. 2.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலே நாம் பார்த்த இரு மோட்டார்சைக்கிள்களைக் காட்டிலும் இது சற்று காஸ்ட்லியான பைக் மாடலாகும். இந்த பைக் 334 சிசி லிக்யூடு, சிங்கிள் பாட் மோட்டாரைக் கொண்டது.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 30.2 பிஎஸ் மற்றும் 29.9 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த பைக்கையும் ஆஃப்-ரோடு மட்டுமின்றி ஆன்-ரோடு பயணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பைக்கில் சிறப்பம்சங்களாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத் இணைப்பு, அட்ஜஸ்டபிள் வின்ட்ஷீல்டு, டிஜிட்டல் ஓடோமீட்டர், ஃப்யூவல் கேஜ், சார்ஜிங் பாயிண்ட், மூன்று விதமான ரைடிங் மோட்கள், டிஜிட்டல் ஸ்பீடோ மற்றும் ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

சுஸுகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் (Suzuki V-Strom SX)

யெஸ்டி அட்வென்சர் பைக்கைக் காட்டிலும் சற்று குறைவான சிசி திறனைக் கொண்டதே இந்த சுஸுகி வி-ஸ்ட்ராம் பைக். இப்பைக்கில் 249 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 26.5 பிஎஸ் மற்றும் 22.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

சுஸுகி வி-ஸ்ட்ராம் இந்திய சந்தையில் ரூ. 2.12 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர அட்வென்சர் பைக் என்பதால் பிற இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றது. இந்த பைக்கிலும், ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan)

மலிவு அட்வென்சர் பைக்குகளின் லிஸ்ட் கடைசியாக நாம் பார்க் இருக்கும் மோட்டார் சைக்கிளே ராயல் என்பீல்டு ஹிமாலயன். இதனை மிகவும் பெஸ்டான அட்வென்சர் மோட்டார்சைக்கிள் என்று கூறலாம். இப்பைக் இந்திய சந்தையில் ரூ. 2.15 லட்சம் தொடங்கி ரூ. 2.22 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருப்பினும், இப்பைக்கிற்கு இந்திய அட்வென்சர் பைக் பிரியர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மலிவு விலையில் விற்கப்படும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பைக்குகள்... விலையில மட்டும் இல்ல ஓட்டுறதுக்கும் ஃப்ரெண்ட்லியா இருக்கும்!

இந்த பைக்கில் 411 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 24.31 பிஎஸ் பவரையும், 32 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் இப்பைக் காட்சியளித்தாலும், பயன்பாட்டின் மிகவும் ஃப்ரெண்ட்லியாக இந்த பைக் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Here is list top five affordable adv bikes in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X